Welfare · completed claimed

Cradle Baby Reception Centres

7 budgets named it 10 year span 562 ₹ crore allocated <1 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 6 later budgets, most recently 2020-21. Places named: Cuddalore, Ariyalūr, Perambalur, Villupuram, Tiruvannamalai.

Allocated by budget year

Located at Cuddalore · Cuddalore district

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 47.45 lakhs new project project cost AIADMK · revised

“this Government will open Cradle Baby Reception Centres in these five districts during 2011-2012 at a cost of ```` 47.45 lakhs.”
“பெண்‌ சிசுக்‌ கொலையை முற்றிலும்‌ தடுக்கும்‌ பொருட்டு, "தொட்டில்‌ குழந்தைத்‌ திட்டம்‌' 1992 ஆம்‌ ஆண்டு சேலத்தில்‌ தொடங்கப்பட்டது. பின்னர்‌, பெண்‌ சிசுக்‌ கொலை இருப்பதாகத்‌ தெரியவந்த மதுரை, தேனி, திண்டுக்கல்‌, தருமபுரி மாவட்டங்களுக்கும்‌ இத்திட்டம்‌ நீட்டிக்கப்பட்டது. 31.3.2011 வரையில்‌ 3,131 குழந்தைகள்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ மறுவாழ்வு பெற்றுள்ளனர்‌. இதன்‌ விளைவாக, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில்‌ குழந்தை பாலின விகிதத்தில்‌ பெண்குழந்தை பிறப்பு விகிதம்‌ அதிகரித்துள்ளதை ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன. அண்மையில்‌ வெளியிடப்பட்ட மக்கட்தொகைக்‌ கணக்கெடுப்பின்படி கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ குழந்தை பாலின விகிதத்தில்‌ பெண்குழந்தை பிறப்பு விகிதம்‌ குறைந்துள்ளதைக்‌ காட்டுகின்றது. எனவே, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ இந்த ஐந்து மாவட்டங்களிலும்‌ தொட்டில்‌ குழந்தை வரவேற்பு மையங்களை அமைத்து இத்திட்டத்தை 47.45 இலட்ச ரூபாய்‌ செலவில்‌ இந்த அரசு செயல்படுத்த உள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶132) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.77 · ¶132 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 enhancement AIADMK

“the Hon'ble Chief Minister, taking note of the adverse child sex ratio, has expanded the scheme to the districts of Cuddalore, Ariyalur, Perambalur, Villupuram and Tiruvannamalai.”
“மகளிர்‌ மேம்பாடும்‌, குழந்தைகள்‌ நலன்‌ காத்தலும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உள்ளம்‌ கவர்ந்த பணிகளாகும்‌. உலகளவிலும்‌, தேசிய அளவிலும்‌ பெரிதும்‌ பாராட்டப்பட்ட தொட்டில்‌ குழந்தை திட்டம்‌, பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டம்‌ போன்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிய பெருமை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களையே சாரும்‌. இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்ட மாவட்டங்களில்‌ எண்ணற்ற பெண்‌ குழந்தைகளின்‌ உயிரை காப்பாற்றி மகத்தான சாதனையை இது நிகழ்த்தியுள்ளது குறித்து பெருமிதம்‌ கொள்கிறேன்‌. பெண்‌ குழந்தை பாலின விகிதம்‌ குறைவாக உள்ள கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும்‌ இந்த ஆண்டு தொட்டில்‌ குழந்தை திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ விரிவுபடுத்தியுள்ளார்கள்‌. இதுவரை, மேற்கூறிய ஐந்து மாவட்டங்களில்‌ மட்டும்‌ 17 குழந்தைகள்‌ மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.75 · ¶118 · source PDF ↗ · on the map →

