Welfare · dormant
Enhanced hostel feeding charges (Adi-Dravidar/Tribal)
First announced in 2012-13 and named again in 6 later budgets, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2012-13 Rs.76.76 crores
“A sum of Rs.76.76 crores has been provided towards enhanced feeding charges for the year 2012-2013.”
“ஆதிதிராவிடர், பழங்குடியினரின் கல்வி வளர்ச்சிக்கு இந்த அரசு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ-மாணவியர்களுக்கான மாத உணவுப்படியை 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும், இதே போன்று கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் இந்த அரசு உயர்த்தியுள்ளது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவார்கள். இச்செலவினங்களுக்கென 2012-2013 ஆம் ஆண்டில் 76.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.71 · ¶111 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.61.80 crores
“An amount of Rs.61.80 crores has been provided in the Budget Estimates for providing adequate and quality food for the hostel inmates.”
“ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்டது போலவே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர்களுக்கு போதிய அளவில் தரமான உணவு வழங்கும் வகையில், வரும் நிதியாண்டில் 61.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டவாறே, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர் விடுதிகளிலும் 2012-2013 ஆம் ஆண்டில் மாணவர்கள் வசதிக்கென கட்டில்கள் வழங்கப்படும். தற்போது தனியார் கட்டடங்களில் இயங்கும் 148 விடுதிகள் அனைத்திற்கும் 115.12 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 84 விடுதிகள் 64.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. இதற்கென 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 40.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும், பத்தாம் வகுப்பிற்கு பின் மேற்படிப்பு படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த 2012-2013 ஆம் ஆண்டு 149 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.74 · ¶116 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.107.25 crore
“In the year 2014-2015, a sum of Rs.107.25 crore has been provided for hostel maintenance and food charges.”
“1300 ஆதிதிராவிடர் விடுதிகள் மற்றும் 42 பழங்குடியினர் விடுதிகள் மூலம் 100,021 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணச் சலுகை, பள்ளி மாணவர்களுக்கு 755 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 875 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 54 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததன் அடிப்படையில், 27 கோடி ரூபாய் செலவில் 27 விடுதிகளுக்கான கட்டடங்களை அமைப்பதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 27 விடுதிகளுக்கான கட்டடங்கள் 2014-2015 ஆம் ஆண்டில் அமைக்கப்படும். 2014-2015 ஆம் ஆண்டிற்கு விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவு வழங்கும் செலவிற்காக 107.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.61 · ¶123 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.85.83 crore
“During 2014-2015, a sum of Rs.85.83 crore will be provided for hostel maintenance and food charges.”
“1294 விடுதிகளில் தங்கிப் பயிலும் 80,064 மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக உணவும் உறைவிடமும் வழங்கப்படுகிறது. 2013-2014 ஆம் ஆண்டு முதல், இந்த மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணச் சலுகை, பள்ளி மாணவர்களுக்கு 755 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 875 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டிற்கு விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவு வழங்கும் செலவிற்காக 85.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.62 · ¶125 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.102.79 crores
“For 2015-2016, Rs.102.79 crores have been allocated for food charges.”
“தற்போது 97,539 மாணவ மாணவியர் தங்கிப் பயிலும் 1,304 ஆதிதிராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ மாணவியர்கள் தங்கிப் பயிலும் 42 பழங்குடியினர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டில் மாணவ மாணவியரின் உணவுச் செலவிற்காக 102.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் கடனுதவியோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் புதிய விடுதிகளைக் கட்டவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டு 52.47 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டடுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், விடுதிகளைப் பராமரிக்கவும் 162.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.63 · ¶112 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.82.69 crores
“For the year 2015-2016, Rs.250.49 crores has been allocated for various scholarship schemes and a sum of Rs.82.69 crores is provided for hostel maintenance and food charges.”
“கடந்த நான்கு ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 81164 மாணவ மாணவியர் பயன்பெறக்கூடிய 1,305 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டில் 10.36 இலட்சம் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 216.38 கோடி ரூபாய் செலவில், 218 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டில் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்காக, 250.49 கோடி ரூபாயும், விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவினங்களுக்காக 82.69 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக 101.59 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.64 · ¶115 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.79.23 crores
“During 2016-2017, a sum of Rs.79.23 crores has been provided for hostel maintenance and food charges.”
“2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 100 புதிய தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, 1338 தங்கும் விடுதிகளில் 84,314 மாணவர்கள் தங்கிப் பயன்பெற்று வருகின்றனர். மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்துவதற்காக, பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான மாதாந்திர உதவித் தொகையை 755 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கான இத்தொகையை 875 ரூபாயாகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கு தங்கும் விடுதி செலவுகளுக்காகவும், உணவு வழங்குவதற்கான மாதாந்திர உதவித் தொகைக்காகவும் 79.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.61 · ¶97 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.103.15 crores
“In the Revised Budget Estimates 2016-2017, a sum of Rs.103.15 crores has been allocated for feeding charges and a sum of Rs.83.80 crores has been provided for improving infrastructure facilities and hostel maintenance.”
“தற்போது, ஆதிதிராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 98,039 மாணவ, மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்கு 1314 விடுதிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 2,782 மாணவ, மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்கு 42 பழங்குடியினர் விடுதிகளும், 30,933 மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயில்வதற்கு 306 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் விடுதிகளில், 81 விடுதிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 24 விடுதிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் 27.48 கோடி ரூபாய் செலவில் இந்த அரசால் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் அரசுக் கட்டடங்களில் இயங்கும் நிலை உறுதி செய்யப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அனைத்து விடுதிகளுக்கும் இட்லி குக்கர்-நீராவிக் கொதிகலன்கள் மற்றும் சலவை இயந்திரங்களை இந்த அரசு வழங்கும். இதன் மூலம், மற்றுமொரு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உணவு வழங்குவதற்கான தொகையாக 103.15 கோடி ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் விடுதிப் பராமரிப்புக்காகவும் 83.80 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.62 · ¶127 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17 Rs.70.64 crores
“A sum of Rs.70.64 crores has been provided for food charges during 2016-2017.”
“தற்போது, 84,314 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயன்பெறும் 1338 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 1195 விடுதிகள் சொந்தக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. 107 விடுதிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 36 விடுதிகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டில் 76.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு அனைத்து விடுதிகளும் அரசுக் கட்டடங்களில் இயங்கும் நிலை உறுதி செய்யப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அனைத்து விடுதிகளுக்கும் இட்லி குக்கர்-நீராவிக் கொதிகலன்கள் மற்றும் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும். 2016-2017 ஆம் ஆண்டில் உணவு வழங்குவதற்கான தொகையாக 70.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶133) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.64 · ¶133 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.120 crore
“In the Budget Estimates 2017-2018, a sum of Rs.189 crore has been allocated for construction of buildings and Rs.120 crore has been allocated for food charges.”
“ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனைப் பேணி அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது, 98,539 மாணவ, மாணவியருடன் 1,324 ஆதி திராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ, மாணவியருடன் 42 பழங்குடியினர் நல விடுதிகளும் மற்றும் 31069 மாணவ, மாணவியருடன் 314 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் (Government Tribal Residential Schools) இயங்கி வருகின்றன. மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 875 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 755 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும். மேலும், அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக் கட்டடங்களை கட்டவும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக 30 விடுதிகள் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2017-2018 ஆம் ஆண்டில் 30.73 கோடி ரூபாய் செலவில் 24 கூடுதல் விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்டும் பணியை இந்த அரசு மேற்கொள்ளும். இதற்கென 2017-2018 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கட்டடங்கள் கட்டுவதற்காக 189 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக 120 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 121 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்குவதற்கென 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன் 4.92 இலட்சம் மாணவிகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டில் அரசு ஊக்க உதவித்தொகை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கென 2017-2018 ஆம் ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு 2.50 இலட்சம் ஆதி திராவிடர் மாணவ, மாணவிகள் மற்றும் 14,000 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கும் 2016-2017 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.65 · ¶120 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.84 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.24 crore has been provided for construction of hostels and schools, and Rs.84 crore has been provided for food charges.”
“இந்த அரசு 84,314 மாணவ, மாணவியர் பயன்பெறும் 1338 விடுதிகளை நடத்தி வருகிறது. மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 875 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 755 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும். 2017-2018 ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு 24 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக 84 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்காக 988 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.69 · ¶127 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.118.48 crore
“In the Budget Estimates 2018-2019, Rs.32.20 crore and Rs.118.48 crore have been provided for constructing hostel buildings and for food charges respectively.”
“தற்போது, 98,539 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1324 ஆதி திராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 42 பழங்குடியினர் நல விடுதிகளும், 27,652 மாணவ, மாணவியருடன் 314 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் (Government Tribal Residential Schools) மாநிலத்தில் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளிலும், விடுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய கட்டடங்களை அரசு கட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து, 2018-2019 ஆம் ஆண்டில், 46 கோடி ரூபாய் செலவில் 19 விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 755 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 875 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், 2017-2018 ஆம் ஆண்டில் இந்த அரசு உயர்த்தி வழங்கியது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்ட 32.20 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக 118.48 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மூலதனக் கணக்கில் செலவுகள் மூலதனப் பணிகளுக்கான செலவை மேற்கொள்வதில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 24,298 கோடி ரூபாய், 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 28,283 கோடி ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுகளில் 15 சதவீதமாக மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் மதுபானக் கடைகளை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால், 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டதை விட குறைந்துள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி விகிதத்தில், குறிப்பாக வணிக வரிகள் மற்றும் மாநில ஆயத்தீர்வைகளின் கீழ் பெறப்படும் வரவுகளில், குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. எனவே, 2018-2019 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை, முறையே 17,491 கோடி ரூபாய் மற்றும் 44,481 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை விகிதம், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாக இருக்கும். இது, தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 3 சதவீதத்திற்கும் குறைவாகும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தியதால், சம்பளங்கள் மற்றும் ஒய்வூதியச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள 14,719 கோடி ரூபாய் கூடுதல் செலவினம், மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2019-2020 ஆம் ஆண்டில் 2.76 சதவீதமாகவும், 2020-2021 ஆம் ஆண்டில் 2.57 சதவீதமாகவும் இருக்கும். V. கடன்கள் பதினான்காவது நிதிக் குழு பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான, நிகரக் கடன் வரம்பு 47,888 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 43,962 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2019 அன்று, 3,55,845 கோடி ரூபாயாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதம் மட்டுமே ஆகும். VI. கடன் உத்திரவாதங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2017 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின் அளவு முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 22.59 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 2.24 சதவீதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.50 சதவீதம் இவற்றில் TH குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2017 அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 4.37 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.43 சதவீதமாகவும் உள்ளது. முடிவுரை மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் மெல்ல முன்னேறிச் செல்வதை, இடையில் தற்காலிகமான பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், 2012-2013 ஆம் ஆண்டில் 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதமானது நிலையான விலைகளின் அடிப்படையில்), 2017-2018 ஆம் ஆண்டில் 8.03 சதவீதமாக அதிகரித்துள்ளது தெளிவாக்குகிறது. வணிக வரிகள் மற்றும் மாநில ஆயத்தீர்வை ஆகியவற்றின் கீழ் பெறப்படும் வரவுகளில் குறைவு ஏற்பட்டதால், 2017-2018 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, வருவாய் வரவுகளில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்தது மற்றும் மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்ட பணிகளில் மாநில அரசின் பங்கு உயர்ந்தது ஆகியவை மாநில அரசின் நிதிநிலையை பாதித்துள்ளது. ஏழாவது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தியதால் சம்பளங்கள் மற்றும் ஒய்வூதியங்கள் உயர்த்தப்பட்டதைத் தவிர, இதரச் செலவுகளின் பாங்கு நிலையாக உள்ளது. இந்த சுணக்கமான சூழ்நிலையிலும், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகரக் கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் விகிதம் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும். மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து நிதி மேலாண்மையை வலுப்படுத்தும். KKEKKKKKKEKKKKEKKKKE”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.65 · ¶111 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.80.37 crore
“In the Budget Estimates 2018-2019, Rs.20.10 crore and Rs.80.37 crore have been provided for construction of hostels and for food charges respectively.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் நலனைப் பேணி, அவர்களை மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியோடு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளைத் தொடர்ந்து வழங்க, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 229.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் கடனுதவியுடன் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2017-2018 ஆம் ஆண்டில் அரசால் 13.07 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விடுதிகள் கட்டுவதற்காக 20.10 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்காக 80.37 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறைக்காக 972.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.67 · ¶114 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.79.23 crore
“A sum of Rs.79.23 crore has been allocated for food charges to the hostel students in the Budget Estimates 2019-2020.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரைச் சார்ந்த மாணவ மாணவியர் குறைந்த செலவில் தடையின்றி கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை ஆகியவற்றை இந்த அரசு வழங்கி வருகிறது. 2019-2020 ஆண்டில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 290.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2019-2020 ஆம் ஆண்டில் பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக அரசு 138.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விடுதி மாணவ மாணவியருக்கான உணவுச் செலவினங்களுக்காக 79.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்காக 911.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.68 · ¶122 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.103.55 crore
“For the monthly food charges for students in school and college hostels, Rs.103.55 crore has been allocated in this Budget.”
“ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் நீடித்த வளர்ச்சியையும், அவர்கள் கண்ணியத்தோடு வாழ்வதையும் உறுதிப்படுத்துவது இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும். அரசு, 129 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1682 விடுதிகளை நடத்தி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில், 23 அரசு விடுதிக் கட்டடங்கள் 26.63 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், 33.83 கோடி ரூபாய் செலவில் 29 புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 20 விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கு 40 கோடி ரூபாயை 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கல்லூரி மற்றும் பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் வழங்குவதற்காக, வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 103.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.69 · ¶124 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Feeding charges (SC/ST hostels) · 2022-23
- runs alongside Adi-Dravidar welfare hostels · 2011-12 –2024-25
- runs alongside Upgrade of 15 Adi-Dravidar hostels into college hostels · 2020-21
- runs alongside Girls' and boys' college hostels (Adi Dravidar and Tribal Welfare) · 2024-25
- runs alongside Facility improvement in 1,080 Adi Dravidar hostels · 2011-12 –2020-21
- runs alongside BC/MBC/DNC hostel construction · 2011-12 –2025-26
- runs alongside Post-matric scholarships (Adi Dravidar) · 2011-12 –2026-27
- runs alongside Upgradation of Adi-Dravidar hostel infrastructure · 2012-13 –2015-16
- part of College hostels for BC/MBC/DNC (2014-2015 works) · 2014-15
- runs alongside Adi-Dravidar hostels and school buildings · 2016-17
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years