Education · dormant
Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA)
First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2011-12 ` 150 crores
“A sum of ` 150 crores has been provided in 2011-2012 to implement this scheme.”
“தொடக்கக் கல்வி நிலையில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வருவதால் மேனிலைக் கல்வி நிலையிலும் மாணவர் சேர்க்கை உயர்ந்து வருகிறது. மேனிலைக் கல்வியின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக, 2009-2010 ஆம் ஆண்டு முதல் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டம், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவதையும் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக தற்போதுள்ள இடைநிலைப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2009-2010 ஆம் ஆண்டில் மேனிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 1.39 விழுக்காடாக இருந்தது. மேனிலைப் பள்ளிகளிலிருந்து இடை நிற்றலை இன்னும் குறைப்பதற்கு பத்தாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பத்தாம் வகுப்பு, மேனிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தலா 1,500 ரூபாயும், மேனிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தலா 2,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக மாநில அரசால் வழங்கப்படும். இத்தொகை மாணவ மாணவியர்களின் பெயரில் மின்விசை நிதி நிறுவனம் போன்ற பொதுத் துறை நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைப்பீடு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் பொழுது அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 394.04 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 24,94,649 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் மூலம் மேனிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் மேலும் குறையும் என நம்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.50 · ¶82 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 216 crores
“Under the Rashtriya Madhyamik Shiksha Abhiyan started in 2009-2010, an allocation of ` 216 crores has been made and works have been taken up. 18 model schools were started in 18 backward blocks of 13 districts in Tamil Nadu under this scheme.” tnbudget_2011-12_speech_en_interim · p.19 · ¶45 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.1,069.51 crores
“During 2011-2012, we have upgraded 710 middle schools to high schools and improved the school infrastructure among other things with an outlay of Rs.1,069.51 crores under RMSA.”
“அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிப்பதற்கான 'அனைவருக்கும் கல்வி இயக்கம்” இந்த நிதியாண்டில் 1,891.42 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வியின் தரம், பள்ளிக் கட்டமைப்பு ஆகிய இரண்டு இனங்களில் இந்த இயக்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. வரும் நிதியாண்டில், இந்த திட்டம் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதில் மாநில அரசின் பங்களிப்பு 700 கோடி ரூபாயாகும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி கிடைக்கச் செய்யும் நோக்கோடு தேசிய இடைநிலை கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில், இத்திட்டம் 1,069.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இடைநிலைக் கல்வியை மேம்படுத்த இந்த திட்டத்திற்கு போதுமான நிதியுதவியை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.58 · ¶90 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.366.57 crores
“For the year 2013-2014, Rs.700 crores is provided under SSA, Rs.366.57 crores under RMSA and Rs.293 crores under NABARD assistance.” financedept_2013-14_speech_en · p.42 · ¶103 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.384.90 crore
“Under the Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Rs.384.90 crore has been allocated as the State's share in the Budget Estimates 2014-2015.”
“புதிய பள்ளிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், மாணவியருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கழிப்பறைகள், சமையல் கூடங்கள், சுற்றுச் சுவர்கள், ஆய்வகங்கள் போன்ற கட்டமைப்புகளைப் பள்ளிகளில் ஏற்படுத்திட அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம், நபார்டு வங்கியின் நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி கணிசமான முதலீடுகளை இந்த அரசு செய்துள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில் பள்ளிகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்ய நபார்டு நிதியுதவியின் மூலம் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு, மாநில அரசின் பங்காக, 2014-2015 ஆம் ஆண்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு, மாநில அரசின் பங்காக, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 384.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶101) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.50 · ¶101 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.816.19 crores
“Allocation of Rs.2,090.09 crores under Sarva Shiksha Abhiyan (SSA) and Rs.816.19 crores under Rashtriya Madyamik Shiksha Abhiyan (RMSA) are also provided.”
“இந்த அரசு அறிமுகப்படுத்திய புதுமையான திட்டங்களின் காரணமாக பள்ளிக் கல்வி வளர்ச்சியில் நமது மாநிலம் முன்னிலையில் உள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு 2,090.09 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்கு 816.19 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உயர் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.56 · ¶97 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,139.52 crores
“In the Interim Budget 2016-2017 Rs.2,329.15 crores is allocated for SSA andRs.1,139.52 crores is provided for RMSA.”
“பள்ளிகளில் தரமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச் சுவர்கள், மாணவ மாணவியர்களுக்கு தனித்தனி கழிவறைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் 4,165.95 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை வழங்குவதற்காக, நபார்டு வங்கியின் நிதியுதவியோடு 650.68 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 6,124 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ் 2,069 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக 2,329.15 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக 1,139.52 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.50 · ¶78 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,139.52 crores
“In the Revised Budget Estimates 2016-2017, Rs.2,329.15 crores under the SSA and Rs.1,139.52 crores under the RMSA have been provided.” tnbudget_2016-17_speech_en_revised · p.58 · ¶119 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,194 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.2,656 crore and Rs.1,194 crore have been provided for SSA and RMSA respectively.” tnbudget_2017-18_speech_en · p.63 · ¶114 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.850 crore
“Allocations of Rs.1,750 crore and Rs.850 crore have been made for SSA and RMSA respectively in the Budget Estimates 2018-2019.”
“'அனைவருக்கும் கல்வி இயக்கம்” (Sarva Shiksha Abhiyan) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின்” (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) கீழ், முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை, முறையே 1,312.04 கோடி ரூபாய் மற்றும் 93410 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்காத நிலையிலும், இத்திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து தொய்வின்றி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காகவும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காகவும், முறையே 1750 கோடி ரூபாய் மற்றும் 850 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை” திறம்படச் செயல்படுத்திட, 2018-2019 ஆம் ஆண்டிற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.62 · ¶106 · source PDF ↗ · on the map →
Linked projects
- Samagra Shiksha Abhiyan · successor of
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years
- Free laptop distribution scheme · 7 years