Welfare · dormant
Marriage assistance with gold coin
First announced in 2011-12 and named again in 10 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 514 crores
“Under this scheme, budgetary allocation of ```` 514 crores is made in the Revised Budget Estimates 2011-2012.”
“புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போதெல்லாம் மகளிர் மேம்பாடும், குழந்தைகள் நலனும் முக்கியத்துவம் பெறும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பல்வேறு திருமண உதவித் திட்டங்களில் பயன்பெறும் அனைத்துப் பயனாளிகளுக்கும் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கக் காசு வழங்கவும், அப்பயனாளிகள் பட்டம், பட்டயப்படிப்பு முடித்திருப்பின், அவர்களுக்கான திருமண உதவித் தொகையை உயர்த்தி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதை ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இத்திட்டத்திற்காக, 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில், 514 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.76 · ¶131 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 337 crores
“During the last five years monetary assistance of ` 922 crores has been provided to 4.71 lakh women under these schemes. ` 337 crores have been provided for these marriage assistance schemes in the Interim Budget.” tnbudget_2011-12_speech_en_interim · p.34 · ¶87 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.748.39 crores
“In the coming financial year, this scheme will be implemented with an increased outlay of Rs.748.39 crores.”
“திருமண உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை கணிசமாக உயர்த்தி, திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் தங்கக் காசு வழங்க, இந்த அரசு எடுத்த முடிவு, ஏழை பெற்றோர்களின் சுமையை பெருமளவு குறைத்து, அவர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. திருமண நிதி உதவி திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் திருமண உதவி, பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படித்துள்ள பெண்களுக்கு 50,000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்த தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அறிவுபூர்வமான செயல் மூலமாக, பெற்றோர்களிடையே பெண் குழந்தைகள் உயர் கல்வி கற்கச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் பெருமளவு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 69,892 ஏழை குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக நான்கு கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவிக்கென 364.64 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இத்திட்டத்திற்கான நிதி 748.39 கோடி ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 121 அரிசி பெறத் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கம் திட்டம் போன்று தமிழக வரலாற்றிலேயே, பெண்களால் மிகவும் வரவேற்கப்படும் ஒரு மகத்தான திட்டம் எதுவும் இதுவரை இருந்ததில்லை என்று என்னால் உறுதிபடக் கூற முடியும். வருமான வரம்பின்றி அனைத்து குடும்பங்களுக்கும் பயன் தரும் இத்திட்டம், அதிக சுமை மிகுந்த வீட்டுவேலைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளித்து, அதன் வாயிலாக கிடைக்கும் நேரத்தை சமூகப் பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில், 25 லட்சம் மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 35 லட்சம் குடும்பங்கள் பயனடையும் வகையில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.76 · ¶120 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.750 crores
“Rs.750 crores has been provided for the scheme of distributing a 4 gram gold coin for the Thirumangalyam along with enhanced marriage assistance in the Budget Estimates 2013-2014 under various marriage assistance schemes.” financedept_2013-14_speech_en · p.56 · ¶137 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.204 crore
“Rs.204 crore has been apportioned for gold coins for making the Thirumangalyam” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.547.09 crore
“Rs.547.09 crore for cash assistance” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.751.09 crore
“In 2014-2015, Rs.751.09 crore has been allocated for various marriage assistance schemes, out of which Rs.204 crore has been apportioned for gold coins for making the Thirumangalyam and Rs.547.09 crore for cash assistance.”
“கருணை உள்ளம் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் இந்த அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு எப்பொழுதும் உயர் முன்னுரிமை அளித்து வந்துள்ளது. பட்டதாரிப் பெண்களுக்குக் கூடுதல் நிதி உதவி அளிக்கக் கூடிய பல்வேறு திருமண உதவித் திட்டங்கள், இளம் பெண்களை உயர்கல்வியில் சேர ஊக்குவித்து, பெண்களின் சராசரி திருமண வயது உயர வழிவகை செய்துள்ளது. இதனால் பெண்களின் ஒட்டுமொத்த உடல் நலனும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ஏழைக் குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர். 2014-2015 ஆம் ஆண்டில் பல்வேறு திருமண உதவித் திட்டங்களுக்காக 751.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், 547.09 கோடி ரூபாய் பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶110) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.56 · ¶110 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.703.16 crores
“In the Budget Estimates 2015-2016, Rs.703.16 crores have been allocated, out of which Rs.204 crores has been apportioned for gold coins for making Thirumangalayam.”
“பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர், ஆதரவற்றோர் போன்ற சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நிலையை உயர்த்த, இந்த அரசு எப்போதும் முயன்று வெற்றி கண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ் இதுவரை 5,65,800 ஏழைப் பெண்கள் 2,403.08 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெற்றுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டங்களுக்காக 703.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், திருமாங்கல்யம் செய்வதற்கான தங்க நாணயங்களுக்கு 204 கோடி ரூபாய் செலவிடப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.60 · ¶104 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.703 crores
“In this Interim Budget, an amount of Rs.703 crores has been provided for continuing this scheme.”
“பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் போன்ற சமுதாயத்தில் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல நலத்திட்டங்களை, கருணையுள்ளம் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்கள் தொடர்ந்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், இளம் வயதில் திருமணம் செய்வதைத் தடுக்கவும், பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ், அப்பெண்களின் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களின் கீழ் இதுவரை, 2,537.74 கோடி ரூபாய் பண உதவி பெற்று 7,72,643 பெண்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், திருமாங்கல்யத்திற்கென 786.64 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 703 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.55 · ¶86 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.703.16 crores
“In this Revised Budget, an amount of Rs.703.16 crores has been provided for all marriage assistance schemes.” tnbudget_2016-17_speech_en_revised · p.66 · ¶138 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.723 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.723 crore has been provided in total for all the Marriage Assistance Schemes.” tnbudget_2017-18_speech_en · p.71 · ¶131 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.724 crore
“An amount of Rs.724 crore has been provided in the Budget Estimates for 2018-2019 for these Marriage Assistance schemes.”
“புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட “தொட்டில் குழந்தை திட்டம்”, 'பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்”, போன்ற இந்த அரசின் முன்னோடித் திட்டங்கள், பெண் சிசுக்கொலை மற்றும் பெண்குழந்தை கருக்கலைப்பு போன்றவற்றைக் குறைப்பதற்கு கணிசமான பங்களித்திருக்கின்றன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்காக 140.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டங்களின் கீழ், திருமாங்கல்யத்திற்காக எட்டு கிராம் தங்கம் மற்றும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25,000 ரூபாயும், பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶117) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.68 · ¶117 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.726.32 crore
“Under various marriage assistance schemes, Rs.726.32 crore has been provided in the Budget Estimates 2019-2020.” tnbudget_2019-20_speech_en · p.66 · ¶119 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.726.32 crore
“In the Budget Estimates for 2020-21, an allocation of Rs.726.32 crore has been provided towards the marriage assistance schemes.”
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் காட்டிய நல்வழியில், இந்த அரசு, பாலின சமத்துவம், நீதி ஆகியவற்றை பாதுகாப்பதில் முனைப்பாக செயல்படுகிறது. இதன் விளைவாக, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் நலனை உறுதி செய்தல், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் நலன் ஆகியவற்றை இலக்காக கொண்ட பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் பலனாக 2014-15 ஆம் ஆண்டில் 918 ஆக இருந்த பாலின பிறப்பு விகிதம், 2019 ஆம் ஆண்டில் 936 ஆக உயர்ந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்கு 140.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களினால், 2019-20 ஆம் ஆண்டில் 1,04,795 நபர்கள் பயனடைந்துள்ளனர். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களுக்காக, 726.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ், இதுவரை 1.88 இலட்சம் பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம், 2020-21 ஆம் ஆண்டிலும் 253.14 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிருவகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய நிறுவனம், பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்கும். சென்னையில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரி, திருச்சி, ஒசூர், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடத்திலும், மொத்தம் 13 இடங்களில் இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின் படி, 2020-21 ஆம் ஆண்டில் மகளிர் நலத் திட்டங்களுக்காக மொத்தம் 78,796.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶160) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.87 · ¶160 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.762.23 crore
“The Marriage Assistance Schemes originally launched by Muthamizh Arignar Kalaignar to promote the cause of women education and empowerment will be implemented with renewed vigour with an allocation of Rs.762.23 crore.”
“மகளிருக்கு அதிகாரமளித்தலை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதை இந்த அரசு மையக் கருத்தாக கொண்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு புத்துயிர் அளித்து, மகளிர் கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு 762.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶155) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.66 · ¶155 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.4,371.22 crore
“Under the various marriage assistance schemes from the year 2011-12 to date, 12,50,705 beneficiaries have been provided with 6,099.08 Kg of gold worth Rs.1,791.05 crore and Rs.4,371.22 crore as financial assistance.” tnbudget_2021-22_speech_en_interim · p.73 · ¶117 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Nutritious Meal Programme · 11 years
- Social Security Pension Schemes · 11 years