Welfare · dormant

Free sarees and dhoties (Pongal)

9 budgets named it 11 year span 3,494 ₹ crore allocated 269 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 269 crores transfer scheme AIADMK · revised

“During Pongal 2012, it is proposed to distribute 159.04 lakh sarees and 158.19 lakh dhoties to eligible beneficiaries, for which a sum of ` 269 crores has been provided in the Revised Budget Estimates 2011-2012.”
“ஒவ்வோர்‌ ஆண்டும்‌ தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ திருநாளை ஒட்டி இலவச வேட்டி-சேலைகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்‌ மூலம்‌ வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ளவர்கள்‌ பயன்பெறுவதோடு அல்லாமல்‌, கைத்தறி, விசைத்தறித்‌ தொழில்களில்‌ ஈடுபட்டுள்ளோருக்கும்‌ வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. வரும்‌ 2012 ஆம்‌ ஆண்டு பொங்கல்‌ திருநாளையொட்டி 159.04 இலட்சம்‌ சேலைகளும்‌ 158.19 இலட்சம்‌ வேட்டிகளும்‌ பயனாளிகளுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 2011-2012 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவுத்‌ திட்டமதிப்பீட்டில்‌ 269 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.60 · ¶98 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 ` 269 crores transfer scheme project cost DMK · interim

“During 2010-2011, sarees to 159.04 lakh beneficiaries and dhotis to 158.19 lakh beneficiaries at a cost of ` 269 crores were distributed.”

tnbudget_2011-12_speech_en_interim · p.47 · ¶17 · source PDF ↗ · on the map →

2012-13 Rs.269 crores continuation AIADMK

“This scheme will be implemented in the coming financial year also with an outlay of Rs.269 crores.”
“நெசவாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு அளித்திடவும்‌, ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள்‌ வழங்கிடவும்‌, அரசு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம்‌ வரும்‌ நிதியாண்டில்‌ 269 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌. கைத்தறி துறைக்காக, மத்திய அரசும்‌ மாநில அரசும்‌ இணைந்து செயல்படுத்தும்‌ '*புத்துயிரூட்டுதல்‌, சீர்திருத்தம்‌ மற்றும்‌ மறுசீரமைப்புத்‌ திட்டம்‌” மாநில அரசால்‌ செயல்படுத்தப்படும்‌. கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ நெசவுப்‌ பணிக்காக கடன்‌ பெற்ற நெசவாளர்களுக்கும்‌, கூட்டுப்‌ பொறுப்பு குழுக்களுக்கும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பலன்‌ கிடைக்கும்‌. நமது மாநில சங்கங்களுக்கு இத்திட்டத்தின்‌ கீழ்‌ 548.35 கோடி ரூபாய்‌ நிதி உதவி கிடைக்கும்‌. இதில்‌ மாநில அரசின்‌ பங்கு 127 கோடி ரூபாய்‌ ஆகும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ 962 நெசவாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ மறுசீரமைக்கப்படும்‌. அரசு அலுவலர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.81 · ¶127 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.499.16 crore transfer scheme AIADMK

“The scheme for the distribution of free sarees and dhoties to support this sector will continue in 2014-2015 with an allocation of Rs.499.16 crore in the Budget Estimates.”
“மாநிலத்தின்‌ தொழில்‌ வளர்ச்சியிலும்‌ வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும்‌ ஜவுளித்‌ தொழில்‌ அளித்துவரும்‌ முக்கியப்‌ பங்களிப்பை இந்த அரசு உணர்ந்துள்ளது. இலவச வேட்டி சேலைகள்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 499.16 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்து, இத்துறைக்கு அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அத்துடன்‌, கைத்தறித்‌ தொழிலுக்கான தள்ளுபடிச்‌ சலுகைக்காக 78 கோடி ரூபாயும்‌, கதர்‌ அமைப்புகளுக்காக 10 கோடி ரூபாயும்‌ 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.36 · ¶71 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.499.16 crores continuation AIADMK

“This scheme will be continued in 2015-2016 also with a budgetary allocation of Rs.499.16 crores.”
“வேளாண்‌ துறைக்கு அடுத்தபடியாக நமது மாநிலத்தில்‌ அதிகமான வேலைவாய்ப்புகளை கைத்தறி மற்றும்‌ நெசவுத்‌ தொழில்‌ அளித்து வருகிறது. பொங்கல்‌ திருநாளின்போது விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கும்‌ திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஏழை எளியோரின்‌ தேவைகளை நிறைவு செய்வதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும்‌, விசைத்தறி நெசவாளர்களுக்கும்‌ வேலைவாய்ப்பை இத்திட்டம்‌ அளித்து வருகிறது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 499.16 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, கைத்தறித்‌ துணிகளின்‌ விற்பனையை ஊக்குவிப்பதற்கான தள்ளுபடி மானியத்‌ திட்டத்தையும்‌ தொடர்ந்து செயல்படுத்த 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 78.45 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.40 · ¶63 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.487.45 crores transfer scheme AIADMK · revised

“An amount of Rs.487.45 crores and Rs.78.45 crores for Free Distribution of Dhoties and Sarees Scheme and Rebate Subsidy Scheme respectively have been included in this Revised Budget.”

tnbudget_2016-17_speech_en_revised · p.44 · ¶86 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.490 crore transfer scheme AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.490 crore has been provided for the ‘Free Distribution of Sarees and Dhoties’ scheme.”

tnbudget_2017-18_speech_en · p.47 · ¶82 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.490.45 crore continuation AIADMK

“A sum of Rs.490.45 crore has been provided for implementation of the scheme of 'Free Distribution of Sarees and Dhoties' in 2018-2019 to ensure continuous employment to handloom weavers in the State.”
“கைத்தறி நெசவாளர்களுக்குத்‌ தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ “விலையில்லா சேலைகள்‌, வேட்டிகள்‌ வழங்கும்‌ திட்டத்தைச்‌” செயல்படுத்துவதற்காக, 490.45 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, சந்தைப்படுத்துதலுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதால்‌, கைத்தறித்‌ துறைக்கு ஏற்படும்‌ பாதிப்பைத்‌ தவிர்க்க, தள்ளுபடி மானியத்‌ திட்டத்திற்கான ஒதுக்கீட்டை இந்த அரசு அதிகரித்துள்ளது. கைத்தறி நெசவுக்கு மேலும்‌ ஆதரவு அளிக்கும்‌ வகையில்‌, உற்பத்திப்‌ பொருட்களில்‌ புதுமை முயற்சிகளையும்‌, பல்வகைப்படுத்துதலையும்‌ ஊக்குவிக்கும்‌ வகையில்‌ நிதியுதவி அளிக்க *கைத்தறி உதவித்‌ திட்டம்‌” என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும்‌. கைத்தறி துணி விற்பனை மீதான தள்ளுபடி மானியத்‌ திட்டத்திற்கான ஒதுக்கீடு 80 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதுடன்‌, கைத்தறி உதவித்‌ திட்டத்திற்கு 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 40 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும்‌ ஆயத்த ஆடை தொழில்களை ஊக்குவித்து, நிலைக்கத்தக்க வகையில்‌ வலுப்படுத்தி மேம்படுத்திட ஒரு 'புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்‌ கொள்கையினை' அரசு விரைவில்‌ வெளியிடும்‌. வளர்ந்து வரும்‌ தொழில்நுட்ப ஜவுளி துணிகளை (Technical Textiles) தயாரிக்கும்‌ நிறுவனங்கள்‌ போன்று, புதிய உற்பத்தி முயற்சியில்‌ ஈடுபடும்‌ நிறுவனங்களை ஊக்குவிக்கவும்‌, ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும்‌ உரிய உத்திகளுடன்‌ இந்தப்‌ புதிய கொள்கை வடிவமைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.45 · ¶73 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.490.20 crore continuation AIADMK

“The scheme of free distribution of sarees and dhoties to poor families will continue and in the Budget Estimates 2019-2020, Rs.490.20 crore has been allocated for this scheme.”

tnbudget_2019-20_speech_en · p.58 · ¶105 · source PDF ↗ · on the map →

2021-22 continuation AIADMK · interim

“The scheme of supply of free sarees and dhoties to the poor continues to be implemented to provide continuous employment to handloom and powerloom weavers in the State.”

tnbudget_2021-22_speech_en_interim · p.72 · ¶115 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector