Welfare · dormant

Minorities student scholarships

5 budgets named it 11 year span 499 ₹ crore allocated DMK / AIADMK governments

First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 40.68 crores transfer scheme DMK · interim

“To provide these scholarships in the coming financial year, an amount of ` 40.68 crores has been provided in the Interim Budget.”
“சிறுபான்மையினரின்‌ கல்வி, சமூகம்‌ மற்றும்‌ பொருளாதாரத்தை மேம்படுத்தவும்‌, அவர்களுக்கு நலத்திட்டங்கள்‌ செம்மையாகச்‌ சென்றடைவதை உறுதி செய்யவும்‌, இந்த அரசால்‌ 2007 ஆம்‌ ஆண்டு முதல்‌ சிறுபான்மையினர்‌ நல இயக்குநரகம்‌ தொடங்கிச்‌ செயல்படுத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோரின்‌ 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கென தனியே 3.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 15.9.2007 முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்‌, கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, பெளத்த மற்றும்‌ பார்சி இனங்களைச்‌ சார்ந்த மாணவ மாணவியருக்கு மாநில மற்றும்‌ மத்திய அரசுகளின்‌ நிதியுதவியுடன்‌ கல்வி உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, இந்த நிதியாண்டில்‌ ரூபாய்‌ 32 கோடி செலவில்‌, 171643 மாணவ மாணவியர்‌ கல்வி உதவித்‌ தொகை பெற்றுள்ளனர்‌. வரும்‌ நிதியாண்டிலும்‌ இந்த கல்வி உதவித்‌ தொகை தொடர்ந்து வழங்குவதற்காக இந்த இடைக்கால வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ரூபாய்‌ 40 கோடியே 68 இலட்சம்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.38 · ¶97 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.55.21 crores continuation AIADMK

“In order to ensure the educational progress of the students from minority communities, Rs.55.21 crores has been provided in the Budget Estimates 2013-2014 for the various scholarship schemes.”
“சிறுபான்மையினரின்‌ உரிமைகளைப்‌ பாதுகாத்திடத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ இந்த அரசு எடுத்து வருகின்றது. இப்பிரிவுகளைச்‌ சேர்ந்த மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு கல்வி உதவித்‌ தொகைத்‌ திட்டங்களுக்காக, 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ 55.21 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டு, மானியமாக மூன்று கோடி ரூபாய்‌ அளிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேத்திற்கு புனிதப்பபணம்‌ மேற்கொள்ளும்‌ கிறித்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ ஒரு கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, சிறுபான்மையினர்‌ நலனுக்காக 60.39 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶136) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.55 · ¶136 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.72.39 crore continuation AIADMK

“During 2014-2015, a sum of Rs.72.39 crore has been provided for the various scholarship schemes.”
“சிறுபான்மையின மாணவ மாணவியர்களின்‌ நலனுக்காக, பல்வேறு கல்வி உதவித்‌ தொகைத்‌ திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ பல்வேறு கல்வி உதவித்‌ தொகைத்‌ திட்டங்களுக்காக 72.39 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெருசலேம்‌, ஹஜ்‌ புனிதப்‌ பயணங்கள்‌ மேற்கொள்பவர்களுக்கான நிதி உதவியும்‌ இந்த அரசால்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ சிறுபான்மையினர்‌ நலனுக்காக 93.84 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.63 · ¶127 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.106.51 crores continuation AIADMK

“A sum of Rs.106.51 crores has been provided for these schemes in the Budget Estimates 2015-2016.”
“பல்வேறு கல்வி உதவித்‌ தொகைத்‌ திட்டங்களை திறம்படச்‌ செயல்படுத்துவதன்‌ மூலமாக சிறுபான்மையின மாணவ மாணவியர்கள்‌ சிறப்பான பயனடைந்து வருகின்றனர்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டங்களுக்காக 106.51 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ சிறுபான்மையினர்‌ நலனுக்காக 115.80 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.65 · ¶116 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.114.65 crore continuation DMK · revised

“This Government will ensure that the benefits of the scholarship scheme reach nearly 4.25 lakh school and college students belonging to minorities. A total sum of Rs.114.65 crore is expected to be disbursed in 2021-22 to these students.”
“இந்த அரசு, 4.25 இலட்சம்‌ சிறுபான்மையினப்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவித்‌ திட்டத்தின்‌ பயன்கள்‌ சென்றடைவதை உறுதி செய்யும்‌, இந்த மாணவர்களுக்கு 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ 114.65 கோடி தொகை பகிர்ந்தளிக்கப்படும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶166) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.71 · ¶166 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.110 crore continuation AIADMK · interim

“During 2020-21, Rs.110 crore is being disbursed as scholarships for the benefit of students belonging to minorities.”
“2020-21 ஆம்‌ ஆண்டில்‌ சிறுபான்மை சமுதாயத்தைச்‌ சேர்ந்த மாணவர்களின்‌ நலனுக்காக, 110 கோடி ரூபாய்‌ கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. 2011-12 ஆம்‌ ஆண்டில்‌ ஜெருசலேம்‌ புனித யாத்திரை செல்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும்‌ திட்டம்‌ அரசால்‌ அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரையில்‌ 4,128 நபர்கள்‌ புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்‌. 2018-19ஆம்‌ ஆண்டில்‌ ஹஜ்‌ புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும்‌ திட்டம்‌ அரசால்‌ அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரையில்‌ 8,166 நபர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, இதுவரை தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்‌ கழகம்‌ 5,11 பயனாளிகளுக்கு 30.49 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ கடன்‌ வழங்கியுள்ளது. மொழிவாரி சிறுபான்மையினர்‌ நலனுக்காக, 9 கோடி ரூபாய்‌, அரசின்‌ அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதலிட்டுடன்‌, தமிழ்நாட்டில்‌ மொழிவாரி சிறுபான்மையினர்‌ சமூக மற்றும்‌ பொருளாதார மேம்பாட்டுக்‌ கழகம்‌ நிறுவப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.77 · ¶123 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector