Welfare · dormant

Special project for basic infrastructure in tribal habitations

1 budget named it 1 year span ₹ crore allocated 660 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2020-21 Rs.660 crore new project project cost AIADMK

“I am very happy to announce that this Government will launch a special project to ensure that all basic infrastructure facilities including all- weather houses, link roads, street lights, solar lights and drinking water facilities are provided in all the tribal habitations in the State. A detailed survey has been undertaken and a comprehensive plan at a cost of Rs.660 crore has been prepared which includes a component of Rs.265 crore for housing.”
“அனைத்து காலநிலைகளுக்குமான வீடுகள்‌, இணைப்புச்‌ சாலைகள்‌, தெரு விளக்குகள்‌, சூரியஒளி விளக்கு வசதிகள்‌, வீட்டு வசதி மற்றும்‌ பாதுகாப்பான குடிநீர்‌ வசதிகள்‌ போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும்‌, அனைத்து பழங்குடியினர்‌ குடியிருப்புகளில்‌ ஏற்படுத்துவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்‌ என்று தெரிவிப்பதில்‌ நான்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. இத்திட்டத்திற்காக, மாநிலத்திலுள்ள அனைத்து பழங்குடியினர்‌ குடியிருப்புகளிலும்‌ விரிவான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, வீட்டு வசதிக்கான 265 கோடி ரூபாய்‌ உட்பட, 660 கோடி ரூபாயில்‌ விரிவானதொரு செயல்‌ திட்டம்‌ தயாரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின்‌ பசுமை வீடுகள்‌ திட்ட நிதியின்‌ கீழ்‌, 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, வீடுகள்‌ தேவைப்படும்‌ அனைத்து 8,803 குடும்பங்களுக்கும்‌, தலா 3,00,000 ரூபாய்‌ செலவில்‌ வீடுகள்‌ கட்டித்‌ தரப்படும்‌. வீடு கட்டுவதற்கு ஆகும்‌ செலவில்‌, ஒரு வீட்டிற்கு கூடுதலாக ஆகும்‌ செலவான 90,000 ரூபாய்‌, பழங்குடியினர்‌ நலத்திற்கான வரவு-செலவு ஒதுக்கீடுகளில்‌ இருந்து ஒரு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்‌. நிதி ஒதுக்கீட்டின்‌ எஞ்சிய 395 கோடி ரூபாய்‌, அணுகு சாலைகள்‌, தெரு விளக்குகள்‌, சூரிய ஒளி விளக்கு வசதி மற்றும்‌ பாதுகாப்பான குடிநீர்‌ வசதிகளை ஏற்படுத்துவதற்காக மூன்று ஆண்டுகளாகப்‌ பிரித்து வழங்கப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 210 கோடி ரூபாய்‌ இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கி நிறைவுறா பணிகளுக்கு நடப்பாண்டில்‌ 40 கோடி ரூபாய்‌ தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶167) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.92 · ¶167 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector