Welfare · completed claimed
Integrated Special Homes (aged and destitute children)
2 budgets named it 2 year span — ₹ crore allocated 10 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12
“This Government will ensure that every block will have an integrated complex of special homes catering to both aged persons and destitute children.”
“ஆதரவற்ற முதியோரும், குழந்தைகளும் தங்குவதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒரு சிறப்பு இல்லத்தை ஏற்படுத்தித் தர இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. தற்போது 90 வட்டாரங்களில் அரசால் 27 குழந்தைகள் நல மையங்களும், அரசு சாரா நிறுவனங்களால் 173 குழந்தைகள் நல மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று 62 வட்டாரங்களில் 93 முதியோர் இல்லங்கள் - பகல் நேர பராமரிப்பு இல்லங்கள் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இயங்கி வருகின்றன. இந்த அரசு, ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும், முதியோருக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை உருவாக்கும். மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இத்திட்டம், சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் சமூக கடமையின் (Corporate social responsibility) ஒரு பகுதியாக, அவர்களது உதவியுடன் இந்த அரசால் நடைமுறைப்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.79 · ¶137 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.10.21 crores
“During 2011-2012, the Government ordered the establishment of 64 such centres at a cost of Rs.10.21 crores.”
“மாண்புமிகு முதலமைச்சர் பதவி ஏற்ற அன்றே ஆணையிட்ட ஏழு கோப்புகளில், சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஓய்வூதியம் உயர்த்துவது குறித்த கோப்பும் ஒன்று என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். இதன் வாயிலாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதியோர், ஆதரவற்றோர் மீது காட்டும் பரிவும், கனிவும் புலனாகிறது. மாதாந்திர முதியோர் ஒய்வூதியம், இதர சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் ஆகியவற்றை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கியதன் வாயிலாக முதியோர் மற்றும் ஆதரவற்றோர், வாழ்வில் புத்தொளி பெற்றுள்ளனர். பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியங்களால் 26.41 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டங்களின் செயல்பாட்டிற்கென முன்பு எப்போதுமில்லாத அளவாக 3,820.25 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டக் கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளின் வாயிலாக சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் ஒரு முன்னோடித் திட்டம் மூன்று வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2,000 மக்கள் தொகைக்கு மேலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இத்திட்டம் 2012 ஜுன் மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் நிதியைத் தவறாக பயன்படுத்த முடியாத வகையில், உயிர் ஆய்வளவு அட்டைகள் (biometric smart cards) வாயிலாக ஓய்வூதியம் வழங்கப்படும். அடுத்த கட்டத்தில் இதர ஊரக மற்றும் நகர்ப்புர பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்படும். ஆதரவற்ற முதியோரும், குழந்தைகளும் தங்குவதற்கென ஒருங்கிணைந்த சிறப்பு இல்லங்களை ஏற்படுத்திட அரசு எற்கெனவே அறிவித்துள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில் இது போன்ற 64 மையங்கள் அமைக்க 10.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியோடு கூட்டாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.78 · ¶123 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years