Housing · recurring

Tamil Nadu Housing and Habitat Development for Urban Poor

3 budgets named it 8 year span 1,757 ₹ crore allocated 4,648 ₹ crore whole-project cost AIADMK / TVK governments

First announced in 2019-20 and named again in 2 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

⇄ marks the budget where the name changes. This scheme continues an earlier one under a new name: BSUP / Integrated Housing and Slum Development Programme (2011-12); Basic Services for Urban Poor (BSUP) tenements (2014-15). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2019-20 Rs.4,647.50 crore new project project cost AIADMK

“I am glad to announce that ‘Tamil Nadu Housing and Habitat Development for Urban Poor’ programme, with World Bank assistance, will be launched to construct 38,000 tenements at a cost of Rs.4,647.50 crore in Chennai and surrounding areas for poor families living at river margins by adopting best resettlement practices.”
“ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த 2014-2015 ஆம்‌ ஆண்டிலிருந்து, “பிரதம மந்திரி வீட்டுவசதி ௫கர்ப்புரம்‌) திட்டத்தின்‌” கீழ்‌ 26,601.02 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நகர்ப்புர குடிசைப்பகுதிகளில்‌ வாழும்‌ 5.85 இலட்சம்‌ குடும்பங்களுக்கு வீடுகள்‌ கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்திட்டத்தின்‌” கீழ்‌ 197 இலட்சம்‌ குடியிருப்புகளை கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ மேற்கொள்ளும்‌. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இதற்கென 2,662.16 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும்‌ அதனைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌, ஆற்றங்கரையோரம்‌ வசித்துவரும்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு மிகச்‌ சிறந்த மறுகுடியமர்த்தும்‌ நடைமுறைகளைப்‌ பின்பற்றி, உலக வங்கி உதவியுடன்‌ 4,647.50 கோடி ரூபாய்‌ செலவில்‌, 38,000 குடியிருப்புகளை அமைப்பதற்காக 'நகர்ப்புர ஏழை மக்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும்‌ வாழ்விட மேம்பாட்டுத்‌ திட்டம்‌” செயல்படுத்தப்படும்‌ என்பதை அறிவிப்பதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. சென்னை தவிர்த்த இதர நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ வீட்டுவசதியினை வழங்குவதற்கும்‌, நகர்ப்புர ஏழைகளுக்குப்‌ பயனளிக்கக்கூடிய வகையில்‌ தொழிலக மற்றும்‌ வாடகை வீட்டுவசதியினை போதுமான அளவில்‌ உருவாக்குவதற்கும்‌, நிலையான மற்றும்‌ அனைவரையும்‌ உள்ளடக்கிய வீட்டுவசதித்‌ திட்டத்தை 5,000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்துவதற்கும்‌ ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ கடனுதவி கோரப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.38 · ¶65 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.504 crore new project AIADMK

“Under Investment Project Financing, the Tamil Nadu Housing and Habitat Development Project with an outlay of Rs.504 crore and World Bank financing of US Dollars 50 Million will be taken up. A sum of Rs.169.20 crore has been provided in the Budget Estimates for 2020-21 for this project.”
“சென்ற 2019 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ வாஷிங்டன்‌ நகரில்‌ அமைந்துள்ள உலக வங்கியின்‌ தலைமையகத்தில்‌ அதன்‌ உயர்நிலை நிர்வாகிகளை நாங்கள்‌ சந்தித்த பின்னர்‌, தமிழ்நாடு அரசின்‌ வீட்டுவசதி துறைக்கு உலக வங்கியிடம்‌ கோரியிருந்த நிதியுதவிக்கான ஒப்புதல்‌ இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளதை தெரிவிப்பதில்‌ நான்‌ பெருமகிழ்ச்சி அடைகிறேன்‌. இரண்டு நிதி வசதிகள்‌ மூலம்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. தமிழ்நாடு வீட்டுவசதித்‌ துறை வலுவூட்டல்‌ திட்டத்தின்‌ கீழ்‌, கொள்கை சீர்திருத்த நடவடிக்கைகள்‌ மீது கவனம்‌ செலுத்துதல்‌, சமூகத்தில்‌ உள்ள அனைவரும்‌ பயனடையும்‌ வகையில்‌ திறமையாகச்‌ செயல்படும்‌ ஒரு வீட்டுவசதி சந்தையை உருவாக்கல்‌, பொதுத்‌ துறையில்‌ ஏழை எளியோர்க்கு வீடுகள்‌ கட்டித்‌ தரவும்‌ வகை செய்யும்‌. இத்திட்டத்திற்கான வளர்ச்சிக்‌ கொள்கை வடிவமைப்பு நிதியாக 45 கோடி அமெரிக்க டாலர்‌ நிதியுதவி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட நிதியுதவியாக 20 கோடி அமெரிக்க டாலர்‌ நிதியுதவி வழங்கப்படும்‌. முதலீட்டுத்‌ திட்டங்களுக்கான நிதி வசதியின்‌ கீழ்‌, 504 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டுச்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட உள்ள, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும்‌ வாழ்விட மேம்பாட்டுத்‌ திட்டம்‌, 5 கோடி அமெரிக்க டாலர்‌ நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்‌. 2020- 21 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்கென 169.20 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.52 · ¶92 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.1,253 crore continuation TVK · revised

“Under these initiatives, 24,131 multi-storied tenements currently at various stages of progress will be completed this year, and construction of a further 14,194 multi-storied tenements will commence during the year. An amount of Rs.1,253 crore has been allocated for this scheme.”
“துரித நகர்மயமாக்கல்‌ காரணமாக மிகவும்‌ பாதிக்கப்படும்‌ நகர்ப்புர எழை மக்களின்‌ வாழ்க்கை நிலையினை மேம்படுத்தும்‌ நோக்குடன்‌, தமிழ்நாடு அரசு, அடிப்படை மற்றும்‌ சமூக உட்கட்டமைப்பு வசதிகளுடன்‌ அடுக்குமாடி குடியிருப்புகள்‌ கட்டுதல்‌, பயனாளிகள்‌ தாமாக விடுகள்‌ கட்டும்‌ முறையின்கீழ்‌ தனி விடுகள்‌ கட்டுதல்‌, வாழ்வாதார மற்றும்‌ மேம்பாட்டுத்‌ கிட்டங்கள்‌ உள்ளிட்ட பல்வேறுத்‌ கிட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டப்‌ பணிகளின்‌ கீழ்‌, பல்வேறு நிலைகளில்‌ முன்னேற்றத்தில்‌ உள்ள 24131 அடுக்குமாடிக்‌ குடியிருப்புகளை கட்டும்‌ பணிகள்‌ இவ்வாண்டில்‌ முடிவடைவதுடன்‌, 14194 அடுக்குமாடிக்‌ குடியிருப்புகள்‌ கட்டும்‌ பணிகள்‌ இவ்வாண்டில்‌ தொடங்கப்படும்‌. இத்திட்டத்திற்காக 1253 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.52 · ¶104 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector