Health · dormant

Urban primary health care expansion

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“The administrative and technical responsibility for running 60 Urban Health Centres sanctioned under NRHM will be brought under the Directorate of Public Health and provided with adequate staff and equipment.”
“நகர்ப்புரங்களில்‌ தற்போதுள்ள ஆரம்ப சுகாதார வசதிகள்‌ போதுமானதாக இல்லாததால்‌ இந்த அரசு அவற்றை மேம்படுத்துவதில்‌ தனி கவனம்‌ செலுத்தும்‌. மூன்றாம்‌ நிலை மருத்துவ வசதிகளையும்‌, சிறப்பு மருத்துவச்‌ சிகிச்சை வசதிகளையும்‌ இந்த அரசு மேம்படுத்தும்‌. ஏற்கெனவே அறிவித்தபடி நகர்ப்புர உள்ளாட்சிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌, கிராமப்புறங்களில்‌ உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைப்‌ போன்றே வாரத்தில்‌ ஏழு நாட்களிலும்‌ 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ வகையில்‌ மூன்று செலவிலியர்கள்‌ நியமிக்கப்படுவார்கள்‌. தேசிய ஊரக சுகாதார நலத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அனுமதிக்கப்பட்டுள்ள 60 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களை பொது சுகாதாரம்‌-நோய்த்‌ தடுப்பு இயக்குநரின்‌ கட்டுப்பாட்டில்‌ கொண்டுவந்து, அவற்றுக்குத்‌ தேவையான பணியாளர்களும்‌, உபகரணங்களும்‌ வழங்கப்படும்‌. ஆரம்ப சுகாதார வசதிகள்‌ இல்லாத ஒரு இலட்சத்திற்கும்‌ குறைவாக மக்கள்‌ தொகையுள்ள 75 சிறிய நகரங்களில்‌, பொது சுகாதாரம்‌-நோய்த்‌ தடுப்பு இயக்குநரின்‌ கட்டுப்பாட்டில்‌ புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ உருவாக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.56 · ¶91 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector