Welfare · recurring

Tribal Sub Plan (TSP)

6 budgets named it 16 year span 5,184 ₹ crore allocated AIADMK / TVK governments

First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 246 crores continuation AIADMK · revised

“During 2011-2012, ` 246 crores have been allocated for the tribal development under TSP, which is 1.05 percent of the total Annual Plan Outlay.”
“இந்த அரசு பழங்குடியினர்‌ நலனில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்திவருகிறது. பழங்குடியினர்‌ மேம்பாட்டுக்குப்‌ போதுமான நிதியொதுக்கத்தினை உறுதி செய்யும்‌ பொருட்டு, 1976-1977 ஆம்‌ ஆண்டிலிருந்து பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ பழங்குடியினர்‌ நலனுக்காக 246 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஆண்டுத்‌ திட்ட ஒதுக்கீட்டில்‌ 1.05 விழுக்காடாகும்‌. பழங்குடியினர்‌ வாழும்‌ பகுதிகளில்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்‌, குடிநீர்‌ போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும்‌ இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ 2750) ஆம்‌ பிரிவின்படியும்‌ சிறப்பு மத்திய நிதியுதவியுடன்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு, 2011-2012 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 13.91 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அழிவின்‌ விளிம்பு நிலையில்‌ உள்ள குறிப்பிட்ட பழங்குடியினர்‌ நலனை மேம்படுத்தும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 10.76 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.73 · ¶126 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2013-14 Rs.489.48 crores enhancement AIADMK

“The size of the Tribal Sub Plan (TSP) has been increased from Rs.349.30 crores in 2012-2013 to Rs.489.48 crores in 2013-2014, which is 1.32% of the Annual Plan size.”
“2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 349.30 கோடி ரூபாயாக இருந்த பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டத்திற்கான ஒதுக்கீடு, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ 489.48 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில்‌ இது 1.32 சதவீதமாகும்‌. அவசியமான கட்டமைப்பு வசதிகளான குடிநீர்‌ வழங்கல்‌, கிராமங்களுக்கு சாலை இணைப்புகள்‌ ஏற்படுத்துதல்‌, வீடுகள்‌ கட்டுதல்‌ போன்றவை இந்த பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டத்தின்‌ முக்கியக்‌ கூறுகள்‌ ஆகும்‌. குறிப்பாக, அருகிவரும்‌ பழங்குடியின மக்களின்‌ மேம்பாட்டிற்காக 25.72 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடுபினா வளர்ச்சிக்கான சிறப்புக்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.54 · ¶131 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.435.55 crore continuation AIADMK

“A sum of Rs.435.55 crore has been allocated under the Tribal Sub-Plan (TSP) for the welfare of Scheduled Tribes being implemented through 17 Departments.”
“பழங்குடியினர்‌ நலன்‌ காக்க 17 துறைகளின்‌ மூலமாகச்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டத்திற்காக 435.55 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்தத்‌ திட்ட ஒதுக்கீட்டில்‌ 1.03 சதவீதமாகும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.60 · ¶121 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.657.75 crores continuation AIADMK

“Similarly, Rs.657.75 crores have been provided for the TSP which is 1.19 per cent of the plan allocation.”
“ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ வாழ்க்கை நிலையை உயர்த்தி, அவர்களுக்கு அதிகாரம்‌ அளித்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ துணைத்‌ திட்டம்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டங்களுக்கு வரையறைகளின்படி நிதி ஒதுக்கீடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர்‌ துணைத்‌ திட்டத்திற்கு 11,274.16 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2015-2016 ஆம்‌ ஆண்டின்‌ திட்ட ஒதுக்கீட்டில்‌ 20.46 சதவீதமாகும்‌. இதுபோன்றே, பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டத்திற்கு 657.75 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திட்ட ஒதுக்கீட்டில்‌ 119 சதவீதமாகும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶110) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.62 · ¶110 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.1,276.24 crore continuation AIADMK · interim

“A total amount of Rs.13,967.58 crore has been provided for the Scheduled Caste Special Component Plan and Rs.1,276.24 crore for the Tribal Sub Plan in the Interim Budget Estimates 2021-22.”
“ஆதி திராவிடர்கள்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ நிலைக்கத்தக்க சமூகப்‌ பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஆதி திராவிடர்‌ சிறப்புக்‌ கூறுகள்‌ திட்டத்திற்காக 13,967.58 கோடி ரூபாயும்‌, பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டத்திற்காக 1,276.24 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கு கல்வி வழங்குவதன்‌ மூலம்‌, அதிகாரம்‌ அளிப்பதற்கு இந்த அரசு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. 2020-21 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையான 4,109.53 கோடி ரூபாயில்‌ 84.14 சதவீதம்‌ அதாவது 3,457.56 கோடி ரூபாய்‌ கல்வி மற்றும்‌ கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக, 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1932.19 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 125,154 மாணவ மாணவியர்கள்‌ தங்கும்‌ வகையில்‌ 1,681 விடுதிகள்‌ அரசால்‌ நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி விடுதி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர உணவுக்‌ கட்டணம்‌ 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும்‌, கல்லூரி விடுதி மாணவ மாணவியர்களுக்கான உணவுக்‌ கட்டணம்‌ 1000 ரூபாயிலிருந்து 1100 ரூபாயாகவும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவர்களுக்கு 148,812 மிதிவண்டிகள்‌ வழங்கப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.74 · ¶119 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.2,079 crore continuation TVK · revised

“while Rs.2,079 crore has been allocated under the Tribal Sub-Plan for the welfare of Tribal communities.”
“ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக்‌ கூறுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 25,225 கோடி ரூபாயும்‌, பழங்குடியினருக்கான துணைத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2,079 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சமூகந்ீதித்‌ துறைக்கு 3,937 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.24 · ¶42 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector