Welfare · recurring

Government Servants Health Insurance Scheme

9 budgets named it 14 year span 3,620 ₹ crore allocated AIADMK / TVK governments

First announced in 2013-14 and named again in 8 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2013-14 Rs.270 crores continuation AIADMK

“In 2013-2014, Rs.270 crores will be paid as insurance premium, including Rs.37.46 crores as the State Government's contribution.”
“2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ வீடு கட்டுவதற்கான முன்பணம்‌ 15 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 25 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதற்காக, 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ 252.95 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, இதுவரை 21,656 அலுவலர்கள்‌ 215.34 கோடி ரூபாய்‌ அளவிற்கு காப்பீட்டு உதவி பெற்று பலனடைந்துள்ளனர்‌. இத்திட்டத்திற்காக, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ 37.46 கோடி ரூபாய்‌ அரசின்‌ பங்கினையும்‌ சேர்த்து, காப்பீட்டுத்‌ தொகையாக 270 கோடி ரூபாய்‌ செலுத்தப்படும்‌. வழக்கறிஞர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶148) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.60 · ¶148 · source PDF ↗ · on the map →

2014-15 policy AIADMK

“this Government has already announced the implementation of a new Health Insurance Scheme on the lines of the Government Employees Health Insurance Scheme. Under this, they are entitled for a health cover of Rs.2 lakhs in a block period of 4 years. The bid process for selecting the insurance company is underway and soon this scheme will be launched.”
“தற்போது ஒய்வூதியம்‌, குடும்ப ஓய்வூதியம்‌ பெறுவோர்‌ எண்ணிக்கை ஏழு இலட்சமாகும்‌. இவர்களுக்கான மருத்துவத்‌ தேவைகளுக்கு உதவிடும்‌ குறிக்கோளோடு, அரசு அலுவலர்களுக்கான மருத்துவத்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ போன்றே, ஓய்வூதியம்‌ பெறுவோர்களுக்கும்‌ புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ ஒன்று செயல்படுத்தப்படும்‌ என இந்த அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன்படி, நான்கு ஆண்டு காலத்திற்குள்‌ இரண்டு இலட்சம்‌ ரூபாய்‌ வரை மருத்துவச்‌ சிகிச்சைக்கான காப்பீட்டு வசதி அவர்களுக்கு கிடைக்கும்‌. இதைச்‌ செயல்படுத்துவதற்கு காப்பீட்டு நிறுவனத்தைத்‌ தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டம்‌ விரைவில்‌ தொடங்கப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஓய்வூதிய பலன்களுக்காக 16,021 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.66 · ¶134 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.260.81 crores continuation AIADMK · interim

“An amount of Rs.260.81 crores has been provided for payment of premium in the Interim Budget.”
“அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தை இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 649 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள்‌ மூலமாக, 113 மருத்துவ மற்றும்‌ அறுவை சிகிச்சைகளுக்குப்‌ பணம்‌ செலுத்தாமல்‌ பயன்பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 668.52 கோடி ரூபாய்‌ அளவிலான மருத்துவ உதவியை 169,622 பயனாளிகள்‌ பெற்று பயனடைந்துள்ளனர்‌. இதற்கான காப்பீட்டுத்‌ தொகைக்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 260.81 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, ஏழு இலட்சம்‌ ஓய்வூதியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஒரு காப்பீட்டுத்‌ திட்டத்தையும்‌ இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை, 215.32 கோடி ரூபாய்‌ அளவிலான மருத்துவ உதவியை 75,389 ஓய்வூதியர்கள்‌ பெற்றுப்‌ பயனடைந்துள்ளனர்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கு, இத்திட்டத்திற்கான காப்பீட்டுத்‌ தொகைக்காக 129 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒய்வூதியம்‌ மற்றும்‌ ஒய்வுகாலப்‌ பலன்களுக்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 19,841 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.63 · ¶102 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.129 crores continuation AIADMK · interim

“A sum of Rs.129 crores has been allocated for the payment of premium under this scheme for the year 2016-2017.”
“அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தை இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 649 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள்‌ மூலமாக, 113 மருத்துவ மற்றும்‌ அறுவை சிகிச்சைகளுக்குப்‌ பணம்‌ செலுத்தாமல்‌ பயன்பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 668.52 கோடி ரூபாய்‌ அளவிலான மருத்துவ உதவியை 169,622 பயனாளிகள்‌ பெற்று பயனடைந்துள்ளனர்‌. இதற்கான காப்பீட்டுத்‌ தொகைக்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 260.81 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, ஏழு இலட்சம்‌ ஓய்வூதியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஒரு காப்பீட்டுத்‌ திட்டத்தையும்‌ இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை, 215.32 கோடி ரூபாய்‌ அளவிலான மருத்துவ உதவியை 75,389 ஓய்வூதியர்கள்‌ பெற்றுப்‌ பயனடைந்துள்ளனர்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கு, இத்திட்டத்திற்கான காப்பீட்டுத்‌ தொகைக்காக 129 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒய்வூதியம்‌ மற்றும்‌ ஒய்வுகாலப்‌ பலன்களுக்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 19,841 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.63 · ¶102 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.300 crores new project AIADMK · revised

“For this scheme, an amount of Rs.300 crores has been provided in the Revised Budget Estimates.”
“2012 ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்ட புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ 30.06.2016 அன்று நிறைவடைந்தது. அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ அவர்களின்‌ தகுதி வாய்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு, 01.07.2016 முதல்‌ மேலும்‌ நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்காக, “புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌-2016-ஐ' செயல்படுத்த ஆணைகள்‌ பிறப்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம்‌, அலுவலர்களுக்கும்‌, அவர்களின்‌ குடும்ப உறுப்பினர்களுக்கும்‌ நான்காண்டுகளில்‌ நான்கு இலட்சம்‌ ரூபாய்‌ வரை சிகிச்சை பெற வகை செய்கிறது. தற்போது நீட்டிக்கப்பட்ட இத்திட்டத்தில்‌ ஒரு முக்கிய அம்சமாக, சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும்‌ உச்சவரம்புத்‌ தொகை 7.50 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 300 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶142) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.68 · ¶142 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2016-17 Rs.129 crores continuation AIADMK · revised

“This Government takes pride in the scheme of Comprehensive Health Insurance Scheme for the benefit of seven lakh pensioners introduced for the first time in the Country and a sum of Rs.129 crores has been allocated for the premium amount in 2016-2017.”
“நாட்டிலேயே முதன்முறையாக, ஏழு இலட்சம்‌ ஓய்வூதியர்கள்‌ பயன்பெறும்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தை செயல்படுத்தியது குறித்து, இந்த அரசு பெருமிதம்‌ கொள்கிறது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 129 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஒய்வுகாலப்‌ பலன்களுக்காக, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 18,868 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத்‌ தமிழ்‌ அகதிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶144) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.68 · ¶144 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.290 crore continuation AIADMK

“For the implementation of the New Health Insurance Scheme, Rs.290 crore has been allocated in the Budget Estimates 2017-2018.”
“மற்றுமொரு தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, மகப்பேறுகால விடுப்பினை ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதமாக மாநில அரசு உயர்த்தியுள்ளது. ஏழாவது மத்திய ஊதியக்‌ குழுவின்‌ பரிந்துரைகளில்‌ உள்ள அனைத்துக்‌ கூறுகளையும்‌ ஆய்வு செய்து, அதனடிப்படையில்‌ பரிந்துரைகளை வழங்கும்‌ பொருட்டு உயர்‌ அலுவலர்கள்‌ குழுவினை தற்போது இந்த அரசு அமைத்துள்ளது. இந்த அறிக்கையின்‌ அடிப்படையில்‌ திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள்‌ இந்த அரசால்‌ நிர்ணயிக்கப்படும்‌. புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 290 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶133) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.72 · ¶133 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.123 crore enhancement AIADMK

