Urban · completed claimed
Underground sewerage systems (Trichy Corporation, 21 Municipalities, 29 Town Panchayats)
First announced in 2014-15 and named again in 4 later budgets, most recently 2021-22. Districts: namakkal. Places named: Tiruchirappalli, Nagapattinam, Kallakurichi, Erode.
Allocated by budget year
Located at Tiruchirappalli · Tiruchirappalli district
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2014-15 Rs.2,433.79 crore
“Sanction has been given for underground sewerage systems in Trichy Corporation, 21 Municipalities and 29 Town Panchayats at a cost of Rs.2,433.79 crore, works for which will commence during 2014-2015.”
“அனைத்து நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளிலும் தகுந்த பாதாளச் சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்த இந்த அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. திருச்சி மாநகராட்சியிலும், 21 நகராட்சிகளிலும், 29 பேரூராட்சிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, 2433.79 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான பணிகள் 2014-2015 ஆம் ஆண்டில் தொடங்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.41 · ¶82 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.3,110.98 crores
“Sanction has been given for UGSS projects in one Corporation, 21 Municipalities and 28 Town Panchayats at a cost of Rs.3,110.98 crores.”
“அனைத்து நகர்ப்புரப் பகுதிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. ஒரு மாநகராட்சியிலும் 21 நகராட்சிகளிலும், 28 பேரூராட்சிகளிலும் 3,110.98 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 197.34 கோடி ரூபாய் செலவில் 17 பேரூராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தவும், 2,041.61 கோடி ரூபாய் செலவில் ஒரு மாநகராட்சியிலும், 20 நகராட்சிகளிலும், 11 பேரூராட்சிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.46 · ¶75 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.3,500.89 crores
“In accordance with it, from 2011-2012, a sum of Rs.3,500.89 crores has been sanctioned for the implementation of Underground Sewerage System in 52 ULBs in the State.”
“தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்-1।। வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 3,831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்” (TNSUDP) உலக வங்கியின் உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2,212.89 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும், படிப்படியாக பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சிய முடிவை இந்த அரசு எடுத்து, அதன்படி, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து, மாநிலத்தில் உள்ள 52 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 3,500.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.41 · ¶63 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,017.09 crores
“Twenty underground sewerage schemes at an estimated cost of Rs.1,017.09 crores, to benefit a population of 14.41 lakh, are under various stages of progress.”
“முக்கிய நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், பாதாள சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. இருபது பாதாள சாக்கடைத் திட்டங்கள் 14.41 இலட்சம் மக்களுக்குப் பயனளிக்கூடிய வகையில், 1,017.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், 205.23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று பாதாள சாக்கடைத் திட்டங்கள் ஒப்பந்தப் புள்ளி நிலையில் உள்ளன. இப்பணிகள் இவ்வாண்டில் தொடங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶96) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.48 · ¶96 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2018-19 Rs.5,844.70 crore
“Currently, 38 UGSS projects are under implementation at a cost of Rs.5,844.70 crore.”
“நகர்ப்புரம் மற்றும் நகர்ப்புரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்கான கட்டுமானப் பணிகளை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மூலமாகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, 8 மாநகராட்சிகள், 27 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 11 மாநகராட்சிகள், 21 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, 5,844.70 கோடி ரூபாய் செலவில் 38 பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் 704.26 கோடி ரூபாய் செலவில், 13 பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை சென்னை மாநகரில் மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில், 2018-2019 ஆம் ஆண்டில் 614.84 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.50 · ¶82 · source PDF ↗ · on the map →
2021-22
“27 cities with a population of above one lakh will be fully covered with underground sewerage systems.” financedept_2021-22_speech_en_revised · p.32 · ¶71 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.285.87 crore
“During 2020-21, 5 Under Ground Sewerage Schemes (UGSS) in Thiruppathur, Nagapattinam, Kallakurichi, Erode and Namakkal Districts have been completed at a total cost of Rs.285.87 crore.”
“2020-21 ஆம் ஆண்டில், 1,690.67 கோடி ரூபாய் செலவில் 3 மாநகராட்சிகள், 6 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 1311 ஊரக வாழ்விடங்களில் 40.85 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றிற்கு 271 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும், 21 குடிநீர் வழங்கல் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 5 மாநகராட்சிகள், 22 நகராட்சிகள், 57 பேரூராட்சிகள் மற்றும் 12,346 ஊரக வாழ்விடங்களில் மொத்தம் 12,013.79 கோடி ரூபாய் செலவில், நாளொன்றிற்கு 1223.35 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட 56 குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு, பல்வேறு நிலைகளில் உள்ளது. இத்திட்டங்களின் மூலம் 185.58 இலட்சம் மக்கள் பயனடைவர். திருப்பத்தூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 2020-21 ஆம் ஆண்டில், 5 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 285.87 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 2,391.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில், 19 பாதாள சாக்கடை கட்டும் திட்டப் பணிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.49 · ¶77 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside 19 Under Ground Sewerage Schemes under implementation · 2021-22
- runs alongside UGSS works in newly added areas of Greater Chennai Corporation · 2018-19 –2021-22
- runs alongside Underground sewerage schemes (3, tender stage) · 2016-17
- runs alongside Sewerage works in 22 Municipalities · 2013-14
- runs alongside UGSS works in Chennai city (CMWSSB) · 2018-19
- runs alongside Water supply and underground sewerage schemes (4,944 rural habitations) · 2019-20
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years