Health · dormant
Government Medical College, Cuddalore (Annamalai University takeover)
2 budgets named it 2 year span — ₹ crore allocated AIADMK / DMK governments 1 district
First announced in 2020-21 and named again in 1 later budget, most recently 2021-22. Districts: cuddalore. Places named: Cuddalore, Villupuram, Kallakurichi, Mayiladuthurai.
Allocated by budget year
Located at Cuddalore · Cuddalore district
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2020-21
“The Government will take over the medical college attached to Annamalai University and this would be the Government Medical College in Cuddalore district.”
“தரமான தமிழ்நாட்டு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதற்கானமுக்கியக் காரணம் ஆவர். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் கனவாகும். நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தளராத முயற்சிகளின் விளைவாக, முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை 3,575 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி பெற்றுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்றுக்கொண்டு, அது, கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.72 · ¶128 · source PDF ↗ · on the map →
2021-22
“The decision to make Raja Muthiah Medical College as the Government Medical College for Cuddalore district and Annamalai University an affiliating university for Cuddalore, Villupuram, Kallakurichi and Mayiladuthurai districts will ease the financial crisis of Annamalai University and better serve the people.”
“ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான இணைவு வழங்கும் பல்கலைக்கழகமாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும். மூலதனக் கணக்கு 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மூலதனச் செலவினத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 43,170.61 கோடி ரூபாயைக் காட்டிலும் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 42,180.97 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும் 2.29 சதவீதம் குறைவாக உள்ளது. இது 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 10.0 சதவீதமாக மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூலதனச் செலவினம் மற்றும் நிகர கடன்களும் முன்பணங்களும் உள்ளிட்ட மூலதன கணக்கிற்கான செலவினம் 2022-23 ஆம் ஆண்டு 46,699.07 கோடி ரூபாயாகவும் 2023-24 ஆம் ஆண்டு 51838.98 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நிதி ஒழுக்கத்தை பராமரிக்கும் அதே வேலையில் வளர்ச்சிக்கான செலவினங்களை தொடர்ந்து அதிகரிப்பதில் இந்த அரசு கொண்டுள்ள உறுதி இதன் மூலம் தெரியவருகிறது IV. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 58,692.68 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை தொகையான 41,417.30 கோடி ரூபாயைக் காட்டிலும் அதிகமானதாகும். வருவாய்ப் பற்றாக்குறையை முறையாக குறைப்பதன் மூலம் வருவாய்ப் பற்றாக்குறை இல்லாத நிலையை அடைவதற்கும், தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் கூறப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி, நிதிநிலை மேம்பாடு மற்றும் கடன் தாங்குதன்மையை உறுதி செய்யும் வகையிலும் இடைக்கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையே சமன்நிலையை பேணுவதன் மூலம் இந்த நிலையை அடைய எண்ணப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் ஆதாரங்களை மேம்படுத்த தேவையான வழிமுறைகளை ஆராய முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வளர்ச்சிக்கான செலவினங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்வது மற்றும் வருவாய் செலவினங்களை சரியான முறையில் பயன்படுத்தும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு செலவினங்களுக்குரிய தரத்தை மேம்படுத்த எண்ணப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறைக் காட்டிலும் 2022-23 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை 36,376.03 கோடி ரூபாயாகக் குறையும். இது, 2023-24 ஆம் ஆண்டில் 27,988.01 கோடி ரூபாயாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூலதனச் செலவிற்கு அதிக இடம் தரும் வகையில் உள்ளது. 15வது நிதிக்குழு, நிதிப்பற்றாக்குறைக்கும் மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டிற்கும் உள்ள விகிதத்தை 2022-23 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும் 2023-24 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும் பராமரிப்பதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும்பொருட்டு 2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 0.5 சதவீதம் கூடுதலாக பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 4.33 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 3.49 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 2.99 சதவீதமாக இருக்கும். இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. V. கடன்கள் மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2021-22 ஆம் ஆண்டில் மாநில அரசு 92,484.50 கோடி ரூபாய் அளவிற்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதில் சரக்குகள் மற்றும் சேவைவரி இழப்பீட்டிற்கு ஈடாக மத்திய அரசால் வழங்கப்பெறும் 8,095 கோடி ரூபாய் அடங்காது. 2022 ஆம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் நாளது வரையிலான நிலுவைக் கடன், 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகைக்கு மாறாக கடனாக பெறப்பட்ட தொகை நீங்கலாக 5,77,987 கோடி ரூபாயாக இருக்கும். இது, 2021-22 ஆம் ஆண்டு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 27.05 சதவீதமாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2022-23 ஆம் ஆண்டில் 27.76 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 27.79 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. எனவே, நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடன் தாங்குதன்மை இருக்க வேண்டும் என்பது மாநில அரசின் நோக்கமாகும். VI. கடன் உத்திரவாதங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 2021 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் தேதி அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 31.08 சதவீதமாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 2.79 சதவீதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.5 சதவீதம் இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 2021 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் தேதி அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 11.83 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 1.06 சதவீதமாகவும் உள்ளது. முடிவுரை தற்போது பொருளாதார மந்தநிலை நிலவினாலும், வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வள ஆதாரங்களை கூட்டுதல் மற்றும் திறன்மிக்க வரிவசூல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக மாநிலத்தின் மொத்த வருவாயை வலுவான நிலையில் பராமரிக்க இயலும். வளர்ச்சிக்கான செலவினங்களின் மீது முதலீடு செய்யும் அதே வேளையில், நிதி சேர்ப்பு நடவடிக்கையை அடிப்படை கொள்கையாக கொண்டு, கடன் நிலைத்தன்மை மற்றும் வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையேயான நிதி சமநிலையை உறுதி செய்வதன் மூலம், தமிழ்நாடு நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையரைகளின்படி வருவாய் பற்றாக்குறையை வரும் காலங்களில் குறைக்க இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. RKKKKKKKK”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.49 · ¶111 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years