Transport · dormant

Highway patrol strengthening

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2012-13 enhancement AIADMK

“the Hon'ble Chief Minister has ordered the strengthening of the highway patrol by increasing the existing 122 patrol units to 260 patrol units by deploying an additional 69 patrol parties on National Highways and 69 patrol parties on State Highways.”
“தேசிய அளவிலான சாலை விபத்துகளில்‌ 13 சதவீதமும்‌, இறப்பு ஏற்படக்கூடிய சாலை விபத்துகளில்‌ 12 சதவீதமும்‌ தமிழகத்தில்‌ ஏற்படுகின்றன. எனவே, இதனைச்‌ சரிசெய்வதற்கான நடவடிக்கைகளுக்கு இந்த அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ சாலைப்‌ பாதுகாப்பு நிதிக்காக 40 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டது. வரும்‌ நிதியாண்டில்‌ இதனை 65 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கவும்‌ இத்தொகையில்‌ 25 கோடி ரூபாய்‌ நெடுஞ்சாலைத்‌ துறைக்காக ஒதுக்கீடு செய்யவும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. போக்குவரத்து கட்டமைப்புகள்‌, சாலை சமிக்ஞைகள்‌ ஆகியவற்றை மேம்படுத்துதல்‌, அதிக விபத்துகள்‌ ஏற்படக்கூடிய சாலைகளில்‌ உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்‌, விழிப்புணர்வு ஏற்படுத்துதல்‌, பயிற்சி அளித்தல்‌ போன்ற பணிகளுக்காக இத்தொகை செலவிடப்படும்‌. மேலும்‌, கனரக வாகன ஓட்டுநர்‌ பயிற்சிப்‌ பள்ளிகள்‌ இல்லாத 13 மாவட்டங்களில்‌, நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுநர்களின்‌ எண்ணிக்கையை அதிகரிக்க, 13 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஓட்டுநர்‌ பயிற்சி பள்ளிகள்‌ அமைக்கப்படும்‌. இது தவிர, நெடுஞ்சாலை ரோந்துப்‌ பணிகளை மேலும்‌ வலுப்படுத்த, தற்போதுள்ள 122 ரோந்துப்‌ படைகளின்‌ எண்ணிக்கையை 260-ஆக உயர்த்தி, அவற்றில்‌ 69 கூடுதல்‌ படைகளை தேசிய நெடுஞ்சாலைகளிலும்‌, 69 கூடுதல்‌ படைகளை மாநில நெடுஞ்சாலைகளிலும்‌ பயன்படுத்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌. தீயணைப்பு-மீட்புப்‌ பணிகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶24) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.17 · ¶24 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector