Culture & tourism · completed claimed
Renovation of 250 ancient temples
First announced in 2015-16 and named again in 5 later budgets, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2015-16 Rs.90 crores
“This Government has provided Rs.90 crores for renovating 250 ancient temples for renovation under the 13th Finance Commission grant.”
“அனைவராலும் வெகுவாக பாராட்டப்படும் அன்னதானத் திட்டம் தற்போது 518 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் 206 கோயில்களுக்கு வெகுவிரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் நிதியுதவியின் கீழ், 250 பழம்பெரும் கோயில்களைப் புதுப்பிப்பதற்கு இந்த அரசு 90 கோடி ரூபாய் வழங்கியது. கிராமப்புறக் கோயில்களுக்குத் தொடர்ந்து உதவும் வகையில், 2014-2015 ஆம் ஆண்டில் 1006 கிராமக் கோயில்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1006 கோயில்களுக்கும் 10.06 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, நாள்தோறும் ஒருகால பூஜை செய்வதற்கான திட்டத்தின் கீழ் 12,504 கோயில்கள் பயனடைந்துள்ளன. கோயில்களின் பொதுநல நிதியையும், கோயில் தேர்களுக்கான புதுப்பித்தல் நிதியையும் பயன்படுத்தி, 606 கோயில்களும், 123 கோயில் தேர்களும் புதுப்பிக்கப்பட்டன. வரும் ஆண்டிலும் இம்முயற்சிகள் அனைத்தும் தொடரும். சமூக நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.59 · ¶103 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.90 crores
“Under the 13th Finance Commission grant, Rs.90 crores was spent on renovation of 250 ancient temples in the past five years.”
“பதிமூன்றாவது நிதிக்குழுவின் நிதியுதவியைப் பயன்படுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில், 250 பழமையான கோயில்களைச் சீரமைப்பதற்காக 90 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டமான அன்னதானத் திட்டத்தின் கீழ், தினந்தோறும் 10.89 இலட்சம் ரூபாய் செலவில் 724 கோயில்களில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், 15.91 கோடி ரூபாய் செலவில் 143 கோயில் தேர்களையும், 3.31 கோடி ரூபாய் செலவில் 611 கோயில் குளங்களையும் புதுப்பிப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் நிதி ஆதாரம் இல்லாத 12,504 கோயில்களில், தலா ஒரு இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் 125.04 கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டு ஒருகால பூஜை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அருள்மிகு நாச்சியார் திருக்கோயில் உட்பட, 8,620 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.53 · ¶83 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.100 crore
“The Government will take steps to renovate and restore, ancient temples that are more than thousand years old without affecting their heritage. The works will be carried out at a total cost of Rs.100 crore.”
“தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக, தொன்மையான திருக்கோயில்கள் தமிழகமெங்கும் விரவியுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார் போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶153) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.51 · ¶153 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.100 crore
“Further, a grant of Rs.100 crore will be provided for renovation of thousand-year old heritage temples.”
“மேலும், 143 திருக்கோவில்களில் உள்ள திருக்குளங்களைச் சீரமைக்க 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்துசமய அறநிலையத் துறையின் பதிப்பகத் துறை மூலமாக 200 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை மற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள திருக்கோவில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சுற்றுலா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶147) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.68 · ¶147 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.125 crore
“In the year 2025-26, an amount of Rs.125 crore has been allocated for the restoration of temples that are over a thousand years old.”
“மேலும், 84 திருக்கோவில்களில் உள்ள திருக்குளங்களைச் சீரமைக்க 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்துசமய அறநிலையத் துறையின் பதிப்பகத் துறை மூலமாக 216 க்கும் மேற்பட்ட அறிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. 2025-26 ஆம் நிதியாண்டில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶177) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.77 · ¶177 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.418 crore
“With a budgetary allocation of Rs.418 crore, restoration and conservation works are also being carried out at 213 temples that are over a thousand years old.”
“இந்த அரசு எதிர்வரும் ஐந்தாண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்து திருக்குடமுழுக்கு நடத்திடவும், 250 திருக்குளங்களை டுசப்பனிடவும், 75 மரத் தேர்களை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அதிக அளவில் வருகை புரியும் திருக்கோயில்களில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், குளியலறைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் திட்டமிட்டுள்ளது. திருக்கோயில்களில் நிர்வாக அறங்காவலர்களின் நியமனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இவ்வரசு பொறுப்பேற்ற உடன் மிகக் குறுகிய காலத்தில் விரைவாக 9,205 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் அறிவிப்பு வெளியிட்டு, அறங்காவலர்களை நியமனம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 418 கோடி ரூபாய் அரசின் நிதி ஒதுக்கீட்டில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்களை புனரமைத்துப் பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இத்துறையில் பல்வேறு கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் இந்த அரசானது, திருக்கோயில்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு 708 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பகுதி-ஆ மாநில அரசின் நிதிநிலை மாண்புமிகு பேரவைத் தவைவர் அவர்களே,”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶176) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.83 · ¶176 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Renovation of 1,000 temples · 2011-12
- runs alongside Renovation of 143 temple cars · 2016-17
- runs alongside Renovation of 611 temple tanks · 2016-17
- runs alongside Renovation of temple cars and temple tanks · 2016-17 –2024-25
- runs alongside Repair and renovation of village and Adi-Dravidar/Tribal-area temples · 2016-17
- runs alongside Renovation and Thirukudamuzhukku at 3,000 temples, restoration of 250 temple tanks and repair of 75 temple cars · 2026-27
Nearby in the same sector
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years
- Development of Tamil language · 3 years