2014-15 completion claim AIADMK

“4,390 abandoned infants have been rehabilitated during 2013-2014 under the Cradle Baby Scheme revived by the Hon'ble Chief Minister.”
“பெண்‌ குழந்தைப்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தில்‌, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ 105 கோடி ரூபாய்‌ செலவு செய்யப்பட்டு 59,229 பெண்‌ குழந்தைகள்‌ பயன்பெற்றுள்ளனர்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 105 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ மீண்டும்‌ செயலாக்கத்திற்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ள தொட்டில்‌ குழந்தைத்‌ திட்டத்தின்‌ மூலமாக, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ கைவிடப்பட்ட 4,390 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.56 · ¶111 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.140.50 crores continuation AIADMK · revised

“A sum of Rs.140.50 crores has been provided in the Revised Budget Estimates 2016-2017 for these schemes.”

tnbudget_2016-17_speech_en_revised · p.66 · ¶137 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.140 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, a sum of Rs.140 crore has been allocated for these schemes.”

tnbudget_2017-18_speech_en · p.71 · ¶131 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.140.50 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.140.50 crore has been allotted for these schemes.”
“புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களால்‌ தொடங்கப்பட்ட “தொட்டில்‌ குழந்தை திட்டம்‌”, 'பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌”, போன்ற இந்த அரசின்‌ முன்னோடித்‌ திட்டங்கள்‌, பெண்‌ சிசுக்கொலை மற்றும்‌ பெண்குழந்தை கருக்கலைப்பு போன்றவற்றைக்‌ குறைப்பதற்கு கணிசமான பங்களித்திருக்கின்றன. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டங்களுக்காக 140.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமண உதவித்‌ திட்டங்களின்‌ கீழ்‌, திருமாங்கல்யத்திற்காக எட்டு கிராம்‌ தங்கம்‌ மற்றும்‌ பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25,000 ரூபாயும்‌, பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50,000 ரூபாயும்‌ வழங்கப்பட்டு வருகிறது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, அனைத்து திருமண உதவித்‌ திட்டங்களுக்காக 724 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶117) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.68 · ¶117 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.140.97 crore continuation AIADMK

“In the Budget Estimates for 2020-21 a sum of Rs.140.97 crore has been allocated for these schemes.”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள்‌ காட்டிய நல்வழியில்‌, இந்த அரசு, பாலின சமத்துவம்‌, நீதி ஆகியவற்றை பாதுகாப்பதில்‌ முனைப்பாக செயல்படுகிறது. இதன்‌ விளைவாக, மகளிருக்கு அதிகாரமளித்தல்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலனை உறுதி செய்தல்‌, அதிலும்‌ குறிப்பாக பெண்‌ குழந்தைகள்‌ நலன்‌ ஆகியவற்றை இலக்காக கொண்ட பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தொட்டில்‌ குழந்தை திட்டம்‌, பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ பலனாக 2014-15 ஆம்‌ ஆண்டில்‌ 918 ஆக இருந்த பாலின பிறப்பு விகிதம்‌, 2019 ஆம்‌ ஆண்டில்‌ 936 ஆக உயர்ந்துள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டங்களுக்கு 140.97 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திருமண நிதியுதவித்‌ திட்டங்களினால்‌, 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ 1,04,795 நபர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பல்வேறு திருமண நிதியுதவித்‌ திட்டங்களுக்காக, 726.32 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின்‌ கீழ்‌, இதுவரை 1.88 இலட்சம்‌ பணிபுரியும்‌ மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிலும்‌ 253.14 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீட்டில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகளை நிருவகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகள்‌ நிறுவனம்‌ என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தப்‌ புதிய நிறுவனம்‌, பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகளை நிர்வகிக்கும்‌. சென்னையில்‌ 8 இடங்களிலும்‌, கிருஷ்ணகிரி, திருச்சி, ஒசூர்‌, காஞ்சிபுரம்‌, நாமக்கல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ தலா ஓர்‌ இடத்திலும்‌, மொத்தம்‌ 13 இடங்களில்‌ இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின்‌ படி, 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ மகளிர்‌ நலத்‌ திட்டங்களுக்காக மொத்தம்‌ 78,796.12 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶160) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.87 · ¶160 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector