Fisheries · dormant
Construction of groynes at Neerody, Marthandanthurai and Villavilai
1 budget named it 1 year span 116 ₹ crore allocated AIADMK government 1 district
First announced in 2019-20 and not named in any budget since. Districts: kanyakumari.
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2019-20 Rs.116 crore
“besides sanctioning Rs.116 crore for the construction of groynes at Neerody, Marthandanthurai and Villavilai in Kanyakumari district.”
“மீனவர்களின் நலனைப் பேணவும், தமிழ்நாட்டில் மீனளத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. மீன்பிடி தடைக்காலத்திலும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்திலும் வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 170.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாக் விரிகுடா பகுதியில் 2,000 இழுவலை மீன்பிடிப் படகுகளை 1600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து உரிய மாற்றம் செய்வதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, 500 இழுவலைப் படகுகளை, தூண்டில் மற்றும் செவுள்வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளாக மாற்றிட மொத்தம் 286 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் மற்றும் குந்துக்கல் ஆகிய இடங்களில் 185 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் 148 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மூக்கையூர் மற்றும் பூம்புகார் துறைமுகங்களில் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. குந்துக்கல் மீன்பிடி துறைமுகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இது தவிர 420 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுவதற்கும் இந்த அரசு அனுமதி அளித்துள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டத்துறை மற்றும் வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை 116 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.24 · ¶39 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Fishing ban period relief assistance · 8 years
- Twelve Fish Landing Centres · 6 years
- Deep sea fishing conversion scheme · 6 years
- Fishing harbour, Mookaiyur · 4 years
- Fishing harbour, Poompuhar · 4 years
- Fish Processing Parks · 3 years