Health · dormant
Oral cancer screening programme
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2012-13
“A new programme to screen the high risk population for oral cancer and to diagnose it at an early stage will also be launched.”
“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மருத்துவத் துறையின் கட்டமைப்புகளை வலுப்படுத்த பல்வேறு முன் முயற்சிகளை இந்த அரசு எடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறே, 385 வட்டாரங்களிலும் 29.36 கோடி ரூபாய் செலவில் நடமாடும் மருத்துவமனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முப்பத்தியொரு தொலைதூர இடங்களில் தொலை மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு ஏதுவான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2012-2013 ஆம் ஆண்டில் புதிய முயற்சிகளாக, மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள அறுவைசிகிச்சை அரங்கங்கள் 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். பத்து கோடி ரூபாய் செலவில் பிரேதப் பரிசோதனை நிலையங்களின் வசதிகள் மேம்படுத்தப்படும். போதிய நோய்க் கண்டுபிடிப்பு வசதிகளை உறுதி செய்யும் வகையில், 10 கோடி ரூபாய் செலவில் நோய் கண்டுபிடிப்புக் கருவிகள் வழங்கப்படுவதோடு, ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு-தனியார் ஒத்துழைப்பு மூலமாக எம்.ஆர்.ஐ. கருவிகள் அளிக்கப்படும். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவு சிறப்பு உயர்நிலை மையமாக 5 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். கிங் நிறுவனத்தில் திசு வங்கியை அமைப்பதற்கும், மீண்டும் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கவும், 5 கோடி ரூபாய் வழங்கப்படும். புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளுக்கான தேவைகள் அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு, மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனையிலும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தலா 15 கோடி ரூபாய் செலவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். மாநிலத்தின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள புற்று நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இவை பேருதவியாக இருக்கும். இது தவிர, வாய்ப் புற்றுநோய் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து நோயை ஆரம்பகட்ட நிலையிலேயே கண்டறிவதற்கான புதிய திட்டமும் தொடங்கப்படும். பள்ளிக் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.56 · ¶88 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years