Irrigation · recurring

Cauvery–Vaigai–Gundar flood control / interlinking programme

4 budgets named it 16 year span 850 ₹ crore allocated 7,677 ₹ crore whole-project cost AIADMK / TVK governments

First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2011-12 ` 5,166 crores new project project cost AIADMK · revised

“A comprehensive proposal for a flood control programme at a cost of ```` 5,166 crores will be sent to the Government of India.”
“தமிழ்நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதை, இந்த அரசு முதன்மையானப்‌ பணியாகக்‌ கருதுகிறது. நதிநீர்‌ இணைப்பால்‌, பாசன வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளத்தைக்‌ கட்டுப்படுத்துவது, உள்நாட்டு நீர்ப்‌ போக்குவரத்து போன்ற பல பயன்கள்‌ ஏற்படும்‌. இதன்‌ முதல்‌ கட்டமாக காவிரி ஆற்றை வைகை, குண்டாறு ஆறுகளுடன்‌ இணைப்பதற்காக, காவிரி ஆற்றில்‌ கட்டளைக்‌ கதவணை அமைக்கும்‌ பணி 189 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 93 கோடி ரூபாயாகும்‌. இதன்‌ அடுத்த கட்டமாக கட்டளைக்‌ கதவணையை குண்டாறு ஆற்றுடன்‌ இணைப்பதற்குரிய பணியினை இவ்வரசு தொடங்கும்‌. மத்திய அரசு உதவியுடன்‌ வெள்ள மேலாண்மைப்‌ பணியாக இரண்டு கட்டத்தில்‌ இப்பணி செய்யப்படும்‌. முதற்‌ கட்டமாக கட்டளை அணைக்கட்டிலிருந்து கால்வாய்‌ அமைத்து அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறுடன்‌ 3,787 கோடி ரூபாய்‌ செலவில்‌ இணைக்கப்படும்‌. இரண்டாவது கட்டத்தில்‌ மணிமுத்தாறு, வைகை ஆற்றுடன்‌ குண்டாறு 1,379 கோடி ரூபாய்‌ செலவில்‌ இணைக்கப்படும்‌. இந்த வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகளுக்கு 5,166 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ விரிவான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்‌. எனினும்‌ மத்திய அரசின்‌ உதவிக்காக காத்திராமல்‌ மாநில அரசே இப்பணியினை உடனடியாகத்‌ தொடங்கும்‌. இப்பணிக்காக 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 60 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு நதிநீர்‌ இணைப்புத்‌ திட்டமான நம்பியாறுடன்‌ தாமிரபரணி ஆற்றை இணைக்கும்‌ பணி 369 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடைபெற்று வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ இப்பணிக்காக 90 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.27 · ¶43 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2020-21 Rs.700 crore new project AIADMK

“The Cauvery Gundar Link project at an estimated cost of Rs.7,677 crore has already been announced by the Hon’ble Chief Minister. In the first phase, the link canal from Cauvery to South Vellar River is to be taken up. A sum of Rs.700 crore has been provided IN the Budget for 2020-21 to carry out land acquisition and preliminary works for the project.”
“அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசனத்‌ திட்டத்திற்கான சுற்றுச்சூழல்‌ அனுமதியை அரசு பெற்றுள்ளது. இந்தத்‌ திட்டத்திற்காக 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 500 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரி குண்டாறு இணைப்புத்‌ திட்டம்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ 7,677 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்‌ முதல்‌ கட்டத்தில்‌, காவேரி முதல்‌ தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக்‌ கால்வாய்‌ அமைக்கும்‌ திட்டம்‌ மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத்‌ திட்டத்திற்கான நிலம்‌ கையகப்படுத்துதல்‌ மற்றும்‌ முதனிலைப்‌ பணிகளை மேற்கொள்வதற்காக 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 700 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.36 · ¶62 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.6,941 crore new project project cost AIADMK · interim

“The Government has accorded in principle approval for the Cauvery-South Vellar link at a total cost of Rs.6,941 crore. As the first phase, formation of flood carrier canals at a cost of Rs.331 crore has been taken up in Karur, Trichy and Pudukkottai districts, and the work has been inaugurated by the Hon’ble Chief Minister on 21st February, 2021.”
“பெரம்பலூர்‌ மாவட்டம்‌, ஆலத்தூர்‌ வட்டம்‌ கொட்டாரை கிராமத்திற்கு அருகில்‌ மருதையார்‌ ஆற்றின்‌ குறுக்கே புதிய நீர்த்தேக்கம்‌ அமைப்பதற்கான பணிகள்‌, 124.20 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடைபெற்று வருகின்றன. தாமிரபரணி, கருமேனியாறு மற்றும்‌ நம்பியாறு இணைப்புத்‌ திட்டத்திற்கான பணிகள்‌, 2022 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ 31 ஆம்‌ தேதிக்குள்‌ முடிக்கப்படும்‌. இத்திட்டத்தால்‌, திருநெல்வேலி மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களின்‌ வறட்சி பாதிப்புக்குள்ளாகும்‌ பகுதிகளில்‌ உள்ள, 56,909 ஏக்கர்‌ பரப்பளவில்‌ நிலங்கள்‌ பயனடையும்‌. காவேரி-தெற்கு வெள்ளாறு நதிகள்‌ இணைப்பிற்காக, 6,941 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது. முதல்‌ கட்டப்‌ பணியாக, கரூர்‌, திருச்சி மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ 331 கோடி ரூபாய்‌ செலவில்‌ வெள்ள நீர்‌ செல்லும்‌ கால்வாய்களை அமைக்கும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌, 21 ஆம்‌ நாளன்று, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இத்திட்டத்தை துவக்கி வைத்தார்‌. 2014 ஆம்‌ ஆண்டிலிருந்து, ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ 2,280 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய அணைக்கட்டுகள்‌, புதிய பாசன வாய்க்கால்கள்‌, புதிய பாலங்கள்‌ மற்றும்‌ குளங்களை புனரமைத்தல்‌ ஆகியவற்றுக்கான கட்டுமானப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்‌, 1522.58 கோடி ரூபாய்‌ செலவில்‌ 288 திட்டங்களின்‌ பணிகள்‌ நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.38 · ¶57 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.150 crore new project TVK · revised

“The Cauvery-Vaigai-Gundar River Linking Project, will commence in this year with an initial allocation of Rs.150 crore.”
“முந்தைய அரசுகளால்‌ அறிவிக்கப்பட்ட பல்வேறு நதி இணைப்புத்‌ திட்டங்கள்‌ தாமதமாகவே செயல்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேளாண்மைக்கு நீர்‌ ஆதாரமே உயிர்நாடியாகத்‌ திகழ்கின்ற போதிலும்‌, இத்திட்டங்கள்‌ உரிய காலத்திற்குள்‌ செயல்படுத்தப்படாதபோது, அது வேளாண்‌ உற்பத்தித்‌ திறனைப்‌ பாதிக்கிறது. எனவே, இத்திட்டங்களின்‌ தாமதமான செயல்பாட்டை உணர்ந்துள்ள இந்த அரசு, அத்தகைய நதி இணைப்புத்‌ கிட்டங்களின்‌ செயல்பாட்டை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்‌. காவிரிவைகை-குண்டாறு நதி இணைப்புத்‌ திட்டத்தினை இந்த அரசு செயல்படுத்தும்‌. இத்திட்டத்திற்காக 150 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும்‌, பெண்ணையாறு-செய்யாறு, பெண்ணையாறு-பாலாறு மற்றும்‌ தாமிரபரணி-வைப்பாறு நதி இணைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையினை தயார்‌ டசய்ய 50 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு உட்பட நதி இணைறப்புத்‌ திட்டங்களுக்காக மொத்தம்‌ 200 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.61 · ¶123 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector