Transport · recurring

Chennai Metro extension (Airport to Kilambakkam)

4 budgets named it 6 year span — ₹ crore allocated 9,335 ₹ crore whole-project cost DMK / TVK governments

First announced in 2021-22 and named again in 3 later budgets, most recently 2026-27. Places named: Tambaram.

Allocated by budget year

Located at Tambaram · Chengalpattu district

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2021-22 new project DMK · revised

“In parallel, this Government will speedily take up the extension of the metro rail project from Airport to Kilambakkam Bus Terminus via Tambaram.”
“சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்திற்கான கட்டுமானப்பணிகள்‌ முழு வீச்சில்‌ தொடங்கப்பட்டுள்ளது. என்பதை இந்த மன்றத்திற்கு தெரிவிப்பதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. ஒன்றிய நிதி அமைச்சரின்‌ வரவு-செலவுத்‌ கிட்ட உரையில்‌ ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டவாறு, சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்திற்கு பங்கு மூலத்தனத்திற்கான விரைந்த முறையான ஒப்புதலை வழங்குமாறும்‌ அதற்கு இணையான ஒன்றிய அரசின்‌ பங்கினை விரைந்து வழங்குமாறும்‌ ஒன்றிய அரசினை இந்த அரசு வலியுறுத்தும்‌. மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ கோடம்பாக்கம்‌ முதல்‌ பூந்தமல்லி புறவழித்தடத்திற்கான சேவைகள்‌, 2025 ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதத்தில்‌ அதாவது நான்கு ஆண்டுகளுக்குள்‌ தொடங்கும்‌. மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ மொத்த இரண்டாம்‌ கட்டமும்‌ 2026 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதத்திற்குள்‌ முடிக்கப்படும்‌, அதே நேரத்தில்‌, மெட்ரோ ரயில்‌ திட்டத்தை, தாம்பரம்‌ வழியாக விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம்‌ பேருந்து முனையம்‌ வரை நீட்டிக்கும்‌ பணியை இந்த அரசு விரைவாகத்‌ தொடங்கும்‌. மேலும்‌, கோயம்புத்தூரில்‌ மெட்ரோ இரயில்‌ திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன்‌ கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌, மதுரையில்‌ மெட்ரோ இரயில்‌ திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள்‌ தயார்‌ செய்யப்படும்‌. எரிசக்தி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.42 · ¶94 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2024-25 Rs.4,625 crore new project project cost DMK

“A detailed project report for extending the metro rail route from Chennai Airport till Kalaignar Centenary Bus Terminus in Kilambakkam, at a cost of Rs.4,625 crore, has been prepared and will be submitted shortly to the Union Government for approval on equity sharing basis.”
“சென்னை மெட்ரோ இரயில்‌ வழித்தடத்தை சென்னை விமான நிலையத்தில்‌ இருந்து கிளாம்பாக்கத்தில்‌ உள்ள கலைஞர்‌ நூற்றாண்டு பேருந்து முனையம்‌ வரை நீட்டிப்பதற்கான விறிவான திட்ட அறிக்கை 4,625 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பெறப்பட்டு, ஒன்றிய அரசின்‌ மூலைனப்‌ பங்களிப்பிற்காக ஒப்புதல்‌ கோரப்பட உள்ளது. மேலும்‌, கோயம்பேடு முதல்‌ ஆவடி வரையிலும்‌, பூந்தமல்லி முதல்‌ பரந்தூர்‌ வரையிலுமான இரண்டாம்‌ கட்டத்தின்‌ நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள்‌ தயாரிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.61 · ¶131 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.9,335 crore new project project cost DMK

“for extending the Chennai Airport metro line to Kalaignar Centenary Bus Terminus in Kilambakkam, covering 15.46 km at a cost of Rs.9,335 crore”
“மேலும்‌, சென்னை மெட்ரோ இரயில்‌ வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞர்‌ நூற்றாண்டு பேருந்து முனையம்‌ வரையிலான 15.46 கி.மீ. தூரத்திற்கு 9,335 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌, கோயம்பேடு முதல்‌ ஆவடி வழியாக பட்டாபிராம்‌ வரையிலான 2176 கி.மீ. தூரத்திற்கு 9,744 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌ மற்றும்‌ பூந்தமல்லியிலிருந்து திருப்பெரும்புதூர்‌ வழியாக சுங்குவார்சத்திரம்‌ வரையிலான 279 கி.மீ. தூரத்திற்கு 8779 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌ நீட்டித்திடும்‌ வகையில்‌, விரிவான திட்ட அறிக்கைகள்‌ பெறப்பட்டுள்ளன. இவ்விரிவான திட்ட அறிக்கைகள்‌ ஒன்றிய அரசின்‌ மூலதனப்‌ பங்களிப்பினைப்‌ பெறுவதற்காக விரைவில்‌ அனுப்பப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶152) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.67 · ¶152 · source PDF ↗ · on the map →

2026-27 new project TVK · revised

“The following Metro Rail projects, recommended by the Government, are under the active consideration of the Government of India: (i). Chennai Airport to Kilambakkam”
“மாநில அரசால்‌ பரிந்துரைக்கப்பட்ட பின்வரும்‌ மெட்ரோ இரயில்‌ திட்டங்கள்‌ இந்திய அரசின்‌ தீவிர பரிசீலனையின்‌ கீழ்‌ உள்ளன. (i). சென்னை விமான நிலையம்‌ முதல்‌ கிளாம்பாக்கம்‌ வரை. (ii). ஆவடி வழியாக கோயம்பேடு முதல்‌ பட்டாபிராம்‌ வரை. ப). திருப்பெரும்புதூர்‌ வழியாக பூந்தமல்லி முதல்‌ சுங்குவார்சத்திரம்‌ வரை மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல்‌ மெட்ரோ இரயில்‌ வழித்தடத்‌ திட்டங்களுக்கு இந்திய அரசு விரைவான ஒப்புதல்‌ வழங்குவதற்குத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளும்‌ துறையால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌, கிருஷ்ணகிரி மாவட்டம்‌ ஓதூரிலிருந்து கர்நாடகா மாநிலம்‌ பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ காயில்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு மற்றும்‌ கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும்‌ இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. நீர்வளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.60 · ¶121 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector