Industry · completed claimed

New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS)

11 budgets named it 13 year span 1,133 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2012-13 and named again in 10 later budgets, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2012-13 Rs.100 crores new project AIADMK

“A sum of Rs.100 crores has been provided as capital subsidy and other assistance for this scheme in this Budget.”
“படித்த இளைஞர்களை முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோராக மாற்ற உதவும்‌ நோக்குடன்‌ புதிய தொழில்‌ முனைவோர்‌, தொழில்‌ நிறுவன வளர்ச்சித்‌ திட்டம்‌ என்ற புதிய திட்டத்தை 2012-2013 ஆம்‌ ஆண்டு முதல்‌ அரசு செயல்படுத்தும்‌. இத்திட்டத்தில்‌, படித்த இளைஞர்களுக்கு தொழில்‌ முனைவோர்‌ பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில்‌ தொடங்க திட்டங்கள்‌ தயாரித்து நிதிநிறுவனங்களில்‌ நிதியுதவி பெற உதவுவதுடன்‌, பெரும்‌ தொழில்‌ நிறுவனங்களுடன்‌ அவர்களுக்கு வணிகத்‌ தொடர்பும்‌ அமைத்துத்‌ தர நடவடிக்கை எடுக்கப்படும்‌. வங்கிகள்‌, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ ஆகியவற்றிலிருந்து, 25 லட்சம்‌ ரூபாய்க்கு மிகாத 25 சதவீத முதலீட்டு மானியமும்‌, மூன்று சதவீத வட்டிக்‌ குறைப்புடன்‌ கூடிய கடனும்‌ பெற உதவி செய்யப்படும்‌. ஒவ்வொரு ஆண்டும்‌ இத்திட்டத்தில்‌ 1,000 தொழில்‌ முனைவோருக்குப்‌ பயிற்சி அளிக்கப்படும்‌. இதில்‌ 50 விழுக்காடு பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ இப்பணிகளில்‌ தொழில்‌ முனைவோர்‌ பயிற்சி நிறுவனமும்‌, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகமும்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, முதலீட்டு மானியம்‌ மற்றும்‌ இதர உதவிகளுக்கு 100 கோடி ரூபாய்‌, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளித்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.38 · ¶58 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.100 crores continuation AIADMK

“In the Budget Estimates 2013-2014, Rs.100 crores has been allocated for the NEED Scheme and 50% of this has been earmarked for women beneficiaries.”
“புதிய தொழில்‌ முனைவோர்‌ - தொழில்‌ நிறுவன வளர்ச்சித்‌ திட்டம்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ பயிற்சி மற்றும்‌ ஆலோசனை உதவிகளோடு, முதலீடுகளுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்தையும்‌ அரசு வழங்கி வருகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இதற்கென 100 கோடி ரூபாய்‌ அளிக்கப்பட்டுள்ளதோடு, இதில்‌ 50 சதவீதம்‌ மகளிர்‌ தொழில்‌ முனைவோருக்காக தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ மற்றும்‌ வங்கிகள்‌ மூலமாக, சிறு, குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்குப்‌ பலன்‌ அளிக்கும்‌ மூன்று சதவீத வட்டி மானியத்‌ திட்டத்திற்காக, 25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல்‌ தொழில்நுட்பம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.30 · ¶72 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.100 crore continuation AIADMK

“During 2014-2015, an amount of Rs.100 crore will be provided for continuous implementation of this scheme.”
“படித்த இளைஞர்களை, முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோர்களாக உருவாக்கிட, புதிய தொழில்‌ முனைவோர்‌-தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தை 20.2.2013 அன்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கிவைத்தார்கள்‌. இந்தத்‌ திட்டத்திற்கு படித்த இளைஞர்களிடையே, குறிப்பாக பெண்களிடையே, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத்‌ திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்திட 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.34 · ¶66 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.100 crores continuation AIADMK

“During 2015-2016, an amount of Rs.100 crores will be provided for continuing this scheme.”
“படித்த இளைஞர்களை முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோர்களாக உருவாக்கிட உதவி செய்யக்கூடிய புதிய தொழில்‌ முனைவோர்‌-தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டம்‌, படித்த இளைஞர்களிடையே, குறிப்பாக, பெண்களிடையே பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றுள்ளது. புதிய தொழில்களுக்கான மானியமாக இதுவரை 77.17 கோடி ரூபாய்‌ அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்‌ திட்டத்திற்கான மானியமாக 15 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶59) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.38 · ¶59 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.737.45 crores continuation investment target AIADMK · interim

“A novel scheme, the New Entrepreneurship- cum-Enterprise Development Scheme (NEEDS) was launched by this Government to benefit first generation entrepreneurs and so far, 1,586 projects have been approved with an investment of Rs.737.45 crores.”
“2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பெறும்‌ கடன்களுக்கு மூன்று சதவீத வட்டி மானியத்தை இந்த அரசு வழங்கி வருகிறது. 2012 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ இதுவரை, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகத்தால்‌ 1859 கோடி ரூபாய்‌ அளவிலான கடன்கள்‌ வழங்கப்பட்டுள்ளதன்‌ மூலம்‌, 4,237 தொழில்‌ அலகுகள்‌ இந்த வட்டி மானியத்தால்‌ பயன்‌ பெற்றுள்ளன. முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரை ஊக்குவிப்பதற்காக, புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌” (NEEDS) என்ற புதுமையான திட்டம்‌ ஒன்றை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதுவரை, இத்திட்டத்தின்‌ கீழ்‌ 737.45 கோடி ரூபாய்‌ முதலீட்டிலான 1586 திட்டங்களுக்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறைக்கு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 348.13 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, கைத்திறன்‌, துணிநூல்‌ மற்றும்‌ கதர்த்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.36 · ¶53 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores enhancement AIADMK · revised

“An amount of Rs.100 crores has been allocated for implementing this scheme in this Revised Budget 2016-2017.”
“முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரை ஊக்கப்படுத்த, இந்த அரசால்‌ தொடங்கப்பட்ட முன்னோடித்‌ திட்டம்‌ “புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌” (New Entrepreneurship-cum-Enterprise Development Scheme) ஆகும்‌. தமிழகத்தில்‌ புதிய தொழில்‌ தொடங்குவதற்கான துடிப்பான சூழலை (Vibrant Start-up Environment) ஏற்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை இதற்கென இத்திட்டத்தில்‌ ஒதுக்கி ‘oyu செயல்திட்ட' நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்‌, அவற்றை கல்வி நிறுவனங்களுக்கும்‌ விரிவுபடுத்தவும்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக, 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶84) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.43 · ¶84 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.100 crore continuation AIADMK

“This will be funded from a sum of Rs.100 crore that is being allocated in the Budget Estimates 2017-2018 for NEEDS.”
“நாட்டிலேயே அதிகபட்சமாக, 94.83 இலட்சம்‌ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்‌ வகையில்‌, 14.89 இலட்சம்‌ பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌, தமிழகத்தில்‌ இயங்கி வருகின்றன. மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெ ஜெயலலிதா அவர்களால்‌ தொடங்கப்பட்ட புதுமைத்‌ திட்டமான, புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌, மாநிலத்தில்‌ முதல்‌ தலைமுறைத்‌ தொழில்‌ முனைவோர்‌ புதிய தொழில்களை தொடங்குவதற்கு உதவியாக உள்ளது. மேலும்‌, புதிதாகத்‌ தொழில்‌ தொடங்குவோர்‌ மற்றும்‌ முதல்‌ தலைமுறைத்‌ தொழில்‌ முனைவோர்‌ நம்பிக்கையுடன்‌ தொழில்‌ தொடங்க உரிய முதலீட்டுச்‌ சூழலை ஏற்படுத்தும்‌ வகையிலும்‌, உற்பத்தியில்‌ புதுமை முயற்சிகளை ஊக்குவிக்கவும்‌, 2017 ஆம்‌ ஆண்டிலிருந்து 2021 ஆம்‌ ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கான செயல்திட்டம்‌ ஒன்றை தமிழ்நாடு தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ (Enterpreneurship Development Institute) உருவாக்கியுள்ளது. தொழில்‌ துவக்கம்‌ முதல்‌ உற்பத்தித்‌ தொடக்கம்‌ வரை உள்ள உயர்‌ சந்தைப்‌ பயிற்சி, தொடர்‌ வழிகாட்டுதல்‌, வலைப்‌ பின்னலமைப்பு மற்றும்‌ தகவல்‌ சேவைகள்‌ ஆகிய பயிற்சிகள்‌ மூலம்‌ தொழில்‌ நிறுவனத்தை திறம்பட நடத்தும்‌ தன்மைகளை வளர்த்துக்கொள்ள தொழில்‌ முனைவோருக்கு இத்திட்டம்‌ மூலம்‌ உதவி செய்யப்படும்‌. இதற்கான செலவினம்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும்‌ 100 கோடி ரூபாய்‌ நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.43 · ¶78 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.100 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.100 crore has been provided for this scheme and Rs.540.66 crore has been provided for the MSME sector.”
“முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரை ஊக்கப்படுத்த இந்த அரசால்‌ தொடங்கப்பட்ட முன்னோடித்‌ திட்டமான “புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ தொடங்கப்பட்ட 2011 ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை 4,190 முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. இத்திட்டத்தில்‌ அதிகபட்ச கடன்‌ உச்சவரம்பு தற்போதுள்ள ஒரு கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாயாக உயர்த்தப்படும்‌. எனினும்‌, அதிகபட்ச மானிய உச்சவரம்பு தற்போதுள்ள 25 இலட்சம்‌ ரூபாயாகத்‌ தொடரும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்கு 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ துறைக்கு, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 540.66 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, கைத்திறன்‌, துணிநூல்‌ மற்றும்‌ கதர்த்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.45 · ¶72 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.87.92 crore continuation AIADMK

“The New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) has created a favourable environment for budding entrepreneurs to start business enterprises in the State. In the Budget Estimates 2019-2020, a sum of Rs.87.92 crore has been allocated for this scheme.”
“மூலதனக்‌ கணக்கில்‌ செலவுகள்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மூலதன உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன்‌ தேவையை உணர்ந்து, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்‌ 26,19198 கோடி ரூபாய்‌ மூலதனச்‌ செலவினத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 31,251.21 கோடி ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2020-2021 மற்றும்‌ 2021-2022 ஆம்‌ ஆண்டுகளில்‌ 18 சதவீதமாக மேலும்‌ உயரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப்‌ பற்றாக்குறை மற்றும்‌ நிதிப்‌ பற்றாக்குறை ந உதய்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ 22,815 கோடி ரூபாய்‌ கடனை அரசே ஏற்றுக்கொண்டது மற்றும்‌ ஏழாவது ஊதியக்‌ குழுவின்‌ பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது ஆகியவற்றால்‌, வருவாய்ப்‌ பற்றாக்குறை அதிகரித்து வந்துள்ளது. இருந்தபோதிலும்‌, எதிர்வரும்‌ ஆண்டுகளில்‌ மாநிலமானது உயர்‌ வளர்ச்சி பாதையை எட்டும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. ஊதிய மாற்றங்களினால்‌ ஏற்பட்ட பாதிப்புகள்‌ படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதுடன்‌, நிதி நிலை மேலாண்மை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ம பல்வேறு நிதி பிரச்சினைகள்‌ இருப்பினும்‌, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்பற்றாக்குறை விகிதத்தை மூன்று சதவீதத்திற்குள்ளாகவே அரசு பராமரித்து வருகிறது. எதிர்வரும்‌ ஆண்டுகளில்‌ உள்ள நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்புகள்‌ மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்பற்றாக்குறை விகிதத்தை மூன்று சதவீதத்திற்கும்‌ கீழாக பராமரிக்க உதவும்‌. இதனால்‌, தமிழ்நாடு சிறந்த நிதி மேலாண்மை செய்து வரும்‌ மாநிலம்‌ என்ற நிலை தொடரும்‌. ந 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை 14,314.76 கோடி ரூபாயாகவும்‌, நிதிப்‌ பற்றாக்குறை 44,176.36 கோடி ரூபாயாகவும்‌ இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்பற்றாக்குறையின்‌ விகிதம்‌ 2.56 சதவீதமாக இருக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதிப்‌ பற்றாக்குறை வரம்பான மூன்று சதவீதத்திற்குள்ளாகவே இருக்கும்‌. வரும்‌ காலங்களில்‌, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறையின்‌ விகிதம்‌ 2020-2021 ஆம்‌ ஆண்டில்‌ 2.39 சதவீதமாகவும்‌, 2021-2022 ஆம்‌ ஆண்டில்‌ 2.25 சதவீதமாகவும்‌ இருக்கும்‌. V. கடன்கள்‌ பதினான்காவது நிதிக்‌ குழு பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக்‌ கடன்‌ வரம்பின்‌ அடிப்படையில்‌, கடன்‌ வரவுகள்‌ மற்றும்‌ திரும்பச்‌ செலுத்துதல்‌ மதிப்பிடப்பட்டுள்ளன. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான, நிகரக்‌ கடன்‌ வரம்பு 51,800 கோடி ரூபாய்‌ என்று கணிக்கப்பட்டிருந்தாலும்‌, மாநில அரசு 43,000 கோடி ரூபாய்‌ மட்டுமே நிகரக்‌ கடன்‌ வாங்க திட்டமிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உட்பட நிலுவையிலுள்ள மொத்தக்‌ கடன்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும்‌. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 23.02 சதவீதம்‌ மட்டுமே ஆகும்‌. VI. கடன்‌ உத்திரவாதங்கள்‌ ஒவ்வொரு ஆண்டிலும்‌ நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 10 சதவீத அளவு, இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 2018 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ திங்கள்‌ 31 ஆம்‌ தேதி அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின்‌ அளவு, மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 25.77 சதவீதமாகவும்‌, மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 2.5 சதவீதமாகவும்‌ உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும்‌ மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 75 சதவீதம்‌ அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 7.50 சதவீதம்‌ இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 2018 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ திங்கள்‌ 31 ஆம்‌ தேதி அன்று உள்ளபடி மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 4.47 சதவீதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 0.43 சதவீதமாகவும்‌ உள்ளது. முடிவுரை இடையில்‌ தற்காலிக பின்னடைவு ஏற்பட்ட போதிலும்‌, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 5.37 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின்‌ வளர்ச்சி விகிதமானது நிலையான விலைகளின்‌ அடிப்படையில்‌) 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 8.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின்‌ வரிவருவாய்‌ வளர்ச்சிப்‌ பாதையில்‌ இருக்கும்‌ என மதிப்பிடப்பட்ட போதிலும்‌, ஒருங்கிணைந்த பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரியில்‌ மாநிலத்தின்‌ பங்கு மற்றும்‌ தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய இழப்பீட்டுத்‌ தொகை தாமதமாக மத்திய அரசால்‌ விடுவிக்கப்படுவதால்‌, மாநிலத்திற்கு அதிக நிதி நெருக்கடியினை அளித்துள்ளது. மேலும்‌, பதினான்காவது நிதிக்‌ குழுவின்‌ பரிந்துரைகளால்‌ மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில்‌ தமிழகத்தின்‌ பங்கு குறைந்தது மற்றும்‌ மத்திய அரசு பொறுப்பேற்கும்‌ திட்ட பணிகளில்‌ மாநில அரசின்‌ பங்கு உயர்ந்தது, மத்திய அரசின்‌ பங்கு தொகையினை விடுவிப்பதில்‌ காலதாமதம்‌ ஆகியன மாநில அரசின்‌ நிதிநிலையை பாதித்துள்ளது. ஏழாவது மத்திய ஊதியக்குழுவின்‌ பரிந்துரைகளை செயல்படுத்தியதால்‌ சம்பளங்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியங்கள்‌ உயர்த்தப்பட்டதைத்‌ தவிர, இதரச்‌ செலவுகளின்‌ பங்கு நிலையாக இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலைக்‌ குறியீடுகளான, ஒட்டுமொத்த நிதிப்‌ பற்றாக்குறை, நிகரக்‌ கடன்‌, மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிலுவையில்‌ உள்ள மொத்தக்‌ கடன்‌ விகிதம்‌ ஆகியவை பல நிதி நெருக்கடிக்கிடையிலும்‌ அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும்‌ விரைவான பொருளாதார வளர்ச்சியை அடையவும்‌, சீரான நிதி மேலாண்மையை உறுதி செய்யவும்‌ அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும்‌ தொடர்ந்து எடுத்து வருகிறது. KREKKEKKEKKEKKKKKEE” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.62 · ¶111 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.100 crore enhancement AIADMK

