Industry · dormant

Handloom sale rebate subsidy

8 budgets named it 10 year span 998 ₹ crore allocated DMK / AIADMK governments

First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2011-12 ` 156 crores transfer scheme DMK · interim

“To further boost the sale of handloom cloth, ` 156 crores have been allocated for the sale rebate subsidy in this Interim Budget.”

tnbudget_2011-12_speech_en_interim · p.39 · ¶99 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.78.45 crores continuation AIADMK

“Rs.78.45 crores has been provided in the Budget Estimates 2013-2014 as handloom rebate.”

financedept_2013-14_speech_en · p.31 · ¶74 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.78 crore continuation AIADMK

“Further, Rs.78 crore has been provided as rebate to support handlooms and Rs.10 crore has been allocated to Khadi institutions for the year 2014-2015.”
“மாநிலத்தின்‌ தொழில்‌ வளர்ச்சியிலும்‌ வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும்‌ ஜவுளித்‌ தொழில்‌ அளித்துவரும்‌ முக்கியப்‌ பங்களிப்பை இந்த அரசு உணர்ந்துள்ளது. இலவச வேட்டி சேலைகள்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 499.16 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்து, இத்துறைக்கு அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அத்துடன்‌, கைத்தறித்‌ தொழிலுக்கான தள்ளுபடிச்‌ சலுகைக்காக 78 கோடி ரூபாயும்‌, கதர்‌ அமைப்புகளுக்காக 10 கோடி ரூபாயும்‌ 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.36 · ¶71 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.78.45 crores continuation AIADMK

“In addition, the Rebate Subsidy Scheme for the promotion of sale of handloom cloth will also be continued and a sum of Rs.78.45 crores has been included in the Budget Estimates 2015-2016 for this purpose.”
“வேளாண்‌ துறைக்கு அடுத்தபடியாக நமது மாநிலத்தில்‌ அதிகமான வேலைவாய்ப்புகளை கைத்தறி மற்றும்‌ நெசவுத்‌ தொழில்‌ அளித்து வருகிறது. பொங்கல்‌ திருநாளின்போது விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கும்‌ திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஏழை எளியோரின்‌ தேவைகளை நிறைவு செய்வதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும்‌, விசைத்தறி நெசவாளர்களுக்கும்‌ வேலைவாய்ப்பை இத்திட்டம்‌ அளித்து வருகிறது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 499.16 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, கைத்தறித்‌ துணிகளின்‌ விற்பனையை ஊக்குவிப்பதற்கான தள்ளுபடி மானியத்‌ திட்டத்தையும்‌ தொடர்ந்து செயல்படுத்த 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 78.45 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.40 · ¶63 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.78.46 crores continuation AIADMK · interim

“In the Interim Budget Estimates, Rs.495.16 crores has been allocated for Free Dhoti and Saree scheme and Rs.78.46 crores for rebate subsidy.”
“விலையில்லா சேலைகள்‌ மற்றும்‌ வேட்டிகள்‌ வழங்கும்‌ திட்டம்‌ மாநிலத்தில்‌ உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 2016 ஆம்‌ ஆண்டு பொங்கல்‌ பண்டிகையின்போது 167.89 இலட்சம்‌ சேலைகளும்‌, 167.81 இலட்சம்‌ வேட்டிகளும்‌ வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 499.16 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த கைத்தறி மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அளிக்கப்படும்‌ விற்பனை ஊக்கத்தொகையான 85.39 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை என்றாலும்‌, கைத்தறி நெசவாளர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, அந்த நிதியுதவியை எதிர்நோக்கி, மாநில பங்குத்‌ தொகை உள்ளிட்ட, 126.25 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது. மேலும்‌, நெசவாளர்களுக்கென 10,000 பசுமை வீடுகள்‌ கட்டுவதற்கான திட்டத்தையும்‌ இந்த அரசு அறிவித்து, 260 கோடி ரூபாய்‌ செலவில்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 495.16 கோடி ரூபாய்‌ விலையில்லா வேட்டி சேலை வழங்கும்‌ திட்டத்திற்காகவும்‌, 78.46 கோடி ரூபாய்‌ தள்ளுபடி மானியத்‌ திட்டத்திற்காகவும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.37 · ¶54 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.78.45 crores continuation AIADMK · revised

“An amount of Rs.487.45 crores and Rs.78.45 crores for Free Distribution of Dhoties and Sarees Scheme and Rebate Subsidy Scheme respectively have been included in this Revised Budget.”

tnbudget_2016-17_speech_en_revised · p.44 · ¶86 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2018-19 Rs.150 crore enhancement AIADMK

“Budgetary allocation for the rebate on the sale of handloom cloth will be substantially increased from Rs.80 crore to Rs.150 crore and Rs.40 crore will be provided for the Handloom Support Programme.”
“கைத்தறி நெசவாளர்களுக்குத்‌ தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ “விலையில்லா சேலைகள்‌, வேட்டிகள்‌ வழங்கும்‌ திட்டத்தைச்‌” செயல்படுத்துவதற்காக, 490.45 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, சந்தைப்படுத்துதலுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதால்‌, கைத்தறித்‌ துறைக்கு ஏற்படும்‌ பாதிப்பைத்‌ தவிர்க்க, தள்ளுபடி மானியத்‌ திட்டத்திற்கான ஒதுக்கீட்டை இந்த அரசு அதிகரித்துள்ளது. கைத்தறி நெசவுக்கு மேலும்‌ ஆதரவு அளிக்கும்‌ வகையில்‌, உற்பத்திப்‌ பொருட்களில்‌ புதுமை முயற்சிகளையும்‌, பல்வகைப்படுத்துதலையும்‌ ஊக்குவிக்கும்‌ வகையில்‌ நிதியுதவி அளிக்க *கைத்தறி உதவித்‌ திட்டம்‌” என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும்‌. கைத்தறி துணி விற்பனை மீதான தள்ளுபடி மானியத்‌ திட்டத்திற்கான ஒதுக்கீடு 80 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதுடன்‌, கைத்தறி உதவித்‌ திட்டத்திற்கு 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 40 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும்‌ ஆயத்த ஆடை தொழில்களை ஊக்குவித்து, நிலைக்கத்தக்க வகையில்‌ வலுப்படுத்தி மேம்படுத்திட ஒரு 'புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்‌ கொள்கையினை' அரசு விரைவில்‌ வெளியிடும்‌. வளர்ந்து வரும்‌ தொழில்நுட்ப ஜவுளி துணிகளை (Technical Textiles) தயாரிக்கும்‌ நிறுவனங்கள்‌ போன்று, புதிய உற்பத்தி முயற்சியில்‌ ஈடுபடும்‌ நிறுவனங்களை ஊக்குவிக்கவும்‌, ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும்‌ உரிய உத்திகளுடன்‌ இந்தப்‌ புதிய கொள்கை வடிவமைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.45 · ¶73 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.150 crore continuation AIADMK

“An amount of Rs.150 crore has been allocated in the Budget Estimates 2019-2020 for such rebate.”

tnbudget_2019-20_speech_en · p.58 · ¶105 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.150 crore continuation AIADMK

“The scheme of providing rebate to promote the sale of handloom cloth will be continued with a budget allocation of Rs.150 crore in 2020-21.”
“தமிழ்நாட்டில்‌ வேளாண்மைத்‌ துறையை அடுத்து, அதிக வேலைவாய்ப்பினை வழங்கும்‌ துறையாக ஐவுளி துறை உள்ளது. கைத்தறி விற்பனையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்படும்‌ தள்ளுபடி மானியத்‌ திட்டத்திற்கு 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 150 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. 2018-19 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கப்பட்ட கைத்தறி உதவித்‌ திட்டம்‌, 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 40 கோடி ரூபாய்‌ வரவு-செலவுத்‌ திட்ட நிதி ஒதுக்கீட்டில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. கைத்தறி மற்றும்‌ விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம்‌ வழங்கும்‌ திட்டம்‌ தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும்‌. இதற்கென, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ மின்‌ பகிர்மானக்‌ கழகத்திற்கான மானியத்‌ தொகையாக 360.33 கோடி ரூபாய்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶148) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.82 · ¶148 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector