Welfare · recurring

Magalir Urimai Thogai

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

3 budgets named it 3 year span 34,527 ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and named again in 2 later budgets, most recently 2025-26.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2023-24 Rs.7,000 crore new project DMK

“Based on this, I am very happy to announce that Rs.1,000 per month will be provided to women heads of eligible households from the upcoming financial year. Women heads of families who have been affected adversely by the steep increase in cooking gas price by the Union Government and the overall price rise, will be greatly benefited by this scheme.”
“சமூகத்தின்‌ சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர்‌ சமமாக உயர்த்த திட்டமிட்டுச்‌ செயல்பட்டுக்‌ கொண்டு இருக்கிறது திராவிட மாடல்‌ அரசு. கல்வியில்‌, நிருவாகத்தில்‌, அதிகாரம்‌ மிக்க பொறுப்புகளில்‌, பொருளாதாரத்தில்‌, சமூகத்தில்‌ பெண்களை உயர்த்தும்‌ திட்டங்களைத்‌ திராவிட முன்னேற்றக்‌ கழக அரசு அமையும்‌ போதெல்லாம்‌ தீட்டி செயல்படுத்தி வருகிறோம்‌. மகளிருக்குச்‌ சொத்துரிமையும்‌, உள்ளாட்சி அமைப்புகளில்‌ தனி இடஒதுக்கீடும்‌ அளித்தது முதல்‌, இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்‌ வழங்கியது வரை, மகளிரின்‌ நலன்‌ காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில்‌ எப்போதும்‌ அக்கறையுடன்‌ செயல்பட்டு வருகிறோம்‌. அந்த வரிசையில்‌ குடும்பத்‌ தலைவிகளுக்கு மாதம்‌ 1000 ரூபாய்‌ வழங்கப்படும்‌ என்று நாங்கள்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ வாக்குறுதி அளித்துள்ளோம்‌. சொன்னதைச்‌ டுசய்வோம்‌ செய்வதைச்‌ சொல்வோம்‌ என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள்‌ மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும்‌ நாங்கள்‌ செயல்படுத்தி வருகிறோம்‌ என்பதை மாமன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ அறிவிர்கள்‌. மக்களை தேடி மருத்துவம்‌, புதுமைப்‌ பெண்‌, நான்‌ முதல்வன்‌ போன்றவை தேர்தல்‌ அறிக்கையில்‌ சொல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, மகளிருக்கு உரிமைத்‌ தொகை தரப்படும்‌ என்ற இந்த வாக்குறுதியையும்‌ உறுதியாக நிறைவேற்றிட வேண்டும்‌ என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்‌. அதன்‌ அடிப்படையில்‌, தகுதிவாய்ந்த குடும்பங்களின்‌ குடும்பத்‌ தலைவிகளுக்கு வரும்‌ நிதியாண்டில்‌ மாதம்‌ 1000 ரூபாய்‌ உரிமைத்‌ தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும்‌ மகிழ்ச்சியுடன்‌ அறிவிக்கிறேன்‌. ஒன்றிய அரசால்‌ பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல்‌ எரிவாயு விலை, விலைவாசி உயர்வால்‌ அதிகரிக்கும்‌ குடும்பச்‌ செலவுகள்‌ போன்றவற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின்‌ குடும்பத்‌ தலைவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1000 ரூபாய்‌ என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப்‌ பேருதவியாக இருக்கும்‌. வரலாற்றுச்‌ சிறப்புமிக்க இந்தத்‌ திட்டம்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டான இந்த ஆண்டில்‌, திராவிட இயக்க மாதம்‌ என சொல்லத்தக்க செப்டம்பர்‌ மாதத்தில்‌, தாய்‌ தமிழ்நாட்டின்‌ தமைமகன்‌ - பேரறிஞர்‌ பெருமகன்‌ அறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பிறந்தநாளான செப்டம்பர்‌ மாதம்‌ 15 ஆம்‌ நாள்‌ முதல்‌ இத்திட்டம்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ மகளிர்‌ பயன்பெறுவதற்கான வழிமுறைகள்‌ வகுக்கப்பட்டு விரைவில்‌ வெளியிடப்படும்‌. தமிழ்நாட்டு மகளிரின்‌ சமூக பொருளாதார வாழ்வில்‌ ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 7,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதி-ஆ மாநில அரசின்‌ நிதிநிலை சட்டமன்றப்‌ பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶145) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.59 · ¶145 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.13,720 crore transfer scheme DMK

“For this scheme, an amount of Rs.13,720 crore has been allocated in the coming year.”

tnbudget_2024-25_speech_en · p.27 · ¶54 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.13,807 crore transfer scheme DMK

“To safeguard women's welfare, a sum of Rs.13,807 crore has been allocated for this scheme in the Budget Estimates.”
“மகளிர்‌ நலத்‌ திட்டங்களுக்கெல்லாம்‌ மகுடம்‌ வைத்தது போல்‌ அறிவிக்கப்பட்ட கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ ஒவ்வொரு மாதமும்‌ ஒரு கோடியே பதினைந்து இலட்சம்‌ குடும்பத்‌ தலைவிகளுக்கு மாதம்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ அவர்களுடைய வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாகச்‌ செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால்‌ பயன்பெறும்‌ இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப்‌ பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள்‌ கணிசமாக சேமிக்கவும்‌ வழிவகுக்கிறது. இதுவரை, மகளிர்‌ உரிமைத்தொகை டபற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள்‌ விரைவில்‌ வழங்கப்படும்‌. மகளிர்‌ நலன்‌ காக்கும்‌ இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 13,807 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.24 · ¶47 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector