Industry · completed claimed

New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS)

11 budgets named it 13 year span 1,133 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2012-13 and named again in 10 later budgets, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2012-13 Rs.100 crores new project AIADMK

“A sum of Rs.100 crores has been provided as capital subsidy and other assistance for this scheme in this Budget.”
“படித்த இளைஞர்களை முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோராக மாற்ற உதவும்‌ நோக்குடன்‌ புதிய தொழில்‌ முனைவோர்‌, தொழில்‌ நிறுவன வளர்ச்சித்‌ திட்டம்‌ என்ற புதிய திட்டத்தை 2012-2013 ஆம்‌ ஆண்டு முதல்‌ அரசு செயல்படுத்தும்‌. இத்திட்டத்தில்‌, படித்த இளைஞர்களுக்கு தொழில்‌ முனைவோர்‌ பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில்‌ தொடங்க திட்டங்கள்‌ தயாரித்து நிதிநிறுவனங்களில்‌ நிதியுதவி பெற உதவுவதுடன்‌, பெரும்‌ தொழில்‌ நிறுவனங்களுடன்‌ அவர்களுக்கு வணிகத்‌ தொடர்பும்‌ அமைத்துத்‌ தர நடவடிக்கை எடுக்கப்படும்‌. வங்கிகள்‌, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ ஆகியவற்றிலிருந்து, 25 லட்சம்‌ ரூபாய்க்கு மிகாத 25 சதவீத முதலீட்டு மானியமும்‌, மூன்று சதவீத வட்டிக்‌ குறைப்புடன்‌ கூடிய கடனும்‌ பெற உதவி செய்யப்படும்‌. ஒவ்வொரு ஆண்டும்‌ இத்திட்டத்தில்‌ 1,000 தொழில்‌ முனைவோருக்குப்‌ பயிற்சி அளிக்கப்படும்‌. இதில்‌ 50 விழுக்காடு பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ இப்பணிகளில்‌ தொழில்‌ முனைவோர்‌ பயிற்சி நிறுவனமும்‌, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகமும்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, முதலீட்டு மானியம்‌ மற்றும்‌ இதர உதவிகளுக்கு 100 கோடி ரூபாய்‌, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளித்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.38 · ¶58 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.100 crores continuation AIADMK

“In the Budget Estimates 2013-2014, Rs.100 crores has been allocated for the NEED Scheme and 50% of this has been earmarked for women beneficiaries.”

financedept_2013-14_speech_en · p.30 · ¶72 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.100 crore continuation AIADMK

“During 2014-2015, an amount of Rs.100 crore will be provided for continuous implementation of this scheme.”
“படித்த இளைஞர்களை, முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோர்களாக உருவாக்கிட, புதிய தொழில்‌ முனைவோர்‌-தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தை 20.2.2013 அன்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கிவைத்தார்கள்‌. இந்தத்‌ திட்டத்திற்கு படித்த இளைஞர்களிடையே, குறிப்பாக பெண்களிடையே, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத்‌ திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்திட 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.34 · ¶66 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.100 crores continuation AIADMK

“During 2015-2016, an amount of Rs.100 crores will be provided for continuing this scheme.”
“படித்த இளைஞர்களை முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோர்களாக உருவாக்கிட உதவி செய்யக்கூடிய புதிய தொழில்‌ முனைவோர்‌-தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டம்‌, படித்த இளைஞர்களிடையே, குறிப்பாக, பெண்களிடையே பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றுள்ளது. புதிய தொழில்களுக்கான மானியமாக இதுவரை 77.17 கோடி ரூபாய்‌ அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்‌ திட்டத்திற்கான மானியமாக 15 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶59) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.38 · ¶59 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.737.45 crores continuation investment target AIADMK · interim

“A novel scheme, the New Entrepreneurship- cum-Enterprise Development Scheme (NEEDS) was launched by this Government to benefit first generation entrepreneurs and so far, 1,586 projects have been approved with an investment of Rs.737.45 crores.”
“2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பெறும்‌ கடன்களுக்கு மூன்று சதவீத வட்டி மானியத்தை இந்த அரசு வழங்கி வருகிறது. 2012 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ இதுவரை, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகத்தால்‌ 1859 கோடி ரூபாய்‌ அளவிலான கடன்கள்‌ வழங்கப்பட்டுள்ளதன்‌ மூலம்‌, 4,237 தொழில்‌ அலகுகள்‌ இந்த வட்டி மானியத்தால்‌ பயன்‌ பெற்றுள்ளன. முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரை ஊக்குவிப்பதற்காக, புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌” (NEEDS) என்ற புதுமையான திட்டம்‌ ஒன்றை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதுவரை, இத்திட்டத்தின்‌ கீழ்‌ 737.45 கோடி ரூபாய்‌ முதலீட்டிலான 1586 திட்டங்களுக்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறைக்கு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 348.13 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, கைத்திறன்‌, துணிநூல்‌ மற்றும்‌ கதர்த்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.36 · ¶53 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores enhancement AIADMK · revised

“An amount of Rs.100 crores has been allocated for implementing this scheme in this Revised Budget 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.43 · ¶84 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.100 crore continuation AIADMK

“This will be funded from a sum of Rs.100 crore that is being allocated in the Budget Estimates 2017-2018 for NEEDS.”

tnbudget_2017-18_speech_en · p.43 · ¶78 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.100 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.100 crore has been provided for this scheme and Rs.540.66 crore has been provided for the MSME sector.”
“முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரை ஊக்கப்படுத்த இந்த அரசால்‌ தொடங்கப்பட்ட முன்னோடித்‌ திட்டமான “புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ தொடங்கப்பட்ட 2011 ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை 4,190 முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. இத்திட்டத்தில்‌ அதிகபட்ச கடன்‌ உச்சவரம்பு தற்போதுள்ள ஒரு கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாயாக உயர்த்தப்படும்‌. எனினும்‌, அதிகபட்ச மானிய உச்சவரம்பு தற்போதுள்ள 25 இலட்சம்‌ ரூபாயாகத்‌ தொடரும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்கு 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ துறைக்கு, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 540.66 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, கைத்திறன்‌, துணிநூல்‌ மற்றும்‌ கதர்த்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.45 · ¶72 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.87.92 crore continuation AIADMK

“The New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) has created a favourable environment for budding entrepreneurs to start business enterprises in the State. In the Budget Estimates 2019-2020, a sum of Rs.87.92 crore has been allocated for this scheme.”

tnbudget_2019-20_speech_en · p.62 · ¶111 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.100 crore enhancement AIADMK

“The Government will enhance the maximum capital subsidy under the NEEDS scheme from Rs.30 lakh to Rs.50 lakh. A sum of Rs.100 crore has been allocated for this scheme in the Budget Estimates 2020-21.”
“புதிய தொழில்முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டம்‌, தமிழ்நாடு அரசின்‌ தொழில்முனைவோருக்கான முன்னோடித்‌ திட்டமாகும்‌. 2018 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதத்தில்‌, இத்திட்டத்தின்‌ கீழான திட்டச்‌ செலவு வரம்பு ஒரு கோடி ரூபாயில்‌ இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும்‌, 2018 ஆம்‌ ஆண்டில்‌, அதிகபட்ச மூலதன மானியம்‌ 25 இலட்சம்‌ ரூபாயில்‌ இருந்து 30 இலட்சம்‌ ரூபாயாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தற்போது வழங்கப்படும்‌ அதிகபட்ச மூலதன மானியத்தை 30 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 50 இலட்சம்‌ ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶143) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.80 · ¶143 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.144 crore completion claim DMK

“In the current year, under the New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS), sanction has been given for subsidies worth Rs.144 crore.”

financedept_2023-24_speech_en · p.46 · ¶113 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.101 crore continuation DMK

“In the Budget Estimates 2024-25, an allocation of Rs.101 crore has been earmarked to provide subsidy assistance under the New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS).”
“முதல்‌ தலைமுறை கதொழில்முனைவோர்கள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ (NEEDS) கீழ்‌ வரும்‌ நிதியாண்டில்‌ 101 கோடி ரூபாய்‌ அளவிற்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும்‌. மேலும்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில்‌ அவர்களுக்குரிய தொகை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய மின்னணு வர்த்தக வரவுகள்‌ தள்ளுபடி (1115) தளத்தில்‌ பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்களும்‌ இணைவது உறுதி செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.48 · ¶100 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector