Welfare · completed claimed

Baby friendly toilets at anganwadis

2 budgets named it 5 year span 36 ₹ crore allocated 30 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2012-13 Rs.36.44 crores continuation AIADMK

“the Government sanctioned Rs.36.44 crores for taking up the construction of 20,244 baby friendly toilets.”
“அங்கன்வாடி மையங்களை சீர்படுத்தி மேம்படுத்துவதில்‌ இந்த அரசு தனிக்‌ கவனம்‌ செலுத்தி வருகின்றது. நடப்பு நிதியாண்டில்‌ சிறிய அளவில்‌ சீரமைப்பு தேவைப்பட்ட 9,873 அங்கன்வாடி மையங்களில்‌ பணிகள்‌ எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில்‌ 6,202 அங்கன்வாடி மையங்களில்‌ 39.14 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பெரிய அளவிலான சீரமைப்புப்‌ பணிகளை மேற்கொள்ளவும்‌, 20,558 அங்கன்வாடி மையங்களில்‌ 12.34 கோடி ரூபாய்‌ செலவில்‌ மின்‌ விசிறி, குழல்விளக்கு வசதிகளுடன்‌ மின்சார இணைப்பு வசதிகள்‌ ஏற்படுத்துவதற்கும்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன. இது தவிர, குழந்தைகள்‌ பயன்படுத்தக்கூடிய 20,244 கழிப்பறைகள்‌ கட்டுவதற்கு 36.44 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்திற்கு 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 1217.97 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதியோர்‌, ஆதரவற்றோர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.77 · ¶122 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.29.52 crores completion claim project cost AIADMK · interim

“16,402 Baby Friendly Toilets at a cost of Rs.29.52 crores”
“அங்கன்வாடி மையங்களில்‌ புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும்‌, குழந்தைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும்‌, 601.91 கோடி ரூபாய்‌ செலவில்‌ 15,313 புதிய அங்கன்வாடி மையங்களைக்‌ கட்டியும்‌, 29.52 கோடி ரூபாய்‌ செலவில்‌ குழந்தைகள்‌ பயன்படுத்துவதற்கு உகந்த 16,402 கழிவறைகளை அமைத்தும்‌, 12.34 கோடி ரூபாய்‌ செலவில்‌ 20,558 மையங்களுக்கு மின்‌ இணைப்பு வழங்கியும்‌, 123.93 கோடி ரூபாய்‌ செலவில்‌ 15,399 மையங்களை பழுது பார்த்தும்‌, இம்மையங்களின்‌ தரத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளது. ஒரு சிறப்பு முயற்சியாக 27.35 கோடி ரூபாய்‌ செலவில்‌ 45,211 அங்கன்வாடி மையங்களுக்கும்‌ சமையல்‌ எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதன்‌ மூலம்‌ அனைத்து அங்கன்வாடி மையங்களிலும்‌ இந்த வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1696 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.56 · ¶88 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector