Housing · dormant

Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural

6 budgets named it 7 year span 27,533 ₹ crore allocated 8,017 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2016-17 and named again in 5 later budgets, most recently 2022-23.

Allocated by budget year

⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: Indira Awas Yojana (IAY) houses (2011-12–2016-17), from 2011-12; Rajiv Awas Yojana (slum-free cities) (2011-12), from 2016-17. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2016-17 Rs.3,095.62 crores continuation project cost AIADMK · revised

“Under this scheme, this Government would construct totally 1,77,619 houses in rural areas at a total cost of Rs.3,095.62 crores in 2016-2017 itself, of which Rs.1,908.47 crores will be the State's share.”
““பிரதம மந்திரி வீட்டு வசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌)” (Pradhan Mantri Awaas Yojana - Rural) கீழ்‌, வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ வீடு ஒன்றுக்கு 70,000 ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 45,788 வீடுகளை சிறப்பு ஒதுக்கீடாகவும்‌, வீடு ஒன்றுக்கு 1.20 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 131831 வீடுகளை வழக்கமான ஒதுக்கீடாகவும்‌ மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில்‌ 40 சதவீதம்‌ நிதிப்‌ பகிர்வு மாநில அரசின்‌ பங்காகும்‌. எனினும்‌, வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு ஒரே சீராக இருக்கவேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌, கூரை அமைப்பதற்கு 50,000 ரூபாயை கூடுதலாக வழங்கி, அனைத்து வீடுகளுக்குமான மதிப்பீட்டுத்‌ தொகையை வீடு ஒன்றுக்கு 1.70 இலட்சம்‌ ரூபாயாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பெருந்தன்மையுடன்‌ உயர்த்தியுள்ளார்கள்‌. எனவே, இத்திட்டத்தின்‌ கீழ்‌, கிராமப்புறப்‌ பகுதிகளில்‌ 3,095.62 கோடி ரூபாய்‌ செலவில்‌ 177,619 வீடுகளை 2016-2017 ஆம்‌ ஆண்டிலேயே இந்த அரசு கட்டும்‌. இதில்‌, 1,908.47 கோடி ரூபாய்‌ மாநில அரசின்‌ பங்காக இருக்கும்‌. பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌) கீழ்‌ கட்டப்படும்‌ வீடுகளின்‌ எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌” கீழ்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 420 கோடி ரூபாய்‌ செலவில்‌ 20,000 வீடுகள்‌ கட்டப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.49 · ¶99 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.3,082.39 crore continuation project cost AIADMK

“Hence, out of the total cost of Rs.3,082.39 crore, Rs.1,761.98 crore would be the State’s contribution.”
“பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌)” (Pradhan Mantri Awaas Yojana - Rural) கீழ்‌ 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌, தமிழ்நாட்டில்‌ 1.78 இலட்சம்‌ வீடுகளைக்‌ கட்ட மத்திய அரசு அனுமதி அளித்து பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ “முதலமைச்சரின்‌ சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌” கீழ்‌ மேலும்‌ 20,000 வீடுகள்‌ 420 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌) கீழ்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ வீடு ஒன்றுக்கு 1.70 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 176 இலட்சம்‌ வீடுகளை இந்த அரசு கட்ட உள்ளது. இதில்‌ வீடு ஒன்றுக்கு மத்திய அரசின்‌ பங்கு 72,000 ரூபாயாகவும்‌, மாநில அரசின்‌ பங்கு கான்கிரீட்‌ கூரை அமைக்க வழங்கப்படும்‌ 50,000 ரூபாய்‌ உட்பட 98,000 ரூபாயாகவும்‌ இருக்கும்‌ எனவே, இந்த திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடான 3,082.39 கோடி ரூபாயில்‌ 1,761.98 கோடி ரூபாய்‌ மாநில அரசின்‌ நிதிப்‌ பங்காகும்‌. முதலமைச்சரின்‌ சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 420 கோடி ரூபாய்‌ செலவில்‌ 20,000 வீடுகள்‌ கட்டப்படும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌ மொத்தமாக 3,502.39 கோடி ரூபாய்‌ செலவில்‌ 1.96 இலட்சம்‌ வீடுகள்‌ கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶96) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.54 · ¶96 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.2,276.14 crore continuation AIADMK

“An amount of Rs.2,276.14 crore has been provided in the Budget Estimates 2019-2020 for PMAY (Gramin).”
“கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட்‌ வீடுகளைக்‌ கட்டித்‌ தருவதில்‌ தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. ஏற்கெனவே அறிவித்தபடி, 25 ஆண்டுகளுக்கு முன்னர்‌ கட்டப்பட்டு, பழுதடைந்த நிலையில்‌ உள்ள 45,594 வீடுகளை 227.97 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பழுது நீக்கம்‌ மற்றும்‌ மறுகட்டுமானம்‌ செய்யும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌) கீழ்‌, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ ஒரு இலட்சம்‌ வீடுகள்‌ கட்டுவதற்கு இந்த அரசு உத்தேசித்துள்ளது. ஒரு வீட்டிற்கு அலகுத்‌ தொகையாக 1.20 இலட்சம்‌ ரூபாய்‌ என மத்திய அரசு நிர்ணயித்து, அத்தொகையை மத்திய அரசும்‌, மாநில அரசும்‌ முறையே 60 சதவீதம்‌ மற்றும்‌ 40 சதவீதம்‌ என ஏற்றுள்ளபோதிலும்‌, கான்கிரீட்‌ மேற்கூரை அமைப்பதற்காக மாநில அரசு, கூடுதல்‌ நிதியாக 50,000 ரூபாயை ஒவ்வொரு வீட்டிற்கும்‌ வழங்குகிறது. இதனால்‌, ஒரு வீட்டிற்கான அலகுத்‌ தொகை 1.70 இலட்சம்‌ ரூபாயாகவும்‌, அதில்‌ மாநில அரசின்‌ பங்குத்‌ தொகை 98,000 ரூபாயாகவும்‌ உள்ளது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 2,276.14 கோடி ரூபாய்‌ பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்திற்காக (ஊரகம்‌) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்‌ போன்றே, வரும்‌ ஆண்டிலும்‌ மாண்புமிகு முதலமைச்சரின்‌ சூரிய மின்சக்தியுடன்‌ கூடிய பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 20,000 வீடுகள்‌ கட்டித்‌ தரப்படும்‌. இத்திட்டத்திற்காக, 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 420 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.32 · ¶54 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.2,662.16 crore continuation AIADMK

“The Government will take up the construction of 1.97 lakh tenements in 2019-2020 under the PMAY (Urban). A sum of Rs.2,662.16 crore has been provided in the Budget Estimates 2019-2020 for this purpose.”
“ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த 2014-2015 ஆம்‌ ஆண்டிலிருந்து, “பிரதம மந்திரி வீட்டுவசதி ௫கர்ப்புரம்‌) திட்டத்தின்‌” கீழ்‌ 26,601.02 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நகர்ப்புர குடிசைப்பகுதிகளில்‌ வாழும்‌ 5.85 இலட்சம்‌ குடும்பங்களுக்கு வீடுகள்‌ கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்திட்டத்தின்‌” கீழ்‌ 197 இலட்சம்‌ குடியிருப்புகளை கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ மேற்கொள்ளும்‌. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இதற்கென 2,662.16 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும்‌ அதனைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌, ஆற்றங்கரையோரம்‌ வசித்துவரும்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு மிகச்‌ சிறந்த மறுகுடியமர்த்தும்‌ நடைமுறைகளைப்‌ பின்பற்றி, உலக வங்கி உதவியுடன்‌ 4,647.50 கோடி ரூபாய்‌ செலவில்‌, 38,000 குடியிருப்புகளை அமைப்பதற்காக 'நகர்ப்புர ஏழை மக்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும்‌ வாழ்விட மேம்பாட்டுத்‌ திட்டம்‌” செயல்படுத்தப்படும்‌ என்பதை அறிவிப்பதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. சென்னை தவிர்த்த இதர நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ வீட்டுவசதியினை வழங்குவதற்கும்‌, நகர்ப்புர ஏழைகளுக்குப்‌ பயனளிக்கக்கூடிய வகையில்‌ தொழிலக மற்றும்‌ வாடகை வீட்டுவசதியினை போதுமான அளவில்‌ உருவாக்குவதற்கும்‌, நிலையான மற்றும்‌ அனைவரையும்‌ உள்ளடக்கிய வீட்டுவசதித்‌ திட்டத்தை 5,000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்துவதற்கும்‌ ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ கடனுதவி கோரப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.38 · ¶65 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.3,099.07 crore continuation AIADMK

“In the Budget Estimates 2020-21, a sum of Rs.3,099.07 crore has been provided for the Pradhan Mantri Awaas Yojana (Gramin) and Rs.500 crore has been provided for Chief Minister’s Green House Scheme.”
“மத்திய அரசின்‌ இந்திரா வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2011-12 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2015-16 ஆம்‌ ஆண்டு வரை 4,875.73 கோடி ரூபாய்‌ செலவில்‌ 4,41637 வீடுகள்‌ கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌) கீழ்‌, 8,968.39 கோடி ரூபாய்‌ செலவில்‌, 5,27,552 வீடுகள்‌ கட்டப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின்‌ பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2011-12 ஆம்‌ ஆண்டிலிருந்து 7,620 கோடி ரூபாய்‌ செலவில்‌, 3,80,000 வீடுகள்‌ கட்டப்பட்டுள்ளன. ஆட்சேபணையில்லா புறம்போக்கு நிலங்களில்‌ வசித்து வருபவர்களின்‌ வீட்டு மனைகளை வரன்முறை செய்து வருவாய்த்‌ துறை பட்டா வழங்கியுள்ள நபர்களில்‌ தகுதியான நபர்களுக்கு பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டம்‌ (ஊரகம்‌) மற்றும்‌ முதலமைச்சரின்‌ பசுமை வீடுகள்‌ திட்டங்களின்‌ கீழ்‌ 2020-21 ஆம்‌ ஆண்டு முதல்‌ வீடுகள்‌ கட்டித்‌ தரப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌) கீழ்‌ 2 இலட்சம்‌ வீடுகளும்‌, முதலமைச்சரின்‌ பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அனைத்துப்‌ பழங்குடியினர்‌ குடும்பங்களுக்கும்‌ வீட்டுவசதியை வழங்கும்‌ வகையில்‌, அவர்களுக்கான 8,803 வீடுகள்‌ உட்பட 20,000 வீடுகளும்‌ கட்டித்‌ தரப்படும்‌. முதலமைச்சரின்‌ பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, சூரியஒளித்‌ தகடுகளை நிறுவுவதற்கான தொகை, வீடு ஒன்றிற்கு 30,000 ரூபாய்‌, வீட்டின்‌ கட்டுமானச்‌ செலவிற்கான தொகையுடன்‌ சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த கட்டுமானச்‌ செலவு வீடொன்றுக்கு 2.1 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்திற்காக (ஊரகம்‌) 3,099.07 கோடி ரூபாயும்‌, முதலமைச்சரின்‌ பசுமை வீடுகள்‌ திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.42 · ¶74 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.3,700 crore continuation AIADMK

“A sum of Rs.3,700 crore has been provided in the Budget Estimates 2020-21, for the PMAY Urban programme.”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின்‌ கனவான, தமிழ்நாட்டில்‌ குடிசை இல்லாத நகரங்கள்‌ உருவாக்குவதில்‌ இந்த அரசு உறுதியாக உள்ளது. 2014-15 ஆம்‌ ஆண்டு முதல்‌ “பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ (கர்ப்புரம்‌) திட்டத்தின்‌ ', பயனாளிகள்‌ தாமாக தனி வீடுகள்‌ கட்டும்‌ பிரிவின்‌ (BLC) &ip 16,774.77 கோடி ரூபாய்‌ செலவில்‌ 5,53,244 வீடுகள்‌ கட்டுவதற்கு மத்திய அரசின்‌ அனுமதி பெறப்பட்டுள்ளது. இத்துடன்‌, வாங்கும்‌ திறனுக்கேற்ப கூட்டுமுயற்சி வீட்டுவசதி (AHP) பிரிவின்‌ கீழ்‌, 132,900 அடுக்கு மாடி குடியிருப்புகளை 13,677.02 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைப்பதற்கும்‌ மத்திய அரசின்‌ அனுமதி பெறப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, 112,876 தனி வீடுகள்‌ மற்றும்‌ 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குமான கட்டுமானப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, “பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ ௫கர்ப்புரம்‌) திட்டத்திற்காக” 3,700 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.52 · ¶91 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.8,017.41 crore continuation project cost DMK · revised

“In 2021-22 a further 2,89,877 houses at a total cost of Rs.8,017.41 crore will be taken up for construction.”
“முதன்முதலாக முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களது ஆட்சியில்தான்‌, கிராமப்புர ஏழைகளுக்கு கான்கிரீட்‌ கூரை வீடுகளை வழங்கும்‌ திட்டம்‌ இந்தியாவில்‌ முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டது. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, பிரதம மந்திரி வீட்டு வசதித்‌ (கிராமம்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்நாட்டில்‌ புதிய வீடுகளைக்‌ கட்ட நடவடிக்கைகள்‌ எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது. 2016-17 முதல்‌ 2019-20 வரையிலான காலகட்டத்தில்‌ ஏற்கெனவே கட்டுமானத்திற்காக எடுத்துக்‌ கொள்ளப்பட்ட 2,14,829 வீடுகள்‌ இன்றும்‌ நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. முழுமையடையாத அனைத்து வீடுகளும்‌ விரைந்து முடிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்வதுடன்‌, 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ மொத்தம்‌ 8,017.41 கோடி ரூபாய்‌ செலவில்‌, மேலும்‌ 2,89,877 வீடுகள்‌ கட்டப்படும்‌. கிராமப்புரங்களில்‌ தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும்‌ அடுத்த 5 ஆண்டுகளில்‌ வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்‌. தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான 50 ஆயிரம்‌ ரூபாயுடன்‌, கூடுதலாக மாநில அரசின்‌ தரப்பிலிருந்து 70 ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்படுவதால்‌, ஒரு வீட்டிற்கான அரசு மானியம்‌ 2.76 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும்‌ ஏழை, எளிய பயனாளர்களுக்கு விரைவாக, விலைக்‌ குறைவாக வீடுகள்‌ கட்டுவதற்காக, நவீன, விலை குறைவான கட்டுமான தொழில்நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும்‌. 2021-22ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில்‌ கிராமப்புர வீட்டு வசதித்‌ திட்டத்தில்‌, 3,548 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.28 · ¶62 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.3,548 crore continuation AIADMK · interim

“In the Interim Budget Estimates 2021-22, a total amount of Rs.3,548 crore has been provided for the PMAY (Gramin) scheme.”
“இந்திரா வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2011-12 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2015-16 ஆம்‌ ஆண்டு வரை 441637 வீடுகள்‌ கட்டுப்பட்டுள்ளன. 2016-17 ஆம்‌ ஆண்டில்‌ பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம்‌ இளரகம்‌) தொடங்கப்பட்டு, 2019-20 ஆம்‌ ஆண்டு வரை 5,27,552 வீடுகளின்‌ கட்டுமானம்‌ மேற்கொள்ளப்பட்டது. வீடு ஒன்றிற்கு 1.20 இலட்சம்‌ ரூபாய்‌ என மத்திய அரசால்‌ நிர்ணயிக்கப்பட்ட அலகுத்‌ தொகை போதுமானதாக இல்லாததால்‌, தற்போது தமிழ்நாடு அரசு அளித்து வரும்‌ மேற்கூரை மானியமான 50,000 ரூபாயுடன்‌, வீடு ஒன்றிற்கு, கூடுதலாக 70,000 ரூபாய்‌ அனுமதித்துள்ளது. இதன்‌ மூலம்‌ வீடு ஒன்றிற்கான தொகை 2.75 இலட்சம்‌ ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில்‌ பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும்‌ செலவினமான 35,000 ரூபாய்‌ உள்ளடங்கும்‌. இதன்‌ மூலம்‌, கட்டுமானத்திலுள்ள 2,57,925 வீடுகளை பயனாளிகள்‌ கட்டி முடிக்க உதவும்‌. 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்திற்காக (ஊரகம்‌) மொத்த தொகையாக 3,548 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.44 · ¶68 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.3,700 crore continuation AIADMK · interim

“A sum of Rs.3,700 crore has been provided in the Interim Budget Estimates 2021-22 for the Pradhan Mantri Awaas Yojana-Urban (PMAY-U).”

tnbudget_2021-22_speech_en_interim · p.50 · ¶78 · source PDF ↗ · on the map →

2022-23 Rs. 4,848 crore continuation DMK

“In order to expedite the completion of 1,77,922 houses sanctioned during 2016-20 under the Pradhan Mantri Awas Yojana (Rural), the State Government is providing a total amount of Rs.1,68,000 per house including Rs.70,000 as additional roofing cost. In addition, 2,30,788 new houses have been sanctioned during the current year. For this, Rs. 4,848 crore has been allocated in this Budget.”
“பிரதமரின்‌ வீட்டுவசதித்‌ கிட்டத்தின்‌ கீழ்‌, 2016-2020 ஆம்‌ ஆண்டுகளில்‌ ஒப்பளிக்கப்பட்ட 177,922 விடுகளின்‌ கட்டுமானப்‌ பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக வழங்கப்படும்‌ 70,000 ரூபாய்‌ உட்பட ஆண்டுதோறும்‌ விடு ஒன்றிற்கு மொத்தம்‌ 168,000 ரூபாய்‌ மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ 2,30,788 புதிய விடுகளுக்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 4,848 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.35 · ¶100 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.3,700 crore continuation DMK

“An amount of Rs.3,700 crore has been allocated towards Pradhan Mantri Awas Yojana (Urban) in the Budget.”
“பிரதம மந்திரி விட்டுவசதித்‌ திட்டத்திற்காக (கர்ப்புரம்‌) 3,700 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.41 · ¶119 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector