Welfare · completed claimed
Humanitarian aid to Sri Lanka
1 budget named it 1 year span 197 ₹ crore allocated DMK government
First announced in 2023-24 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2023-24 Rs.197 crore
“After securing the consent of the Union Government, 40,000 MT of rice, 500 MT of milk powder and 102 MT of medical supplies, worth Rs.197 crore have been sent in three ships.”
“இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி செய்வதற்கான ஒப்புதலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிடம் பெற்று, மூன்று கப்பல்களில், 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் 102 டன் மருந்துப் பொருட்கள் ஆகியன, 197 கோடி ரூபாய் செலவில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறைமற்றும் நிதிப் பற்றாக்குறை 2023.24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் கிட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 37,540.45 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரிவசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2024-25 ஆம் ஆண்டில் 18,583.12 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2025-26 ஆம் ஆண்டில் 1218.08 கோடி ரூபாய் வருவாய் உபரிக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூதைனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும். 15வது நிதிக்குழு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் நிதிப்பற்றாக்குறையின் விகிதத்தை 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கு 3.0 சதவிீதமாக மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும்பொருட்டு 202122 ஆம் ஆண்டு முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 0.5 சதவிதம் கூடுதலாக பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பிடுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 3.25 சதவிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2024-25 ஆம் ஆண்டில் 3.0 சதவிதம் மற்றும் 2025-26 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாக இருக்கும். இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. V. கடன்கள் ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் மாநில அரசு 143,197.93 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 5133179 கோடி ரூபாய் பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2024 அன்று நிலுவையில் உள்ள கடன் 7,26,028.83 கோடி ரூபாயாகும். 2023-24ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் இது 25.63 சதவிதம் ஆகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவிதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2024-25 ஆம் ஆண்டில் 25.63 சதவிதமாகவும், 2025.26 ஆம் ஆண்டில் 25.82 சதவிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இவ்வாறு, நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடன் திருப்பி டெலுத்துவதற்கான திறனை எய்த அரசு திட்டமிட்டுள்ளது. VL கடன் உத்திரவாதங்கள் ஒவ்டுவாரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் தேதி அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 44.33 சதவிதமாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 4.22 சதவிதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவிதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.5 சதவிதம் இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் தேதி அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 1148 சதவிதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 106 சதவிதமாகவும் உள்ளது. முடிவுரை தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது, நமக்கு சாதகமானதாகும். நமது உயர் வளர்ச்சி வீதம் வரும் காலங்களிலும் தொடரும். எனினும், பலராலும் எதிர்பார்க்கப்படும் உலகப் பொருளாதார மந்தநிலையால், தேசிய மற்றும் மாநில வளர்ச்சி விதங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளது. நிதி ஆதாரங்களை கூட்டுதல் மற்றும் திறன்மிக்க வரிவசூல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக மாநிலத்தின் மொத்த வருவாயை உயர்த்த முடியும். வளர்ச்சித் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் அதே வேளையில், நிதி ஒருங்கிணைப்பை அடிப்படை கொள்கையாக கொண்டு, தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையறைகளின்படி வருவாய் பற்றாக்குறையை அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் முற்றிலும் குறைக்க இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. RRERERERE”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶17) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.8 · ¶17 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Relief material to war-affected Sri Lankan Tamils · 2011-12
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years