Transport · dormant
Performance Based Maintenance Contract (PBMC) system
4 budgets named it 5 year span 437 ₹ crore allocated 1,774 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and named again in 3 later budgets, most recently 2020-21. Places named: Pollachi, Krishnagiri, Ramanathapuram, Tiruvallur, Gobichettipalayam.
Allocated by budget year
Located at Pollachi · Coimbatore district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2016-17 Rs.437 crores
“Initial rectification and maintenance works on State Highways and Major District Roads have been taken up under the 'Performance Based Maintenance Contract' (PBMC) system in Pollachi, Krishnagiri, Ramanathapuram and Thiruvallur Divisions. For continuing this scheme in the current financial year, an amount of Rs.437 crores is earmarked under the CRIDP.”
“2016-2017 ஆம் ஆண்டில் 'ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்” (CRIDP) கீழ் 1000 கிலோமீட்டர் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளும், 3,000 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின்” (Performance Based Maintenance Contract) &p பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் கோட்டங்களில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்டச் சாலைகளை வலுப்படுத்தவும், பராமரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 437 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2016-2017 ஆம் ஆண்டில் சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்தும் பணிகளை, 300 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கியின் கடனுதவியுடன் இந்த அரசு மேற்கொள்ளும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.31 · ¶60 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,774.31 crore
“Strengthening and maintenance works on State Highways and Major District Roads have been taken up under the ‘Performance Based Maintenance Contract’ (PBMC) system in Pollachi, Krishnagiri, Ramanathapuram and Tiruvallur divisions at an overall project cost of Rs.1,774.31 crore.”
“ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்” (CRIDP) கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளையும், 3,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளையும், 200 பாலங்கள் / சிறு பாலங்கள் கட்டுவதற்கான பணிகளையும் அரசு மேற்கொள்ளும். இத்திட்டத்திற்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (Performance Based Maintenance Contract) அடிப்படையில், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கியச் சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கும் பணிகள் 1774.31 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் ஆண்டில் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை விருதுநகர் கோட்டத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.32 · ¶57 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.715 crore
“During 2019-2020, another 622 km of roads at a cost of Rs.715 crore will be covered in Sivagangai division.”
“செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் (Performance Based Maintenance Contract) கீழ், இதுவரை 3,074.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1768 கிலோமீட்டர் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முக்கியமான சாலைகள் முறையாகவும், உயர் தரத்திலும் பராமரிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த முறை, மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 2019-2020 ஆம் ஆண்டில், இத்திட்டம் சிவகங்கை கோட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 622 கிலோமீட்டர் சாலைப் பணிகள் 715 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். மேலும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளிடம் நிதியுதவி கோருவதற்கான விரிவானதொரு திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.42 · ¶71 · source PDF ↗ · on the map →
2020-21
“The Government now proposes to take up Gobichettipalayam division under the PBMC model in 2020-21.”
“பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர் மற்றும் பழனி ஆகிய கோட்டங்களில் இதுவரை செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டில் தஞ்சாவூர் கோட்டத்திலும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோபிசெட்டிப்பாளையம் கோட்டமும் செயல்பாடு அடிப்படையிலான ஒப்பந்த முறையின் கீழ் 2020-21 ஆம் ஆண்டில் கொண்டுவரப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.57 · ¶98 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Repair of inadequately maintained roads under Performance-Based Maintenance Contract · 2026-27
- part of Road maintenance · 2012-13 –2018-19
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years