Welfare · dormant
Welfare of Sri Lankan Tamil refugees
5 budgets named it 6 year span 550 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and named again in 4 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2013-14 Rs.109.91 crores
“Over all, a sum of Rs.109.91 crores has been allocated for the welfare of Sri Lankan Tamil refugees in the Budget Estimates 2013-2014.”
“அனைத்து நலத்திட்ட உதவிகளையும் மாநிலத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியையும் இந்த அரசு உயர்த்தியுள்ளது. மேலும், வரும் நிதியாண்டிலிருந்து, அகதிகள் முகாம்களுக்கு வெளியில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கும் முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் அளிக்கப்படும். மொத்தமாக, இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 109.91 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶146) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.59 · ¶146 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.108.46 crores
“An amount of Rs.108.46 crores has been allocated for the welfare of Sri Lankan Tamil refugees in the Budget Estimates 2015-2016.”
“அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களின் பயன்களையும் விரிவுபடுத்தி வழங்கியும், அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கணிசமாக உயர்த்தியும் அவர்கள் கண்ணியத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்குத் தேவையான முழு ஆதரவை இந்த அரசு வழங்கி வருகிறது. மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த அரசு விரிவுபடுத்தியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இலங்கைத் தமிழர் நலனுக்காக 108.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியர் நலன் 121 2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் அரசு அலுவலர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 504.81 கோடி ரூபாய் அளவில் 126,462 அலுவலர்கள் பயன்பெற்றுள்ளனர். நமது மாநிலத்தில் 7 இலட்சம் ஒய்வூதியர்களும், குடும்ப ஒய்வூதியர்களும் உள்ளனர். அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் போன்றே, ஓய்வூதியர்களுக்கான சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை 87.23 கோடி ரூபாய் செலவில் 29,978 ஓய்வூதியர்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஒய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்காக 18,668 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதி-ஆ வரவு-செலவுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.67 · ¶120 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.105.98 crores
“In the Revised Budget Estimates 2016-2017, an amount of Rs.105.98 crores has been allocated for the welfare of Sri Lankan Tamil refugees.”
“அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு திருமண உதவித் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டப் பபன்களை இந்த அரசு வழங்கி வருகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் கணிசமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணியத்தோடும், பாதுகாப்போடும் வாழ்வதற்கு வகை செய்யும் இம்முயற்சிகள் தொடரும். 2016-2017 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக 105.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶145) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.69 · ¶145 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.116 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.116 crore has been allocated for the welfare of Sri Lankan Tamil refugees.”
“அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், திருமண உதவித் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு நலத்திட்டப் பயன்களையும் அவர்களுக்கு நீட்டித்து இந்த அரசு வழங்கி வருகிறது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶135) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.73 · ¶135 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.109.42 crore
“In the Budget Estimates, Rs.109.42 crore has been provided for the welfare of Sri Lankan Tamil refugees.”
“அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், திருமண உதவித் திட்டங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் நீட்டித்து இந்த அரசு வழங்கி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக 109.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.70 · ¶121 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Relief material to war-affected Sri Lankan Tamils · 2011-12
- part of Srilankan Tamil refugee camp improvement · 2011-12
- part of Cash assistance to Sri Lankan Tamil refugees · 2012-13
- part of Durable houses for Sri Lankan Tamil refugees · 2012-13 –2025-26
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years