Welfare · dormant

Price Stabilisation Fund

6 budgets named it 7 year span 500 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2017-18.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 50 crores new project AIADMK · revised

“A Price Stabilisation Fund is being constituted with an initial corpus of ```` 50 crores for procurement of essential commodities facing erratic changes in price and their sale to consumers at cost price through co-operatives.”
“விலை உயர்வை நிரந்தரமாகக்‌ கட்டுப்படுத்த வேண்டுமெனில்‌ பொருட்களின்‌ தேவைக்கும்‌, உற்பத்திக்கும்‌ உள்ள இடைவெளியை சரிசெய்வதே உறுதியான தீர்வாக அமையும்‌ என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. எனினும்‌, விலை உயர்வைக்‌ கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய குறுகிய கால நடவடிக்கைகளையும்‌ இந்த அரசு எடுக்கும்‌. இதன்‌ அடிப்படையில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தைச்‌ செம்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாது துவரம்‌ பருப்பு, உளுத்தம்‌ பருப்பு, பாமாயில்‌, கோதுமை மாவு, மசாலாப்‌ பொட்டலங்கள்‌ ஆகியவற்றைச்‌ சலுகை விலையில்‌ வழங்கும்‌ பொது விநியோக சிறப்புத்‌ திட்டத்தை 31.12.2011 வரை இந்த அரசு நீட்டித்துள்ளது. விலை ஏற்றத்தின்‌ போக்கைத்‌ தொடர்ந்து கண்காணித்து, பொருட்களில்‌ நிலையற்ற விலை மாற்றங்கள்‌ ஏற்படும்போது மத்திய அரசின்‌ மூலமாக முன்பேர வர்த்தக ஆணையத்தின்‌ கவனத்திற்குக்‌ கொண்டு சென்று அத்தகைய பொருட்களை முன்பேர வர்த்தக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வோம்‌. இன்றியமையாப்‌ பொருட்களின்‌ விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அவற்றைக்‌ கொள்முதல்‌ செய்து கூட்டுறவு பண்டக சாலைகள்‌ மூலமாக நுகர்வோர்களுக்கு அடக்க விலையில்‌ வழங்குவதற்கு ஏதுவாக 50 கோடி ரூபாய்‌ தொடக்க நிதி இருப்புடன்‌ கூடிய ஒரு விலைக்‌ கட்டுப்பாட்டு நிதியம்‌ ஏற்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு சமையல்‌ எரிவாயு சிலிண்டர்‌ ஒன்றின்‌ விலையை 50 ரூபாய்‌ உயர்த்திய போதும்‌ நுகர்வோர்‌ நலன்‌ கருதி அதன்‌ விற்பனை விலையைக்‌ கட்டுப்படுத்தும்‌ நோக்குடன்‌, அதன்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை 1.7.2011 முதல்‌ ரத்து செய்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எடுத்த நடவடிக்கை மகளிர்‌ மத்தியில்‌ பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றுள்ளது. இதன்‌ மூலமாக மாநில அரசிற்கு 120 கோடி ரூபாய்‌ வரி வருவாய்‌ இழப்பு ஏற்பட்டாலும்‌ நுகர்வோருக்கு ஒரு சிலிண்டருக்கு 15 ரூபாய்‌ பயன்‌ கிடைக்கும்‌. தொழில்துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.31 · ¶49 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.50 crores continuation AIADMK

“The Price Stabilisation Fund of Rs.50 crores, constituted by this Government, was used in the current year for the purchase of dry chillies and tamarind to sell them at cost price in order to control their prices in the open market.”
“தேர்தல்‌ அறிக்கையில்‌ அளித்த வாக்குறுதியின்படி, 1.6.2011 முதல்‌, 1.85 கோடி அரிசி அட்டைதாரர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ விலையில்லா அரிசி வழங்கும்‌ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்தார்கள்‌. நாட்டிலேயே அனைவருக்கும்‌ முழுமையான உணவுப்‌ பாதுகாப்பு அளிக்கும்‌ இத்தகைய திட்டத்தைச்‌ செயல்படுத்தியுள்ள ஒரே மாநிலம்‌ தமிழகம்‌ மட்டும்தான்‌. துவரம்‌ பருப்பு, உளுத்தம்‌ பருப்பு, பாமாயில்‌, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றையும்‌ சலுகை விலையில்‌ இந்த அரசு வழங்கி வருகிறது. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌, உணவு மானியத்திற்காக 4,900 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அரசால்‌ 50 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ ஏற்படுத்தப்பட்ட விலை கட்டுப்பாடு நிதியம்‌ மூலம்‌, இந்த ஆண்டில்‌, மிளகாய்வற்றல்‌, புளி ஆகியவற்றை வாங்கி அடக்க விலையிலேயே விற்பனை செய்து, வெளிச்‌ சந்தையில்‌ அவற்றின்‌ விலையைக்‌ கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. தொழில்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.34 · ¶53 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.100 crores enhancement AIADMK

“This Government has already constituted a Price Stabilisation Fund of Rs.50 crores for procuring and distributing essential commodities at cost price in emergent situations. This Government will increase the size of this fund to Rs.100 crores.”

financedept_2013-14_speech_en · p.23 · ¶55 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.100 crores enhancement AIADMK

“The Price Stabilization Fund was created with the purpose of making targeted market interventions and now its corpus has been increased from Rs.50 crores to Rs.100 crores for effective implementation.”
“விலைவாசி உயர்வைக்‌ கட்டுப்படுத்த தமிழ்நாடு பல புதுமையான முயற்சிகளை எடுத்துள்ளது. சந்தை அளவில்‌, குறிப்பிட்ட விலைக்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ நோக்கத்தோடு, மாநில விலைக்‌ கட்டுப்பாட்டு நிதியம்‌ ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதியம்‌ திறன்பட செயல்படுவதற்காக அதற்கான நிதியம்‌ 50 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, மிகவும்‌ இன்றியமையாத பருப்புகள்‌ மற்றும்‌ சமையல்‌ எண்ணெய்‌ ஆகியன மிகக்‌ குறைந்த விலையில்‌ சிறப்பு பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படுவதால்‌, ஆண்டுதோறும்‌ 1,230 கோடி ரூபாய்‌ மானியச்‌ சுமை ஏற்படுகிறது. கூடுதலாக, பண்ணைப்‌ பசுமைக்‌ கடைகளைக்‌ கூட்டுறவு அமைப்புகள்‌ தொடங்கி குறைந்த விலையில்‌ காய்கறிகளை விற்று வருவதோடு, அம்மா மருந்தகங்கள்‌ குறைந்த விலையில்‌ மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. மளிகைப்‌ பொருட்களை நியாயமான விலையில்‌ கிடைக்கச்‌ செய்யும்‌ நோக்குடன்‌, அமுதம்‌ கூட்டுறவு அங்காடிகளை விரிவாக்கத்‌ தேவையான நடவடிக்கைகளை, 20 கோடி ரூபாய்‌ செலவில்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ மேற்கொண்டு வருகிறது. அம்மா உணவகங்கள்‌, அம்மா குடிநீர்‌ அம்மா சிமெண்ட்‌, அம்மா உப்பு போன்ற திட்டங்கள்‌ விலைவாசியைக்‌ கட்டுப்படுத்திட இந்த அரசு மேற்கொண்டுள்ள மேலும்‌ சில குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்‌. நீர்ப்‌ பாசனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.24 · ¶38 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores continuation AIADMK · interim

“Setting up of a Price Stabilization Fund with Rs.100 crores to procure and sell commodities at cost price.”
“ஏழை மற்றும்‌ நடுத்தர வருவாய்க்‌ குடும்பங்களை அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலை உயர்விலிருந்து பாதுகாப்பதற்காக, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பல பாராட்டத்தக்க முயற்சிகளை எடுத்துள்ளார்கள்‌. 6 விவசாயிகளையும்‌ நுகர்வோரையும்‌ நேரடியாக இணைப்பதற்காக 71 பண்ணை பசுமை நுகர்வோர்‌ கடைகள்‌ 6 பொருட்களை வாங்கி அடக்க விலையில்‌ விற்பதற்காக 100 கோடி ரூபாய்‌ அளவிலான விலை கட்டுப்படுத்தும்‌ நிதியம்‌ 6 மாநகரங்கள்‌ மற்றும்‌ நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ 530 அம்மா உணவகங்கள்‌ உ நியாயமான விலையில்‌ மருந்துகளை விற்பதற்காக 106 அம்மா மருந்தகங்கள்‌ உஅம்மா குடிநீர்‌ அம்மா உப்பு, அம்மா சிமெண்ட்‌ போன்ற புதுமையான திட்டங்கள்‌ இத்தகைய நடவடிக்கைகளால்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, விலைவாசி உயர்வின்‌ தாக்கத்திலிருந்து தங்களைப்‌ பாதுகாப்பார்‌ என்ற முழு நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.28 · ¶39 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.100 crore new project AIADMK

“A Price Stabilisation Fund with a corpus of Rs.100 crore has been constituted for market intervention measures to stabilize prices of essential commodities.”

tnbudget_2017-18_speech_en · p.27 · ¶45 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector