Welfare · dormant
Grants to Unorganised Workers Welfare Boards
First announced in 2015-16 and named again in 6 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2015-16 Rs.70 crores
“An amount of Rs.70 crores has been provided as grants to Unorganised Workers Welfare Boards in the Budget Estimates 2015-2016.”
“பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கான நிதியுதவிக்காக 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத் துறைக்காக மொத்தம் 139.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.66 · ¶119 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.70 crores
“An amount of Rs.70 crores has been provided as grants to Unorganised Workers Welfare Boards in this Revised Budget Estimates.”
“தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 66.97 இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 16,684 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்கள் 125.90 கோடி ரூபாய் அளவிற்கான சமூகப் பாதுகாப்பு பலன்களைப் பெற்றுள்ளனர். இணையம் மூலமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து, நலத் திட்டப் பலன்களை அவர்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்துறைக்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 152.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶136) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.65 · ¶136 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.70 crore
“An amount of Rs.70 crore has been provided as grants to these boards in the Budget Estimates 2017-2018.”
“மாநிலத்தில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த 17,556 கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 68.52 இலட்சம் உறுப்பினர்களுடன் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. 2016-2017 ஆம் ஆண்டில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு இதுவரை 115.25 கோடி ரூபாய் அளவிற்கான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இந்த நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.70 · ¶128 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.87.80 crore
“An allocation of Rs.87.80 crore has been made in this Budget for grants to Unorganised Workers' Welfare Boards.”
“தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உட்பட, 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மாநிலத்தில் உள்ளன. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், பிற மாநிலங்களிலிருந்து பணிபுரிய வந்து பதிவு செய்துள்ள 17,949 புலம் பெயர்ந்த உறுப்பினர்கள் உட்பட, மாநிலத்தில் இதுவரை 68.52 இலட்சம் தொழிலாளர்கள் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். 2017-2018 ஆம் ஆண்டில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு 54.38 கோடி ரூபாய் அளவிலான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நலவாரியங்களில் பதிவு செய்வதையும் நல உதவிகள் பெறுவதையும் எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு மானியம் வழங்க இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 87.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.67 · ¶115 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.148.83 crore
“An allocation of Rs.148.83 crore has been made in this Budget for grants to unorganised workers welfare boards.”
“தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உட்பட, 17 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள் உள்ளன. கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 21071 புலம் பெயர்ந்த உறுப்பினர்கள் உட்பட, மாநிலத்தில் இதுவரை 72.29 இலட்சம் தொழிலாளர்கள் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் 31.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலாளர்கள் தங்கும் அறைகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பபனை அமைப்புசாரா தொழிலாளர் பெறும் வகையில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களுக்கு மானியம் வழங்க இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 148.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி 10%. அண்மைக் காலங்களில், நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்து மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான திறன் மேம்பாட்டில், இந்த அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நெறி வழிகாட்டும் மையங்களாக தற்போது வேலைவாய்ப்பு மையங்கள் மாற்றமடைந்துள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தவும், இணையவழி சுய மதிப்பீடு செய்து கொள்ளவும், வேலை வழங்கும் நிறுவனங்களையும், வேலை தேடுபவர்களையும், அவர்களது தேவைகளை நிறைவு செய்வதற்கான இணைப்புத் தளமாகவும், மாநில அளவில் முதன்மையானதொரு தளமாக, காணொளிக் காட்சி வசதிகளுடன் கூடிய “மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம்” சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.56 · ¶100 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.149.82 crore
“An allocation of Rs.149.82 crore has been made in the Budget Estimates 2020-21 for grants to unorganized workers welfare boards.”
“தமிழ்நாடு தொழில் உறவுகளை எப்பொழுதும் சுமூகமாகப் பேணி வருகிறது. தொழிலாளர்கள் பிரச்சினை உடனடியாகத் தீர்வு செய்யப்படுவதை தொழிலாளர் நலத்துறை உறுதி செய்கிறது. 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, 2019 ஆம் ஆண்டில், 2,63,189 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4.32 இலட்சம் பயனாளிகளுக்கு 241.94 கோடி ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 149.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 5.44 கோடி ரூபாய் செலவில், 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்பு தலைக் கவசங்கள், பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகள், கையுறைகள் மற்றும் பாதுகாப்புக் கண்ணாடிகள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது. அனைத்து தகுதியான கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை இந்த அரசு வழங்கும். 2020-21 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் 20 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.73 · ¶131 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.215.64 crore
“An allocation of Rs.215.64 crore has been made in the Revised Budget Estimates for 2021-22 towards grants to the Unorganised Sector Workers Welfare Boards.”
“புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்த அரசு உறுதியாக உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு மானியங்களை வழங்குவதற்காக, 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் செயல்பாடு புதுப்பிக்கப்படும். அவர்களிடம் பயனற்று இருக்கும் கணிசமான நிதி, தொழிலாளர்களுக்கு உண்மையில் பயனளிக்கக்கூடிய வகையில் வீட்டுவசதி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.54 · ¶125 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.149.86 crore
“In the Revised Estimates for 2020-21, an enhanced allocation of Rs.149.86 crore has been made towards grants to unorganised Workers Welfare Boards.”
“பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்கள் நல வாரியத்தை அமைத்ததுடன், தற்போது தமிழ்நாட்டில் 18 அமைப்பு சாரா நல வாரியங்கள் உள்ளன. தற்போது, இந்த வாரியங்களில் 26,67,355 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 2011 ஆம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரையில், புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட 84,32,473 பயனாளிகளுக்கு, நல நிதி உதவியாக 2,219.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், உயர்த்தப்பட்ட ஒதுக்கீடாக அமைப்பு சாரா நல வாரியங்களுக்கு மானியத் தொகையாக 149.86 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சென்னை மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 1,20,309 பதிவு பெற்ற கட்டுமானப் பணியாளர்கள் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவை உட்கொள்கின்றனர். ஊரடங்கின் போது, 22.75 இலட்சம் அமைப்பு சாரா பணியாளர்களுக்கும் மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 143.52 கோடி ரூபாய் மதிப்பில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. பதிவு பெற்ற அமைப்பு சாரா பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000/-வீதம் 47513 கோடி ரூபாய் நிதியுதவி மூன்று தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.66 · ¶104 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside COVID-19 financial assistance to unorganised workers · 2021-22
- part of Construction workers welfare facilities · 2015-16
- part of Construction Workers Welfare Board revamp · 2021-22
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years