Police & justice · dormant
Police force resourcing and recruitment
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Police & justice projects →
What each budget said, year by year
2021-22
“Effective measures will be taken to ensure that the remaining 14,317 vacancies in the police force against the sanctioned strengthen of 1,33,198 are filled.”
“நாட்டின் மிகத் திறமையான மற்றும் சிறப்பான காவல் படைகளில் ஒன்றாகத் திகழும் வகையில், தமிழ்நாடு காவல்துறையின் தரத்தை மீட்டெடுப்பது இந்த அரசின் நோக்கம், மனிதவளம், வாகனங்கள், கருவிகள், ஆயுதங்கள், தளவாடங்கள், கட்டமைப்பு ஆகிய காவல்துறையின் தேவைகளை மாநில அரசு நிறைவு செய்யும், காவல்துறையில் ஒப்பளிக்கப்பட்ட 1,33,198 பணியிடங்களில், மீதமுள்ள 14,317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெரும் குற்றங்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். காவல்துறைக்கு மொத்தம் 8,930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தியணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை 38 தீ விபத்துகள் மற்றும் தடுக்கத்தக்க பல்வேறு விபத்துக்கள், கணிசமான அளவில் பொருளாதார மற்றும் மனித இழப்புகளை ஏற்படுத்துகின்றன. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தீ விபத்து பாதுகாப்பு செயலாக்க நடவடிக்கைகள் வாயிலாக, தீ விபத்துகளைத் தடுப்பதற்கு இந்த அரசு பாடுபடும். இந்த நோக்கத்திற்காக, தற்போதுள்ள 1985 ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் வந்து சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் அறிவியல்பூர்வமாக வரைபடங்களின் உதவியுடன் தேர்வு செய்யப்படும். மாதிரி பயிற்சிக் கருவிகள் மற்றும் சுய பாதுகாப்புச் சீருடைகள் போன்றவை போதிய அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு வழங்கப்படும். இத்துறைக்கு 405.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு 399 விபத்துகளற்ற தமிழ்நாடு என்னும் இலக்கை நோக்கிச் செல்வதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதனால் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்திருப்பினும், மொத்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாகவே உள்ளது. 2020 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த போது, வாகனப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்த பின்னரும், ஏற்றுக்கொள்ள இயலாத அளவில், 45,489 விபத்துகள் மற்றும் 8,060 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் குறைப்பதற்காக, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, காவல், மருத்துவம் மற்றும் கல்வித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும். மேலும், போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும், இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு 500 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நீதித்துறை நிர்வாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.17 · ¶37 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- New Armed Reserve Platoons and Company · sibling
Nearby in the same sector
- Modernisation of Police scheme · 5 years
- Construction of buildings for 109 Police Stations · 5 years
- Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) · 4 years
- New Fire and Rescue Service Stations · 4 years
- Court buildings and residential quarters construction · 4 years
- Digitization of High Court of Madras court records · 3 years