Urban · dormant

Tamil Nadu Sustainable Urban Development Project

8 budgets named it 8 year span 5,960 ₹ crore allocated 3,831 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2014-15 and named again in 7 later budgets, most recently 2021-22. Places named: Erode, Vellore, Hosūr.

Allocated by budget year

Located at Erode · Erode district

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2014-15 Rs.3,600 crore new project AIADMK

“this Government is proposing a new infrastructure project, namely, the Tamil Nadu Sustainable Urban Development Project with the aid of the same funding agency. The total project size would be Rs.3,600 crore with Rs.2,400 crore as loan component.”
“உலக வங்கி உதவியுடன்‌ தமிழ்நாடு மூன்றாவது நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தினை இந்த அரசு வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற வளர்ச்சி நிதி ஆதார அணுகுமுறையைப்‌ பின்பற்றி, அதே நிதி நிறுவனத்தின்‌ உதவியோடு தற்போது தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புரக்‌ கட்டமைப்புத்‌ திட்டம்‌ என்ற புதிய திட்டத்தைச்‌ செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ மொத்த மதிப்பீடு 3,600 கோடி ரூபாயாக இருக்கும்‌. இதில்‌ 2,400 கோடி ரூபாய்‌ கடன்‌ உதவியும்‌ அடங்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.42 · ¶83 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.152 crores new project AIADMK

“sanction has been accorded for the implementation of the Tamil Nadu Sustainable Urban Development Project (TNSUDP) at a total cost of Rs.2,212.89 crores including a massive storm water drain project for a part of Chennai City at a cost of Rs.1,101.43 crores. A sum of Rs.152 crores has been allocated in the Budget Estimates 2015-2016 for this project.”
“உலக வங்கி உதவியுடன்‌ தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித்‌ திட்டம்‌-।| வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தப்பட்டதைத்‌ தொடர்ந்து, 2,212.89 கோடி ரூபாய்‌ மொத்த ஒதுக்கீட்டில்‌ தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புர கட்டமைப்புத்‌ திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின்‌ ஒரு பகுதியில்‌ 1,101.43 கோடி ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்படவுள்ள பெரும்‌ மழைநீர்‌ வடிகால்‌ பணியும்‌ இத்திட்டத்தில்‌ அடங்கும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 152 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.47 · ¶77 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.3,831 crores continuation project cost AIADMK · interim

“Consequent to the successful implementation of the Tamil Nadu Urban Development Programme–III, the Tamil Nadu Sustainable Urban Development Programme (TNSUDP) with an outlay of Rs.3,831 crores has been taken up with World Bank assistance. Under this project, works relating to 13 projects worth Rs.2,212.89 crores are under progress.”
“தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித்‌ திட்டம்‌-1।। வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தப்பட்டதைத்‌ தொடர்ந்து, 3,831 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ “தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித்‌ திட்டம்‌” (TNSUDP) உலக வங்கியின்‌ உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 2,212.89 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான 13 திட்டப்‌ பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில்‌ உள்ள அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும்‌, படிப்படியாக பாதாளச்‌ சாக்கடை திட்டப்‌ பணிகளை மேற்கொள்ள வேண்டும்‌ என்ற இலட்சிய முடிவை இந்த அரசு எடுத்து, அதன்படி, 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து, மாநிலத்தில்‌ உள்ள 52 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌ 3,500.89 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பாதாளச்‌ சாக்கடை திட்டப்‌ பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.41 · ¶63 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.399.39 crores continuation AIADMK · revised

“In this Revised Budget Estimates 2016-2017, a sum of Rs.399.39 crores has been allocated for TNSUDP.”

tnbudget_2016-17_speech_en_revised · p.47 · ¶95 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.563 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.563 crore has been allocated for TNSUDP.”

tnbudget_2017-18_speech_en · p.50 · ¶88 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.712.70 crore continuation AIADMK

“The State has been implementing the World Bank assisted 'Tamil Nadu Sustainable Urban Development Programme' (TNSUDP) since 2015 at a project cost of Rs.3,831 crore. Under this scheme, Rs.854.59 crore has been spent in 13 urban local bodies so far. In the Budget Estimates of 2018-2019, Rs.712.70 crore has been allocated for TNSUDP.”
“நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின்‌ பங்குத்‌ தொகையினை வழங்கி, அம்ருத்‌ திட்டத்தினைச்‌ செயல்படுத்திட, 4,790 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன்‌ 'தமிழ்நாடு நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத்‌ திட்டத்தினை (Tamil Nadu Urban Flagship Investment Programme) மாநில அரசு செயல்படுத்தும்‌. இந்தத்‌ திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி விரைவில்‌ தனது ஒப்புதலை அளிக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 ஆம்‌ ஆண்டு முதல்‌, உலக வங்கி நிதியுதவியுடன்‌, தமிழ்நாடு நிலையான நகர்ப்புர வளர்ச்சித்‌ திட்டத்தை (TNSUDP) 3,831 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, இதுவரை 13 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌, 854.59 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, “தமிழ்நாடு நிலையான நகர்ப்புர வளர்ச்சித்‌ திட்டத்திற்கு” 712.70 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌, 200 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நபார்டு வங்கி நிதியுதவியுடன்‌, பேரூராட்சிகளில்‌ உள்ள 400 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளைத்‌ தரம்‌ உயர்த்துவதற்கான மேம்பாட்டுப்‌ பணிகளை இந்த அரசு செயல்படுத்தும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.49 · ¶81 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.3,831 crore continuation project cost AIADMK

“The State has been implementing the World Bank assisted ‘Tamil Nadu Sustainable Urban Development Programme’ (TNSUDP) since 2015 at a project cost of Rs.3,831 crore.”

tnbudget_2019-20_speech_en · p.35 · ¶58 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.532.54 crore continuation AIADMK

“Under the World Bank assisted Tamil Nadu Sustainable Urban Development Programme implemented at a cost of Rs.3,831 crore, Erode, Vellore and Hosur have been selected as model cities to demonstrate effective models of urban management. In the Budget Estimates for 2020-21, a sum of Rs.532.54 crore has been provided for this project.”
“உலகவங்கி நிதியுதவியுடன்‌, 3,831 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌ தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ (Tamil Nadu Sustainable Urban Development Project (TNSUDP)) கீழ்‌ ஈரோடு, வேலூர்‌ மற்றும்‌ ஒசூர்‌ ஆகிய நகரங்கள்‌ திறன்மிகு நகர்ப்புர மேலாண்மைக்கான மாதிரி நகரங்களாகத்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்காக 532.54 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கியத்துவம்‌ வாய்ந்த தொழில்‌ வழித்தடங்களில்‌ நகர்ப்புர மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன்‌, 8,155.81 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌ தமிழ்நாடு நகர்ப்புர முதலீட்டுத்‌ திட்டம்‌ (Tamil Nadu Urban_ Flagship Investment Programme (TNUFIP)) பெரிதும்‌ உதவும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, மதுரை, கோயம்புத்தூர்‌, வேலூர்‌, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர்‌, ஆம்பூர்‌ மற்றும்‌ இராஜபாளையம்‌ ஆகிய இடங்களில்‌, பாதாள சாக்கடைத்‌ திட்டம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ திட்டம்‌ ஆகியவற்றைச்‌ செயல்படுத்துவதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 406 கோடி ரூபாய்‌ ஆகும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.46 · ¶82 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.3,831 crore continuation project cost AIADMK · interim

“The World Bank assisted Tamil Nadu Sustainable Urban Development Project (TNSUDP) is being implemented at a total cost of Rs.3,831 crore from 2015.”

tnbudget_2021-22_speech_en_interim · p.48 · ¶76 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector