Health · dormant
National Rural Health Mission (NRHM)
4 budgets named it 12 year span 5,156 ₹ crore allocated AIADMK / DMK governments
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2022-23.
Allocated by budget year
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2011-12 ` 900 crores
“During 2011-2012, the Government proposes to spend ` 900 crores under NRHM.”
“கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்காளை அடைவதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரத்தின் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் மகப்பேறு வசதிகளை அளிப்பதற்காக கூடுதலாக மூன்று செவிலியர்களை நியமித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல், கர்ப்பிணிப் பெண்களின் ரத்த சோகை நோயைத் தடுப்பதற்காகவும் இரும்புச் சத்து குறைபாடுகளைக் களைவதற்காகவும் கூடுதல் ஊட்டச் சத்து மேலாண்மை, மருத்துவமனையின் மூலம் மகப்பேறு வசதிகள் பெறுவதை அதிகரிக்கும் பொருட்டு ரத்த சேமிப்பு மையங்களை வலுப்படுத்துதற் ஆகிய பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதனால் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதமும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதத்தையும் மேலும் குறைப்பதற்காக, இந்த அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும். 2011-2012 ஆம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார நலத் திட்டத்திற்காக இந்த அரசு, 900 கோடி ரூபாய் செலவிடும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.55 · ¶89 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.950 crores
“In 2012-2013, this Government will spend Rs.950 crores under various programmes implemented under the National Rural Health Mission (NRHM).”
“தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக, 2012-2013 ஆம் ஆண்டில் இந்த அரசு 950 கோடி ரூபாய் செலவிடும். தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத வட்டாரங்களில், 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரும் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் இந்த அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், வட்ட, மாவட்ட மருத்துவமனைகளில் பேறுகால மற்றும் குழந்தைகள் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில், இதற்காக 158 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.55 · ¶87 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.1,400 crores
“During 2013-2014, Rs.1,400 crores will be spent by the State Health Society to implement this scheme.”
“ஆரம்ப சுகாதாரத்திற்கு தனிக் கவனம் அளிக்கக்கூடிய தேசிய ஊரக சுகாதார இயக்கம் (National Rural Health Mission), 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருபத்துநான்கு மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கச் செய்தல், அறுவை சிகிச்சை அறை, இரத்த சேமிப்பு மையம் மற்றும் பல் மருத்துவச் சேவை ஆகியவற்றுடன் செயல்படக்கூடிய 30 படுக்கை வசதி கொண்ட, தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை, ஒவ்வொரு வட்டாரத்திலும் ஏற்படுத்திட இலக்கிடப்பட்டுள்ளது. நகர்ப்புரப் பகுதிகளிலும், மருத்துவ வசதிகளை அளித்திட 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து 135 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களையும் இந்த அரசு தொடங்கியுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட மாநில சுகாதார சங்கம் மூலம் 1400 கோடி ரூபாய் செலவிடப்படும். தொற்று அல்லாக நோய்கள் மீது சிறப்புக் கவனம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.39 · ¶98 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.1,906 crore
“An amount of Rs.1,906 crore has been provided for National Rural Health Mission”
“தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு 1906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 847 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1547 கோடி ரூபாயும் இந்த வரவு-௮சலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.29 · ¶80 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside National Health Mission urban component · 2014-15
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years