“The Government will enhance the maximum capital subsidy under the NEEDS scheme from Rs.30 lakh to Rs.50 lakh. A sum of Rs.100 crore has been allocated for this scheme in the Budget Estimates 2020-21.”
“புதிய தொழில்முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டம்‌, தமிழ்நாடு அரசின்‌ தொழில்முனைவோருக்கான முன்னோடித்‌ திட்டமாகும்‌. 2018 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதத்தில்‌, இத்திட்டத்தின்‌ கீழான திட்டச்‌ செலவு வரம்பு ஒரு கோடி ரூபாயில்‌ இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும்‌, 2018 ஆம்‌ ஆண்டில்‌, அதிகபட்ச மூலதன மானியம்‌ 25 இலட்சம்‌ ரூபாயில்‌ இருந்து 30 இலட்சம்‌ ரூபாயாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தற்போது வழங்கப்படும்‌ அதிகபட்ச மூலதன மானியத்தை 30 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 50 இலட்சம்‌ ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶143) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.80 · ¶143 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.144 crore completion claim DMK

“In the current year, under the New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS), sanction has been given for subsidies worth Rs.144 crore.”
“இவ்வாண்டு, முதல்‌ - தலைமுறை தொழில்முனைவோர்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தில்‌ (NEEDS), 144 கோடி ரூபாய்‌ அளவிலான மானியத்திற்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டச்‌ செயல்பாட்டில்‌ இது ஒரு புதிய மைல்கல்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ இந்த அவையில்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில்‌ பணம்‌ அளிக்கப்படுவதை உறுதிசெய்ய மின்னணு வர்த்தக வரவு தள்ளுபடி' (11615) தளத்தில்‌ அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும்‌ இணைவதைக்‌ கட்டாயமாக்கியுள்ள ஒரே மாநிலம்‌ தமிழ்நாடாகும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶113) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.46 · ¶113 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.101 crore continuation DMK

“In the Budget Estimates 2024-25, an allocation of Rs.101 crore has been earmarked to provide subsidy assistance under the New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS).”
“முதல்‌ தலைமுறை கதொழில்முனைவோர்கள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ (NEEDS) கீழ்‌ வரும்‌ நிதியாண்டில்‌ 101 கோடி ரூபாய்‌ அளவிற்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும்‌. மேலும்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில்‌ அவர்களுக்குரிய தொகை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய மின்னணு வர்த்தக வரவுகள்‌ தள்ளுபடி (1115) தளத்தில்‌ பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்களும்‌ இணைவது உறுதி செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.48 · ¶100 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector