Welfare · dormant

Free uniforms and shoes for ITI trainees

1 budget named it 1 year span 5 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 4.6 crores transfer scheme AIADMK · revised

“Every year two sets of uniform and a pair of shoes will be supplied free of cost to each trainee. A sum of ` 4.6 crores will be provided for this purpose.”
“தற்போது தமிழ்நாட்டில்‌ 62 அரசு தொழிற்‌ பயிற்சி நிலையங்கள்‌ உள்ளன. தமிழ்நாட்டில்‌ திறன்‌ மிகுந்த தொழிலாளர்களின்‌ தேவை அதிக அளவில்‌ உள்ளதால்‌ இத்தகைய பயிற்சி மையங்கள்‌ அரசின்‌ சார்பில்‌ கூடுதலாகத்‌ தொடங்கப்பட வேண்டியுள்ளன. இந்த ஆண்டு 10 புதிய தொழிற்‌ பயிற்சி நிலையங்கள்‌ தொடங்கப்படும்‌. இத்தகைய பயிற்சி நிலையங்கள்‌ இல்லாத ஒவ்வொரு வட்டங்களிலும்‌ ஒரு தொழிற்‌ பயிற்சி நிலையத்தைத்‌ தொடங்க வேண்டும்‌ என்பதே இந்த அரசின்‌ நோக்கமாகும்‌. அரசு தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ மின்னணு பாடமுறை, பணிச்சூழலின்‌ மாதிரி அடிப்படையிலான பயிற்சி (Simulator 88560 Training) போன்றவற்றின்‌ மூலம்‌ மாணவர்களின்‌ அறிவுத்திறன்‌ மேம்படுத்தப்படும்‌. அரசு தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ பலர்‌ ஏழை எளிய மாணவ மாணவியர்கள்‌ என்பதால்‌ அவர்களுக்கு ஆண்டுதோறும்‌ இரண்டு சீருடைகளும்‌, ஒரு செட்‌ காலணியும்‌ இலவசமாக வழங்கப்படும்‌. இதற்கென 4.6 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌. இத்தகைய பயிற்சி பெறும்‌ மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்‌, பொதுமக்களிடையே இம்மாணவர்கள்‌ பற்றிய உயர்வான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும்‌ அப்பயிற்சி நிலையங்களிலிருந்து தேர்ச்சி பெற்று வெளிவரும்‌ மாணவர்களுக்கு அரசு முத்திரையுடன்‌ கூடிய திறன்‌ அடையாள அட்டை வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.38 · ¶60 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector