Industry · dormant
Trade Facilitation Centres
1 budget named it 1 year span 15 ₹ crore allocated AIADMK government
First announced in 2017-18 and not named in any budget since. Places named: Madurai, Salem, Tiruchirappalli.
Located at Madurai · Madurai district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2017-18 Rs.15 crore
“The Government will provide 50 percent grant, subject to an overall ceiling of Rs.5 crore to MSME associations for setting up Trade Facilitation Centres at Madurai, Salem and Tiruchirapalli. An allocation of Rs.15 crore has been made for this purpose in 2017-2018.”
“குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகள், நிலைக்கத்தக்க தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உள்ளதாலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாலும், அரசு அதனை ஊக்குவிக்கிறது. எனவே, பின்வரும் சிறப்புத் திட்டங்கள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை இந்த அரசு மேலும் ஊக்குவிக்கும். * குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான மூலதன மானிய ஒதுக்கீடு, தற்போதைய அளவான 80 கோடி ரூபாயிலிருந்து, 2017-2018 ஆம் ஆண்டிற்கு இரு மடங்காக அதாவது 160 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். மதுரை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் வணிக ஊக்குவிப்பு மையங்களை (Trade Facilitation Centre) அமைத்திட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் சங்கங்களுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் நிதிக்கு மிகாமல் 50 சதவீத மானியத்தை அரசு வழங்கும். 2017-2018 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்தகைய தொழில் அலகுகளுக்கு சந்தை வாய்ப்புகளை பரவலாக்கிடும் பொருட்டு, பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படும். இதற்காக 2017-2018 ஆம் ஆண்டிற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுச் சந்தையில் போட்டியிடுவதற்கான திறனை அதிகரிப்பதற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு ஆதரவு அளிப்பதற்கான ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகளில் மின் சேமிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகளுக்கு மின்திறன் தணிக்கையின் அடிப்படையில் உரிய சலுகைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். * குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகளின் தரம் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்திட, மூன்று தரக் கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை ஆய்வகங்கள் சிட்கோ பூங்காக்களில் நிறுவப்படும். உ குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகள் செயலிழந்துள்ளதன் காரணங்களை தொழில் வாரியாக கண்டறிவதற்கும், அத்தகைய தொழில்கள் மீண்டும் செயல்பட புத்துயிரூட்டுவதற்கும் உரிய உதவி செய்ய அரசு ஒரு சிறப்பு ஆய்வை மேற்கொள்ளும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.45 · ¶80 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Trade Facilitation Centre at Siruseri · 2020-21
- runs alongside International Exhibition with Buyer Seller Trade Meet · 2017-18
- runs alongside Five Common Facility Centres · 2021-22
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years