“This Government has extended the New Health Insurance Scheme to benefit the pensioners and Rs.123 crore has been allocated in the Budget Estimates 2017-2018 for the payment of premium for this scheme.”
“விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ ஓய்வூதியதாரர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ செயல்படுத்தி வந்த மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தை மாநில அரசு நீட்டித்துள்ளது. இத்திட்டத்தில்‌ காப்பீட்டுத்‌ தொகை செலுத்துவதற்கென, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 123 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஒய்வுகாலப்‌ பலன்களுக்காக, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 22,394 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத்‌ தமிழ்‌ அகதிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.73 · ¶134 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.260 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.260 crore has been allocated for the payment of premium towards the New Health Insurance Scheme for employees and Rs.126.25 crore for the New Health Insurance Scheme for pensioners.”
“அலுவலர்கள்‌ குழுவின்‌ அறிக்கையின்‌ அடிப்படையில்‌, 2017 ஆம்‌ ஆண்டு, அக்டோபர்‌ மாதம்‌ 1-ஆம்‌ தேதி முதல்‌, அரசுப்‌ பணியாளர்களுக்கான சம்பளங்களும்‌ படிகளும்‌, ஓய்வூதியதாரர்களுக்கான ஒஓய்வூதியங்களும்‌ திருத்தப்பட்டு, உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன. இந்தத்‌ திருத்தத்தினால்‌, 14,718.90 கோடி ரூபாய்‌ அளவில்‌ ஆண்டொன்றிற்கு அரசுக்கு கூடுதல்‌ செலவினம்‌ ஏற்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, அரசுப்‌ பணியாளர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்திற்காகவும்‌, ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்திற்காகவும்‌, பிரீமியத்‌ தொகை செலுத்துவதற்காக, முறையே 260 கோடி ரூபாயும்‌, 126.25 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதியம்‌ மற்றும்‌ பிற ஒய்வுகாலப்‌ பலன்களுக்காக, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 25,362.20 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத்‌ தமிழ்‌ அகதிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.70 · ¶120 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.126.25 crore continuation AIADMK

2019-20 Rs.253 crore continuation AIADMK

“Allocations of Rs.253 crore and Rs.299.28 crore have been provided towards payment of premium for the health insurance scheme of Government servants and pensioners respectively.”
“கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும்‌, அரசுப்‌ பணியாளர்களின்‌ சம்பள உயர்வு மற்றும்‌ படிகளை இந்த அரசு ஏற்கெனவே உயர்த்தி வழங்கியுள்ளதுடன்‌, அகவிலைப்‌ படியையும்‌ காலமுறை தவறாமல்‌ அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. பழைய ஒய்வூதியத்‌ திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட, ஒய்வுபெற்ற இந்திய ஆட்சிப்‌ பணியாளர்‌ திரு.டி.எஸ்‌.்ரீதர்‌ தலைமையிலான குழுவும்‌, ஊதிய முரண்பாடுகளைக்‌ களைவதற்காக அமைக்கப்பட்ட திரு எம்‌.ஏ.சித்திக்‌, இ,ஆ.ப., அவர்களின்‌ தலைமையிலான குழுவும்‌ தங்களின்‌ அறிக்கைகளைச்‌ சமர்ப்பித்துள்ளன. இவ்வறிக்கைகள்‌ அரசின்‌ பரிசீலனையில்‌ உள்ளன. அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டங்களுக்கான காப்பீட்டுத்‌ தவணைத்‌ தொகை செலுத்துவதற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌) முறையே 253 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 299.28 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும்‌, சம்பளங்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியங்கள்‌ மற்றும்‌ பிற ஓய்வுகாலப்‌ பலன்களுக்காக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ முறையே 55,399.75 கோடி ரூபாயும்‌, 29,627.11 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாகம்‌ - ஆ வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌ மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶132) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.73 · ¶132 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.299.28 crore continuation AIADMK

2020-21 Rs.342 crore continuation AIADMK

“In the Budget Estimates for the year 2020-21, Rs.342 crore has been provided towards premium for health insurance for Government employees and Rs.306.65 crore for pensioners.”
“அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டக்‌ காப்பீட்டுக்‌ கட்டணத்‌ தொகை செலுத்துவதற்காக முறையே, 342 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 306.65 கோடி ரூபாய்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத்‌ தொகையைப்‌ பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும்‌ வண்ணம்‌, விரிவான வழிகாட்டுதல்கள்‌ அரசால்‌ வெளியிடப்பட்டுள்ளன. அரசுப்‌ பணியாளர்களுக்கு வீடுகட்டும்‌ முன்பணம்‌ வழங்குவதற்காக 173.95 கோடி ரூபாய்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது. அரசுப்‌ பணியாளர்களின்‌ சம்பளங்கள்‌ மற்றும்‌ படிகளுக்கு 64,208.55 கோடி ரூபாயும்‌, ஒய்வூதியதாரர்களுக்கு ஒய்வூதியம்‌ வழங்குவதற்காக 32,009.35 கோடி ரூபாயும்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அரசு சிரமமான நிதி நிலைமையிலும்‌, அரசுப்‌ பணியாளர்களுக்கான அகவிலைப்‌ படியை, உரிய நேரத்தில்‌ ஒரே சீராக வழங்கி வருகின்றது. பாகம்‌ - ஆ வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌ மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶177) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.99 · ¶177 · source PDF ↗ · on the map →

2021-22 enhancement AIADMK · interim

“The present extended Tamil Nadu Government Employees New Health Insurance Scheme is coming to an end in June, 2021. The scheme will be extended with enhanced benefits. The overall coverage will be increased from the present level of Rs.4 lakh to Rs.5 lakh.”
“தற்போது செயல்பட்டு வரும்‌ விரிவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌, 2021 ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதம்‌ அன்று நிறைவடைகிறது. மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன்‌ இத்திட்டம்‌ நீட்டிக்கப்படும்‌. தற்போதைய ஒட்டுமொத்த காப்பீட்டுத்‌ தொகையான 4 இலட்சம்‌ ரூபாய்‌ 5 இலட்சம்‌ ரூபாயாக அதிகரிக்கப்படும்‌. குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டுத்‌ தொகை 7.5 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 10 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. மேலும்‌, அரிய வகை நோய்கள்‌ மற்றும்‌ அசாதாரண நிகழ்வுகளுக்கு, மொத்தம்‌ 20 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பில்‌ காப்பீட்டுத்‌ தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும்‌. பணமில்லா சிகிச்சை பெறுவதற்கான நடைமுறைகள்‌ மேலும்‌ ஒருங்கிணைக்கப்படும்‌. பாகம்‌ - ஆ வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌ மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.80 · ¶129 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.838 crore new project TVK · revised

“Government has launched the New Health Insurance Scheme, 2026 for Government Employees and their eligible family members, and Pensioners (including spouses) and Family Pensioners, for a period of five years from 01.07.2026 to 30.06.2031. Under the new scheme, the basic sum insured has been enhanced from Rs.5 lakh to Rs.7.50 lakh, and coverage for specified illnesses has been enhanced from Rs.10 lakh to Rs.12 lakh. The Corpus Fund for rare and specified illnesses has also been enhanced from Rs.10 lakh to Rs.15 lakh for employees. The Scheme covers 2,992 medical procedures and 46 specified illness procedures, through a network of 1,535 empanelled hospitals and Government Medical Institutions. This Government, committed to the welfare of Government employees, has allocated Rs.838 crore to implement this insurance scheme.”
“அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ அவர்களின்‌ தகுதியுடைய குடும்ப உறுப்பினர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ (துணைவியர்‌ உட்பட) மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக, 01.07.2026 முதல்‌ 30.06.2031 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின்‌ கீழ்‌, அடிப்படை காப்பீட்டுத்‌ தொகை 5 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 7.50 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீட்டுத்‌ தொகை 10 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 12 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரிய மற்றும்‌ குறிப்பிட்ட நோய்களுக்கு ஊழியர்களுக்கான திரள்‌ நிதி உதவித்‌ தொகை 10 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 15 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 2992மருத்துவ சிகிச்சை நடைமுறைகள்‌ மற்றும்‌ 46 குறிப்பிட்ட தீவிர நோய்களுக்கான சிகிச்சைகளும்‌ வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும்‌ 1535 அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ அரசு மருத்துவ நிறுவனங்கள்‌ மூலம்‌ சிகிச்சை பெறும்‌ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின்‌ நலனின்‌ எப்போதும்‌ துணை நிற்கும்‌ நமது அரசானது இந்த காப்பீட்டுத்‌ திட்டத்தினைச்‌ செயல்படுத்த 838 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு 47,240 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நீதிநிருவாகம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶162) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.77 · ¶162 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector