Transport · dormant

GPS-based e-ticketing in STU buses

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2012-13 new project AIADMK

“Global Positioning System (GPS) based e-ticketing system through hand-held devices will be introduced in all STU buses during 2012-2013.”
“இந்த அரசு பதவியேற்ற பின்‌, மாநிலப்‌ போக்குவரத்து நிறுவனங்களுக்கு 3,000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, இந்நிறுவனங்களின்‌ வசம்‌ உள்ள பேருந்துகளின்‌ சராசரி வயது 4.24 ஆண்டுகளாக உள்ளது. தற்போதுள்ள சேவைகளை சிறந்த முறையில்‌ தொடரவும்‌, தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களில்‌ வாகனங்களை இயக்கவும்‌, 548 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலும்‌ 3,000 புதிய பேருந்துகள்‌ வாங்கப்படும்‌. இதற்காக, இந்த அரசு 150 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும்‌, 150 கோடி ரூபாயை கடனாகவும்‌ வழங்கும்‌. மாநிலப்‌ போக்குவரத்து நிறுவனங்களிடம்‌ உள்ள பேருந்து கட்டும்‌ பணிக்கான கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்தும்‌ வகையில்‌, புதிய பேருந்துகளை உரிய கால இடைவெளியில்‌ வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்‌. நீதிமன்றங்களில்‌ பிணையில்‌ உள்ள 219 பேருந்துகளை மீட்பதற்காக, இந்நிறுவனங்களுக்குத்‌ தேவையான நிதியுதவியை ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக இந்த அரசு வழங்கும்‌. மேலும்‌, பேருந்து நடத்துனர்களின்‌ பணிச்சுமையைக்‌ குறைக்கவும்‌, பயணிகள்‌ எளிதாக பயணச்‌ சீட்டுகளை வாங்கவும்‌, புவி நிலைக்‌ காட்டி (Global Positioning System) வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களை பயன்படுத்தி மின்னணு பயணச்‌ சீட்டு வழங்கும்‌ முறை அனைத்து அரசு பேருந்துகளிலும்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ அறிமுகப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.43 · ¶67 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector