Energy · dormant

Share capital support for new power projects

4 budgets named it 5 year span 7,500 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 3 later budgets, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2012-13 Rs.1500 crores continuation AIADMK

“Rs.1500 crores is provided in the Budget Estimates 2012- 2013 as share capital support for new power projects.”
“மின்சக்தித்‌ துறையில்‌ தமிழ்நாடு நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. மொத்தத்‌ தேவையில்‌ நமது சொந்த உற்பத்தித்‌ திறன்‌ 30 சதவீதம்‌ மட்டுமே உள்ள சூழ்நிலையில்‌, மற்ற ஆதாரங்களைச்‌ சார்ந்தும்‌, அதிக விலை கொடுத்தும்‌ மின்சாரத்தைப்‌ பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. தேவைக்கும்‌ விநியோகத்திற்கும்‌ இடையே உள்ள பெரும்‌ இடைவெளி காரணமாக, மின்வினியோக அமைப்பின்‌ நிலைத்‌ தன்மையை பராமரிப்பதற்காக மின்‌ வினியோகத்தை கட்டுப்படுத்தத்‌ தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. வெளி மாநிலங்களில்‌ கிடைக்கும்‌ மின்சாரத்தை நமது மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான மின்‌ வழித்தட வசதிகளில்‌ நெருக்கடி உள்ளதால்‌, மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கும்‌ வழிவகை இல்லை. எனவே, தற்போது நமது மாநிலத்திலேயே அமைக்கப்பட்டு வரும்‌ திட்டங்களைத்‌ துரிதப்படுத்தியும்‌, மாநில அரசு மூலமாகவோ கூட்டு முயற்சிகள்‌ மூலமாகவோ புதிய திட்டங்களை தொடங்கியும்‌, நமது மாநிலத்தின்‌ சொந்த மின்‌ உற்பத்தித்‌ திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு முக்கியத்துவம்‌ அளித்துவருகிறது. பாரத மிகுமின்‌ நிறுவனத்துடன்‌ இணைந்து செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த 1,600 மெகாவாட்‌ உடன்குடி உயர்‌ அழுத்த நிலை அனல்‌ மின்நிலையத்‌ திட்டம்‌, நான்கு ஆண்டுகளாகியும்‌ தொடங்கப்படாத நிலை உள்ளதால்‌, அக்கூட்டு முயற்சியைக்‌ கைவிட்டு, மாநிலத்‌ திட்டமாகவே 8,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ நிறைவேற்றப்படும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அண்மையில்‌ அறிவித்ததை மாண்புமிகு உறுப்பினர்கள்‌ அறிவார்கள்‌. புதிய மின்‌ உற்பத்தித்‌ திட்டங்களுக்காக பங்கு மூலதன உதவியாக இந்த 2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 1500 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.45 · ¶70 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.2,000 crore continuation AIADMK

“Continuing this support, Rs.5,400 crore has been provided in the Budget Estimates 2014-2015 for tariff subsidy and Rs.2,000 crore as share capital assistance.”
“2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்திற்கு 4,970 கோடி ரூபாய்‌ மின்‌ மானியமாக இந்த அரசால்‌ வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பங்கு மூலதன உதவியாக மேலும்‌ 2,153 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உதவியைத்‌ தொடர்ந்திட 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மின்‌ மானியமாக 5,400 கோடி ரூபாயும்‌, பங்கு மூலதன உதவியாக 2,000 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிதிச்‌ சீரமைப்புத்‌ திட்டத்தின்‌ ஒரு பகுதியாக அரசால்‌ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்தின்‌ 6,353 கோடி ரூபாய்‌ அளவிலான கடன்‌ தொகையில்‌, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ 1000 கோடி ரூபாயை இந்த அரசு ஏற்றுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ இந்நிறுவனத்தின்‌ கடன்‌ பொறுப்பில்‌ மேலும்‌ 2,000 கோடி ரூபாய்‌ அரசால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. எஞ்சிய கடன்‌ தொகையை வரும்‌ ஆண்டுகளில்‌ அரசு ஏற்றுக்‌ கொள்ளும்‌. நெடுஞ்சாலைகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.27 · ¶51 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.2,000 crores continuation AIADMK

“A sum of Rs.2,000 crores is provided in this Budget Estimates as share capital support to TANGEDCO.”
“மாநிலத்தின்‌ மின்சார மானியச்‌ செலவு தொடர்ந்து உயர்ந்துவரும்‌ நிலையில்‌ நிதிச்‌ சுமை அதிகரித்து வந்தாலும்‌, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள்‌ வரை வீடுகளில்‌ மின்சாரம்‌ பயன்படுத்தும்‌ நுகர்வோருக்கு, அண்மையில்‌ உயர்த்தப்பட்ட மின்‌ கட்டணத்தை அரசே ஏற்றுக்‌ கொண்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ மானியம்‌, பங்கு மூலதன உதவி, பண இழப்பிற்கான நிதியுதவி, கடனைத்‌ திருப்பிச்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ அரசால்‌ எற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள்‌ ஆகியவற்றிற்காக மொத்தம்‌ 11,748 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்‌ பகிர்மானம்‌ மற்றும்‌ உற்பத்திக்‌ கழகத்திற்கு இந்த அரசு நிதியுதவியாக வழங்கியுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு 7,136 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ தமிழ்நாடு மின்‌ பகிர்மானம்‌ மற்றும்‌ உற்பத்திக்‌ கழகத்திற்கு வழங்கப்படும்‌ பங்கு மூலதன உதவிக்காக 2,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மின்சாரத்‌ துறைக்கு மொத்த நிதியுதவியாக 13,586 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.32 · ¶49 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,000 crores continuation AIADMK · interim

“Rs.2,000 crores as share capital assistance”
“தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான நிறுவனத்தின்‌ நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, நிதி சீரமைப்புத்‌ திட்டத்தில்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இந்நிறுவனத்தின்‌ 6,353 கோடி ரூபாய்‌ அளவிலான குறுகியகாலக்‌ கடன்களுக்கு அரசே பொறுப்பேற்றுக்‌ கொண்டது. இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்‌ மின்‌ கட்டண மானியத்தையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பெருமளவு உயர்த்தி வழங்கியுள்ளார்கள்‌. 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ 287.12 கோடி ரூபாயாக இருந்த விவசாயத்திற்கான இலவச மின்சார மானியம்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 3,319.30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2011 ஆம்‌ ஆண்டு மே திங்கள்‌ முதல்‌, 15,111.74 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும்‌, 9,694.26 கோடி ரூபாயை கடனாகவும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. 2016-2017 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மின்சார மானியமாக 7,370.33 கோடி ரூபாயும்‌, பங்கு மூலதன உதவியாக 2,000 கோடி ரூபாயும்‌, கடனுதவியாக 1483 கோடி ரூபாயும்‌ உட்பட ஆகமொத்தம்‌ மின்‌ துறைக்கு 13,819.03 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.32 · ¶46 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector