Education · dormant

Government Engineering College, Bodinayakkanur

2 budgets named it 2 year span ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13. Districts: theni. Places named: Bodināyakkanūr.

Allocated by budget year

Located at Bodināyakkanūr · Theni district

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“the Hon’ble Chief Minister has ordered to start a new Government Engineering College at Bodinayakkanur in Theni District.”
“அனைவருக்கும்‌ எளிதில்‌ கிடைக்கக்கூடிய தரமான உயர்‌ கல்வியை வழங்குவதே இந்த அரசின்‌ குறிக்கோளாகும்‌. உலகத்‌ தரம்‌ வாய்ந்த ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பட்ட வசதிகளுடன்‌ கூடிய உயர்கல்வி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே இந்த அரசின்‌ விருப்பமாகும்‌. நலிவடைந்த பிரிவைச்‌ சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கும்‌, கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும்‌ உயர்‌ கல்வி வசதி மேலும்‌ கிடைக்கச்‌ செய்ய மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்தை அடையும்‌ வகையில்‌ குறைந்தபட்ச தகுதியாக அகில இந்திய தொழில்நுட்பக்‌ கல்விக்‌ குழுமம்‌ (AICTE) குறிப்பிட்டுள்ள அளவுகோலிலிருந்து மாறுபட்டு அக்குறியீடுகளைத்‌ தளர்த்தி பின்பற்ற இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்‌ மூலம்‌ நலிவடைந்த பிரிவைச்‌ சேர்ந்த மாணவ மாணவியர்களும்‌ கிராமப்புற மாணவ மாணவியர்களும்‌ உயர்கல்வியைப்‌ பெருமளவில்‌ பெற முடியும்‌. இத்தகைய தளர்த்தப்பட்ட குறியீடுகளைப்‌ பின்பற்றும்படி மாண்பமை உயர்‌ நீதிமன்றமும்‌ இந்த மாநிலத்திற்கு ஓர்‌ இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது என்பதை நான்‌ மகிழ்ச்சியுடன்‌ குறிப்பிட விரும்புகிறேன்‌. தருமபுரி மாவட்டத்தில்‌ அரூர்‌, பாப்பிரெட்டிப்பட்டி - தூத்துக்குடி மாவட்டத்தில்‌ நாகலாபுரம்‌; விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ கள்ளக்குறிச்சி; நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ வேதாரண்யம்‌; வேலூர்‌ மாவட்டத்தில்‌ திருப்பத்தூர்‌; திருவாரூர்‌ மாவட்டத்தில்‌ திருத்துறைப்பூண்டி, நன்னிலம்‌; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ நெம்மேலி; விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ சாத்தூர்‌; திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ என பதினோறு இடங்களில்‌ புதிதாக அரசு கலை-அறிவியல்‌ கல்லூரிகளை அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சமீபத்தில்‌ தொடங்கி வைத்தார்கள்‌. தேனி மாவட்டத்தில்‌ போடிநாயக்கனூரில்‌ அரசு பொறியியல்‌ கல்லூரி ஒன்றை புதிதாகத்‌ தொடங்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஒப்புதல்‌ வழங்கியுள்ளார்கள்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. தொழிற்கல்வி பயிலும்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ கல்விக்‌ கட்டணம்‌ இந்த அரசால்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ இதற்காக, 280 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.52 · ¶85 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 new project AIADMK

“The establishment of a new engineering college at Bodinayakkanur in Theni District; an Indian Institute of Information Technology, and a National Law School in Srirangam are under progress.”
“உயர்‌ கல்வியிலும்‌, உயர்‌ ஆராய்ச்சியிலும்‌ முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்‌ என்பதே நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ பேரவா. ஏழைகளுக்கும்‌ உயர்‌ கல்வி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 11 புதிய கலை, அறிவியல்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்பட்டன. தேனி மாவட்டம்‌ போடிநாயக்கனூரில்‌ புதிய பொறியியல்‌ கல்லூரி, ஸ்ரீரங்கத்தில்‌ தேசிய தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனம்‌, தேசிய சட்டப்‌ பள்ளி ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. நமது பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அவற்றை நேர்த்திமிகு மையங்களாகவும்‌, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைக்கும்‌ மையங்களாகவும்‌ மாற்றுவதற்கான முயற்சிகள்‌ தொடரும்‌. இத்தகைய புதுமைகளை உருவாக்கும்‌ பணிகளில்‌ ஈடுபடுவதற்கு, தொழில்‌ துறையினரோடு இணைந்து செயல்பட இப்பல்கலைக்கழகங்கள்‌ ஊக்குவிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.60 · ¶94 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector