Welfare · recurring
RIGHTS programme
3 budgets named it 4 year span — ₹ crore allocated 1,763 ₹ crore whole-project cost DMK / AIADMK governments 1 district
First announced in 2021-22 and named again in 2 later budgets, most recently 2024-25. Districts: 15.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2021-22 Rs.1,702 crore
“This project will be a forerunner not only for other States but for other countries in the world as well and will be implemented at a total cost of Rs.1,702 crore over a period of 6 years.”
“இத்துறையில் மற்றுமொரு முன்மாதிரி திட்டமாக, உலக வங்கியின் உதவியுடன் Rights திட்டத்தை இந்த அரசு தொடங்கவுள்ளது. குறைபாடுகளை தொடக்க நிலையில் கண்டறிதல், தடுத்தல், பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளை பெருமளவில் அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் அவர்களால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதத் ஆகியவற்றுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் பிற நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளில் மொத்தம் 1,702 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶172) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.73 · ¶172 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.1,700 crore
“this Government has prepared a special project – RIGHTS – with a total outlay of Rs.1,700 crore. This project has been approved by the Screening Committee of the Department of Economic Affairs, Government of India and is currently under the consideration of the World Bank.”
“உடல் ஊனங்களை வருமுன் காப்பதற்கும், அதனைக் கையாளுவதற்கும் Of ஒருங்கிணைந்த அணுகுமுறையை செயல்படுத்தவும், மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காகவும், இந்த அரசால் 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘RIGHTS’ என்ற சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆய்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், தற்போது உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது. 2021-22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 688.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.78 · ¶125 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.1,763 crore
“RIGHTS project is being implemented at a cost of Rs.1,763 crore with financial assistance from World Bank. The main objective of this project is to create an inclusive society by promoting accessibility through creation of barrier-free structures and employment opportunities through vocational training. The project will be implemented in 15 districts in 2023-24.”
“மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரையே முத்தமிழறிஞர் கலைஞர்தான் தட்டினார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவிர்கள். இந்தத் துறை மிக முக்கியமானது என்பதால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, பணிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். உலக வங்கி நிதியுதவியுடன் 1763 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் (RIGHTS Project) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம், 2023-24 ஆம் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும். மேலும், விட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தண்ணார்வலர்களைக் கொண்ட 150 அண்மை மையங்கள் உருவாக்கப்படும். 49, மாநிலம் முழுவதும் 6.84 இலட்சம் மாற்றுத்திறணாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் ஓய்வூதியத்தை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள். இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 1444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.22 · ¶48 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.1,763
“The RIGHTS Project is being implemented at a cost of Rs.1,763 with financial assistance from the World Bank. This project is being implemented in 15 districts in the first phase, with the objective of providing comprehensive services in their vicinity and generating suitable employment opportunities for them through appropriate vocational training.”
“மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரைச் கட்டியது மட்டுமல்லாமல், அவர்களது நலனுக்காக பல்வேறு முன்னோடித் கிட்டங்களை அறிமுகப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதை நாடறியும். அந்த வழியில் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. உலக வங்கி நிதியுதவியுடன் 1763 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறணாளிகளின் உரிமைத் திட்டம் (RIGHTS Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதோடு, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தோடு, முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இல்லம் சார்ந்த சிகிச்சைகளும் வழங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶144) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.66 · ¶144 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Database of differently abled persons · 2023-24
- runs alongside Free retrofitted petrol scooters for differently-abled · 2016-17 –2018-19
- runs alongside Aids and appliances (differently abled) · 2021-22
- runs alongside Free bus travel for differently abled · 2021-22
Nearby in the same sector
- Short-stay homes for transgender persons · 1 year · shares a district
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years