Education · completed claimed

School infrastructure (259 schools)

9 budgets named it 10 year span 2,418 ₹ crore allocated 4,166 ₹ crore whole-project cost DMK / AIADMK governments

First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 ` 230 crores completion claim project cost DMK · interim

“In the year 2010-2011 alone infrastructure facilities were created in 259 schools at a cost of ` 230 crores.”
“கடந்த ஐந்தாண்டுகளில்‌ 569 புதிய தொடக்கப்‌ பள்ளிகள்‌ இந்த அரசினால்‌ தொடங்கப்பட்டுள்ளன. 2,626 தொடக்கப்‌ பள்ளிகள்‌ நடுநிலைப்‌ பள்ளிகளாகவும்‌, 645 நடுநிலைப்‌ பள்ளிகள்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளாகவும்‌, 570 உயர்நிலைப்‌ பள்ளிகள்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளாகவும்‌ தரம்‌ உயர்த்தப்பட்டுள்ளன. அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 30,068 புதிய வகுப்பறைகளும்‌, நபார்டு திட்டத்தில்‌ 16,980 வகுப்பறைகளும்‌ கட்டப்பட்டுள்ளன. 2010-2011 ஆண்டில்‌ மட்டும்‌ 259 பள்ளிகளில்‌, ரூபாய்‌ 230 கோடி செலவில்‌ உள்கட்டமைப்பு வசதிகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.20 · ¶46 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.293 crores continuation AIADMK

“For the year 2013-2014, Rs.700 crores is provided under SSA, Rs.366.57 crores under RMSA and Rs.293 crores under NABARD assistance.”
“கூடுதல்‌ வகுப்பறைகள்‌, குடிநீர்‌ வசதிகள்‌ போன்ற பள்ளிகளுக்குத்‌ தேவையான கட்டமைப்பு வசதிகளை அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டம்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டம்‌ மற்றும்‌ நபார்டு வங்கி நிதியுதவி ஆகியவற்றின்‌ மூலம்‌, இந்த அரசு தொடர்ந்து அமைக்கும்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டு மேற்கூறிய திட்டங்களுக்காக 1,684.20 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2013-2014 ஆம்‌ ஆண்டிற்கு அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டத்திற்கு 700 கோடி ரூபாயும்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டத்திற்கு 366.57 கோடி ரூபாயும்‌, நபார்டு நிதியுதவி திட்டங்களுக்கு 293 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.42 · ¶103 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.100 crore continuation project cost AIADMK

“Further, Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) at a cost of Rs.470 crore, Rural Building Maintenance and Renovation Scheme (RBMRS) at a cost of Rs.100 crore and Comprehensive School Infrastructure Development Scheme (CSIDS) at a cost of Rs.100 crore will be continued by this Government during 2014-2015.”
“பொதுச்‌ சொத்துக்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம்‌ அளிக்கும்‌ வகையில்‌, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டம்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 6,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தில்‌ உருவாக்கப்படும்‌ சொத்துகளை நிலைப்படுத்தி பராமரித்திட, கிராமப்புறக்‌ கட்டமைப்புத்‌ திட்டத்திற்கு மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ தன்னிறைவுத்‌ திட்டத்திற்கு 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, 470 கோடி ரூபாய்‌ செலவில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டுத்‌ திட்டமும்‌, 100 கோடி ரூபாய்‌ செலவில்‌ கிராமப்புற கட்டடங்கள்‌ பராமரிப்பு மற்றும்‌ புனரமைப்புத்‌ திட்டமும்‌, 100 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டமும்‌ இந்த அரசால்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.39 · ¶78 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.250 crore continuation AIADMK

“Under the NABARD scheme, Rs.250 crore has been earmarked during 2014-2015 for meeting the infrastructure needs of schools.”
“புதிய பள்ளிக்‌ கட்டடங்கள்‌, கூடுதல்‌ வகுப்பறைகள்‌, குடிநீர்‌ வசதிகள்‌, கழிப்பறை வசதிகள்‌, மாணவியருக்கும்‌, மாற்றுத்‌ திறனாளிகளுக்கும்‌ தனி கழிப்பறைகள்‌, சமையல்‌ கூடங்கள்‌, சுற்றுச்‌ சுவர்கள்‌, ஆய்வகங்கள்‌ போன்ற கட்டமைப்புகளைப்‌ பள்ளிகளில்‌ ஏற்படுத்திட அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டம்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டம்‌, நபார்டு வங்கியின்‌ நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களில்‌ ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்களைப்‌ பயன்படுத்தி கணிசமான முதலீடுகளை இந்த அரசு செய்துள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ பள்ளிகளின்‌ கட்டமைப்புத்‌ தேவைகளை நிறைவு செய்ய நபார்டு நிதியுதவியின்‌ மூலம்‌ 250 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டத்திற்கு, மாநில அரசின்‌ பங்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 700 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டத்திற்கு, மாநில அரசின்‌ பங்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 384.90 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶101) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.50 · ¶101 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.450.96 crores continuation project cost AIADMK

“In the coming financial year also, strengthening of school infrastructure will continue at a cost of Rs.450.96 crores by dovetailing funds from various sources.”
“கழிப்பறை வசதிகள்‌ போதுமான அளவு இல்லாத பள்ளிகள்‌ 2013-2014-ல்‌ கணக்கெடுக்கப்பட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத்‌ தீர்வு காண இந்த அரசு சிறப்பு கவனம்‌ செலுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில்‌ மாணவர்களுக்கும்‌ மாணவிகளுக்கும்‌ தனித்‌ தனியாக 11698 புதிய கழிப்பறைகள்‌ 73.52 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டப்பட்டுள்ளன. மேலும்‌, பயன்படுத்தாமல்‌ இருந்த 10,776 கழிப்பறைகள்‌ 41.67 கோடி ரூபாய்‌ செலவில்‌ புனரமைக்கப்பட்டுள்ளன. நமது அரசின்‌ இத்தகைய நடவடிக்கைகளால்‌ அரசுப்‌ பள்ளிகள்‌ அனைத்திலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள்‌ 100 சதவீதம்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில்‌ 2,688.97 கோடி ரூபாய்‌ செலவில்‌, கூடுதல்‌ வகுப்பறைகள்‌, அறிவியல்‌ சோதனைக்‌ கூடங்கள்‌, குடிநீர்‌ வசதி, சுற்றுச்‌ சுவர்கள்‌ மற்றும்‌ கழிப்பறைகள்‌ போன்ற முக்கியக்‌ கட்டமைப்பு வசதிகளை பள்ளிகளில்‌ இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. வரும்‌ நிதியாண்டிலும்‌, பல்வேறு நிதி ஆதாரங்களைப்‌ பயன்படுத்தி, 450.96 கோடி ரூபாய்‌ செலவில்‌ பள்ளிக்‌ கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.54 · ¶94 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.497.31 crores completion claim AIADMK · interim

“48,020 works have been taken up with an outlay of Rs.497.31 crores under the Comprehensive School Infrastructure Development Scheme (CSIDS) from 2011-2012.”
“ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ ஆரம்பப்‌ பள்ளிகளில்‌, புதிய கட்டடங்கள்‌, சமையல்‌ கூடங்கள்‌, குடிநீர்‌ வசதிகள்‌, கழிவறைகள்‌ போன்ற அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக, 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து, ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 497.31 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 48,020 பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள்‌ தொகுதி மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ 2,180 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 77,960 பணிகள்‌ செயல்படுத்தப்பட்டுள்ளன. 2016-2017 ஆம்‌ ஆண்டிலும்‌ இத்திட்டத்திற்காக 470 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.39 · ¶58 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.4,165.95 crores completion claim project cost AIADMK · interim

“Infrastructure facilities like additional classrooms, science laboratories, drinking water facilities, compound walls, separate toilets for boys and girls have been provided in schools, at a cost of Rs.4,165.95 crores.”
“பள்ளிகளில்‌ தரமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்த அரசு உயர்‌ முன்னுரிமை அளித்து வருகிறது. கூடுதல்‌ வகுப்பறைகள்‌, அறிவியல்‌ ஆய்வகங்கள்‌, குடிநீர்‌ வசதிகள்‌, சுற்றுச்‌ சுவர்கள்‌, மாணவ மாணவியர்களுக்கு தனித்தனி கழிவறைகள்‌ போன்ற கட்டமைப்பு வசதிகள்‌ 4,165.95 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ போதிய குடிநீர்‌ மற்றும்‌ கழிவறை வசதிகளை வழங்குவதற்காக, நபார்டு வங்கியின்‌ நிதியுதவியோடு 650.68 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, அனைவருக்கும்‌ கல்வி இயக்கத்தின்‌ கீழ்‌ 6,124 கோடி ரூபாயும்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வி இயக்கத்தின்‌ கீழ்‌ 2,069 கோடி ரூபாயும்‌ வழங்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ அனைவருக்கும்‌ கல்வி இயக்கத்திற்காக 2,329.15 கோடி ரூபாயும்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வி இயக்கத்திற்காக 1,139.52 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.50 · ¶78 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores continuation AIADMK · revised

“basic infrastructure facilities such as new buildings, kitchen sheds, water supply and toilets are being created under the 'Comprehensive School Infrastructure Development Scheme' (CSIDS). This will be continued with an amount of Rs.100 crores during 2016-2017.”
“ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌” (Comprehensive School Infrastructure Development Scheme) கீழ்‌, கிராமப்புறப்‌ பகுதிகளிலுள்ள ஆரம்ப மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ புதிய கட்டடங்கள்‌, சமையற்‌ கூடங்கள்‌, குடிநீர்‌ வழங்கல்‌, கழிவறைகள்‌ முதலான அடிப்படை உட்கட்டமைப்புகள்‌ ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 100 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்படும்‌. பல்வேறு திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ துவங்கப்பட்ட தமிழ்நாடு ஊரக சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌”, 2016-2017 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌, பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள்‌ திட்டத்தின்‌” (PMGSY) ஒன்பதாவது கட்டப்‌ பணிகள்‌ 357.12 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ நிலையில்‌, இத்திட்டத்தின்‌ பத்தாவது கட்டப்‌ பணிகளாக 758.44 கோடி ரூபாய்‌ செலவில்‌ 573 சாலைகளின்‌ மேம்பாட்டுப்‌ பணிகளும்‌, 22 பாலப்‌ பணிகளும்‌ நடப்பு ஆண்டில்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.45 · ¶90 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2016-17 Rs.333.61 crores continuation AIADMK · revised

“For infrastructure improvement in schools like classrooms, toilets and drinking water facilities with NABARD assistance, an amount of Rs.333.61 crores has been provided in this Revised Budget Estimates.”
“பள்ளிகளில்‌ போதுமான அளவிற்கு கழிவறை வசதிகள்‌ செய்து தரப்படுவதற்கும்‌, அவை சிறப்பான முறையில்‌ பராமரிக்கப்படுவதற்கும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ முக்கியத்துவம்‌ அளித்து வருகிறார்கள்‌. கடந்த ஐந்தாண்டுகளில்‌ மேற்கொண்ட முயற்சிகளின்‌ தொடர்ச்சியாக, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 59.25 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, தொடக்க மற்றும்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ 4,339 கழிவறைகள்‌ அமைத்துத்‌ தரப்படும்‌. கழிவறைகளைப்‌ பராமரிப்பதற்காக மட்டும்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 57.63 கோடி ரூபாயை உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலம்‌ வழங்கி, அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ உள்ள கழிவறைகள்‌ சுத்தமாகப்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌ என்ற நெடுநாள்‌ தேவையை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நிறைவு செய்துள்ளார்கள்‌. இத்திட்டம்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. இம்முன்‌ முயற்சி மத்திய அரசால்‌ பாராட்டப்பட்டுள்ளது மட்டுமல்லாமல்‌, பிற மாநிலங்களும்‌ இதனை முன்மாதிரியாகப்‌ பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. நபார்டு வங்கிக்‌ கடன்‌ உதவியுடன்‌ வகுப்பறைகள்‌, கழிவறைகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ வசதிகள்‌ போன்ற பள்ளிக்‌ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, இந்த திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 333.61 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶117) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.57 · ¶117 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.352 crore continuation AIADMK

“An amount of Rs.352 crore, including loan assistance from NABARD, has been provided in the Budget Estimates 2017-2018 for infrastructure development in schools.”
“வகுப்பறைகள்‌, அறிவியல்‌ ஆய்வுக்‌ கூடங்கள்‌, குடிநீர்‌ வசதி, சுற்றுச்சுவர்‌ மற்றும்‌ சாய்வுதளங்கள்‌, மாணவ, மாணவியருக்கான தனித்தனிக்‌ கழிவறைகள்‌ உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பள்ளிகளில்‌ ஏற்படுத்துவதற்கு இந்த அரசு சிறப்பு கவனம்‌ செலுத்தி வருகிறது. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌, இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 440.98 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்‌ கழிவறைகளில்‌ சுகாதாரத்தைப்‌ பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலம்‌ 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 57.63 கோடி ரூபாய்‌ பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2017-2018 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்படும்‌. நபார்டு வங்கியிடமிருந்து பெறப்படும்‌ கடனுதவியையும்‌ சேர்த்து பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 352 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶110) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.61 · ¶110 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.333.36 crore continuation AIADMK

“In 2018-2019, this Government will take up strengthening of school infrastructure with NABARD's loan assistance at a cost of Rs.200 crore and Rs.333.36 crore has been provided in the Budget Estimates for 2018-2019 for the development of school infrastructure.”
“மாறி வரும்‌ சூழலில்‌ எதிர்நோக்கியுள்ள சவால்களைச்‌ சமாளிப்பதற்கு, தேசிய இடைநிலைக்‌ கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டம்‌ உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரிய பாடத்திட்டங்களுடன்‌ ஒப்பீடு செய்து, பள்ளிப்‌ பாடத்திட்டங்களில்‌ உரிய மாற்றம்‌ செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே புத்தகங்களைப்‌ படிக்கும்‌ பழக்கத்தை ஏற்படுத்த, அனைத்து உயர்நிலைப்‌ பள்ளிகளிலும்‌, மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ தற்போதுள்ள நூலகங்கள்‌ புதுப்பிக்கப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌, 200 கோடி ரூபாய்‌ செலவில்‌ நபார்டு வங்கி உதவியுடன்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பள்ளிகளில்‌ உட்கட்டமைப்பை மேம்படுத்த 33336 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளிலுள்ள கழிவறைகளை தூய்மையாகவும்‌, சுகாதாரத்துடனும்‌ பராமரிப்பதற்காக, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 54.50 கோடி ரூபாய்‌ உள்ளாட்சி அமைப்புகளால்‌ வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ வரும்‌ நிதியாண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.61 · ¶103 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.381.31 crore continuation project cost AIADMK

“In order to provide adequate infrastructure to Government schools, the Government will take up construction of classrooms, labs, toilets and other facilities at a cost of Rs.381.31 crore with NABARD loan assistance.”
“புத்தகப்‌ பைகள்‌, காலணிகள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, வடிவியல்‌ பெட்டிகள்‌ உட்பட, மாணவர்களுக்கு விலையில்லாமல்‌ வழங்கும்‌ நலத்‌ திட்டங்கள்‌ தொடர்ந்து சிறப்பாகச்‌ செயல்படுத்தப்படும்‌. இதற்காக, 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1,656.90 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்கு, பத்து, பதினொன்று மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ அனைத்து மாணவ மாணவியருக்கும்‌ 5,000 ரூபாயை சிறப்பு ஊக்கத்தொகையாக இந்த அரசு தொடர்ந்து வழங்கும்‌. இதற்காக, வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 313.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ மடிக்கணினி வழங்கும்‌ திட்டத்திற்காக வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1362.27 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப்‌ பள்ளிகளுக்குப்‌ போதுமான உட்கட்டமைப்பை வழங்குவதற்காக, நபார்டு வங்கியின்‌ கடனுதவியுடன்‌, 381.31 கோடி ரூபாய்‌ செலவில்‌ வகுப்பறைகள்‌ கட்டுதல்‌, ஆய்வகங்கள்‌, கழிப்பறைகள்‌ மற்றும்‌ பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.45 · ¶77 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.258.82 crore continuation AIADMK

“NABARD has recently sanctioned infrastructure upgradation in 158 Government High and Higher Secondary Schools at a cost of Rs.277.88 crore under RIDF. To implement NABARD funded projects, a sum of Rs.258.82 crore has been provided in the Budget Estimates for 2020-21.”
“கூடுதல்‌ வகுப்பறைகள்‌, ஆய்வகங்கள்‌, கழிப்பறைகள்‌ மற்றும்‌ பிற வசதிகளை அமைப்பதன்‌ மூலம்‌ பள்ளி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. 158 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 277.88 கோடி ரூபாய்‌ செலவில்‌ உட்கட்டமைப்பு மேம்பாட்டுப்‌ பணிகளை, ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ மேற்கொள்ள நபார்டு வங்கி அண்மையில்‌ ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. நபார்டு வங்கித்‌ திட்டங்களுக்காக, 2020-21 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 258.82 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின்‌ மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்‌ தர ஆய்வில்‌, பள்ளிகளில்‌ பாதுகாப்பான குடிநீர்‌ வசதி வழங்கும்‌ பிரிவில்‌, தமிழ்நாடு சிறந்து விளங்கும்‌ மாநிலம்‌ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.65 · ¶115 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector