Welfare · dormant

Comprehensive accident cum life insurance scheme for BPL families

3 budgets named it 3 year span 500 ₹ crore allocated AIADMK government

First announced in 2019-20 and named again in 2 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2019-20 Rs.250 crore new project AIADMK

“I am glad to announce that this Government will launch a comprehensive accident cum life insurance scheme, covering all Below Poverty Line (BPL) families, which will substantially increase the compensation to Rs.2 lakh and Rs.4 lakh for natural death and death due to accident respectively and Rs.1 lakh for permanent disability. A sum of Rs.250 crore has been provided for payment of premium under this scheme.”
““உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ உள்ள பயனாளிகளுக்கு இந்த அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ இதுவரை 3.14 இலட்சம்‌ பயனாளிகளுக்கு 251.89 கோடி ரூபாய்‌ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்து நிவாரணத்‌ திட்டமும்‌, நலிந்தோர்‌ நிவாரணத்‌ திட்டமும்‌, ஏழை எளிய மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும்‌, இத்திட்டங்களின்‌ கீழ்‌, பொருள்‌ ஈட்டுபவர்‌ இறப்பின்போது 20,000 ரூபாய்‌ மட்டுமே இழப்பீட்டுத்‌ தொகையாக வழங்கப்பட்டு வருவதால்‌, அது உயர்த்தப்பட வேண்டிய அவசியம்‌ உள்ளது. எனவே, வறுமைக்‌ கோட்டிற்கு கீழ்‌ வாழும்‌ அனைத்துக்‌ குடும்பங்களுக்கும்‌ பயனளிக்கும்‌ வகையில்‌, விரிவான விபத்து மற்றும்‌ ஆயுள்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ ஒன்றை இந்த அரசு விரைவில்‌ அறிமுகப்படுத்தும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்திட்டத்தின்‌ மூலம்‌, இயற்கை மரணம்‌ மற்றும்‌ விபத்தால்‌ ஏற்படும்‌ மரணத்தின்போது வழங்கப்படும்‌ இழப்பீட்டுத்‌ தொகை, முறையே இரண்டு இலட்சம்‌ ரூபாய்‌ மற்றும்‌ நான்கு இலட்சம்‌ ரூபாயாகவும்‌, விபத்தால்‌ ஏற்படும்‌ நிரந்தர ஊனத்திற்காக வழங்கப்படும்‌ இழப்பீட்டுத்‌ தொகை ஒரு இலட்சம்‌ ரூபாயாகவும்‌ உயர்த்தப்படும்‌. இத்திட்டத்திற்கான காப்பீட்டுக்‌ கட்டணத்‌ தொகைக்கு 250 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்திற்காக 169.81 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்‌ துறைக்கு மொத்தமாக 6,106.95 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶15) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.10 · ¶15 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.250 crore new project AIADMK

“This scheme will be launched shortly. In the Budget for 2020-21, a provision of Rs.250 crore has been made for the scheme.”
“கடந்த வருட வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நான்‌ அறிவித்ததின்படி, இந்திய ஆயுள்‌ காப்பீட்டுக்‌ கழகத்துடன்‌ (LIC) இணைந்து, வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள அனைத்துக்‌ குடும்பங்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ செயல்படுத்தப்பட உள்ள, புரட்சித்‌ தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும்‌ ஆயுள்‌ காப்பீட்டுத்‌ திட்டத்திற்கான” விரிவான வழிகாட்டி நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளன. இயற்கை மரணங்களில்‌, தற்போது வழங்கப்படும்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்திற்கான இழப்பீட்டுத்‌ தொகை இரண்டு இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. விபத்துகளால்‌ ஏற்படும்‌ உயிரிழப்புகளில்‌, உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்திற்கான இழப்பீட்டுத்‌ தொகை நான்கு இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. விபத்தினால்‌ நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித்தொகை இரண்டு இலட்சம்‌ ரூபாய்‌ வரையும்‌ கணிசமாக உயர்த்தி வழங்கப்படும்‌. இத்திட்டம்‌, விரைவில்‌ அறிமுகப்படுத்தப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆயுள்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ மூலம்‌, பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும்‌ விபத்து நிவாரணத்‌ திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 200.82 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டுடன்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பேரிடர்‌ மேலாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.13 · ¶21 · source PDF ↗ · on the map →

2021-22 new project AIADMK · interim

“the Hon’ble Puratchi Thalaivi Amma Comprehensive Accident cum Life Insurance Scheme with full State Government funding has been launched in association with the Life Insurance Corporation and United India Insurance Company. 55.67 lakh Below Poverty Line (BPL) families in Tamil Nadu, will be eligible for insurance coverage of Rs.2 lakh in case of natural death of the breadwinner, and Rs.4 lakh in case of accidental death and upto Rs.2 lakh in case of permanent incapacitation of the breadwinner.”
““புரட்சித்‌ தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும்‌ ஆயுள்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தை' இந்திய ஆயுள்‌ காப்பீட்டு நிறுவனம்‌ மற்றும்‌ யுனைட்டெட்‌ இந்தியா காப்பீட்டு நிறுவனங்களுடன்‌ இணைந்து, மாநில அரசு துவக்கி வைத்துள்ளது என்பதை இந்த அவைக்குத்‌ தெரிவிப்பதில்‌ நான்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. இத்திட்டத்திற்கான முழு நிதியையும்‌ மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்‌. தமிழ்நாட்டில்‌ வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள 55.67 இலட்சம்‌ தகுதியான குடும்பங்களுக்கு, குடும்பத்‌ தலைவரின்‌ இயற்கை மரணத்திற்கு 2 இலட்சம்‌ ரூபாய்‌ காப்பீட்டுத்‌ தொகை வழங்கப்படும்‌. மேலும்‌, குடும்பத்‌ தலைவரின்‌ விபத்து மரணத்திற்கு 4 இலட்சம்‌ ரூபாய்‌ காப்பீட்டுத்‌ தொகையும்‌, நிரந்தர இயலாமைக்கு 2 இலட்சம்‌ ரூபாய்‌ காப்பீட்டுத்‌ தொகையும்‌ வழங்கப்படும்‌. பேரிடர்‌ மேலாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.21 · ¶29 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector