Police & justice · dormant

Evening and holiday courts

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2011-12 policy DMK · interim

“Accepting the recommendations of the Thirteenth Finance Commission, evening courts and holiday courts have been set up to systematically reduce the pending court cases.”
“நீதியரசர்‌ பத்மநாபன்‌ கமிட்டி பரிந்துரையின்படி சார்பு நீதிமன்ற நீதிபதிகள்‌ மற்றும்‌ ஓய்வுபெற்ற நீதிபதிகளின்‌ ஊதியம்‌, ஓய்வூதியம்‌ மற்றும்‌ இதர படிகள்‌ அனைத்தும்‌ உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களின்‌ கட்டமைப்புகளை வலுப்படுத்த கடந்த ஐந்தாண்டுகளில்‌ 302 கோடி ரூபாய்‌ ஒப்பளிக்கப்பட்டுள்ளது. 119 புதிய நீதிமன்றங்கள்‌ தொடங்கப்பட்டுள்ளன. பதின்மூன்றாவது நிதிக்‌ குழுவின்‌ பரிந்துரைப்படி மாலை நேர நீதிமன்றங்கள்‌ மற்றும்‌ விடுமுறை நாள்‌ நீதிமன்றங்கள்‌ அமைக்கப்பட்டு, நிலுவையிலுள்ள வழக்குகளைக்‌ கணிசமாகக்‌ குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்‌ பயனாக மாநிலத்தில்‌ நீதி நிருவாகம்‌ சிறப்பாகவும்‌, நிருவாக அமைப்புகளுடன்‌ சுமுகமான முறையில்‌ இணைந்தும்‌ செயல்பட்டு வருகிறது. நீதி நிருவாகத்திற்காக இந்த இடைக்கால வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ரூபாய்‌ 633 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்‌ நிருவாகம்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கான வருவாய்க்‌ கணக்கு செலவுகள்‌ ரூபாய்‌ 78,443 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2010-2011 15. 16. முடிவு 17. ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 4.45 சதவீதம்‌ அதிகமாகும்‌. இந்த அரசு அறிவித்திருந்த இலவச வண்ணத்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டி வழங்கும்‌ திட்டம்‌ போன்ற சில பெரிய திட்டங்கள்‌ இறுதிக்‌ கட்டத்தை எட்டியுள்ளதால்‌, இந்த இடைக்கால வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மதிப்பிடப்பட்டுள்ள வருவாய்க்‌ கணக்கில்‌ செலவுகளின்‌ மிதமான வளர்ச்சியே காணப்படுகிறது. இது, திருத்த வரவு-செலவுத்‌ திட்டத்தின்போது அதிகரிக்கும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்‌ காரணமாக வருவாய்க்‌ கணக்கில்‌ செலவுகள்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 12.5 சதவீதமாகவும்‌ 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ 13 சதவீதமாகவும்‌ அதிகரிக்கும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, சம்பளம்‌ மற்றும்‌ ஒய்வூதியம்‌ குறித்த செலவுகள்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கில்‌ 49 சதவீதமாகும்‌. மாநில அரசின்‌ சொந்த வரி வருவாயின்‌ சதவீதத்தைப்‌ பொறுத்த வரையில்‌ இது 72 சதவீதமாக இருக்கும்‌. 2005-2006 ஆம்‌ ஆண்டு மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 13.54 சதவீதமாக இருந்த வட்டி செலுத்தும்‌ விகிதம்‌ 2010-2011 மற்றும்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டுகளில்‌ முறையே 11.07 மற்றும்‌ 11.18 சதவீதமாக குறையும்‌. இந்த அரசு, பொருளாதார மந்தநிலையைச்‌ சமாளித்து, பணியாளர்களுக்காக ஆறாவது ஊதியக்குழுவின்‌ பரிந்துரைகளைச்‌ செயல்படுத்தியபோதிலும்‌, கடந்த ஐந்தாண்டுகளில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை மற்றும்‌ நிதிப்பற்றாக்குறை குறித்து மத்திய அரசு நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும்‌ எய்தியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶14) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.47 · ¶14 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector