Urban · dormant

Tamil Nadu Urban Livelihood Mission

7 budgets named it 8 year span 1,129 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 6 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2012-13 Rs.200 crores new project AIADMK

“Borrowing on the salient features of major rural poverty eradication programmes like Pudhu Vaazhvu, this Government will launch the Tamil Nadu Urban Livelihood Mission in the coming financial year. This programme will focus on livelihood security for the urban poor by providing skill and employment opportunities, housing and basic amenities, universal access to health and education, social mobilisation and special homes for vulnerable groups like street children and urban homeless, etc. It will lay special emphasis on inclusive policies involving women, destitutes and differently abled persons by dovetailing ongoing sectoral programmes. An amount of Rs.200 crores has been provided in this Budget for this programme.”
“கிராமப்புற வறுமை போன்றே, நகர்ப்புர வறுமை கடுமையாக இருந்தாலும்‌, சில சமயங்களில்‌ அதன்‌ தாக்கம்‌ மிக அதிகமாக உள்ளது. எனினும்‌, இதில்‌ போதிய கவனம்‌ இதுவரை செலுத்தப்படவில்லை. மத்திய அரசுத்‌ திட்டமான ஸ்வர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார்‌ யோஜனா (SUSRY) திட்டம்‌, இப்பிரச்சனையைத்‌ தீர்க்க போதுமானதாக இல்லை. இந்நிலையை சரிசெய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது. புது வாழ்வு போன்ற கிராமப்புற வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களின்‌ முக்கிய கூறுகளின்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதாரத்‌ திட்டம்‌' என்ற புதிய திட்டத்தை இந்த அரசு வரும்‌ நிதியாண்டில்‌ தொடங்கும்‌. திறன்‌ மேம்பாடு, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும்‌ கல்வி, சுகாதாரம்‌, சமுதாய மேம்பாடு மற்றும்‌ தெருக்குழந்தைகள்‌, வீடற்றவர்கள்‌ போன்ற மிகுந்த பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினருக்கான சிறப்பு இல்ல வசதிகள்‌ ஆகியவற்றை உள்ளடக்கி, நகர்ப்புர ஏழைகளுக்கு வாழ்வாதாரப்‌ பாதுகாப்பினை இத்திட்டம்‌ வழங்கிடும்‌. தற்போதுள்ள பல்வேறு திட்டங்களையும்‌ ஒருங்கிணைத்து பெண்கள்‌, ஆதரவற்றோர்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ ஆகியோருக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ரூபாய்‌ 200 கோடி நிதி ஒதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. இதுவரை புறக்கணிக்கப்பட்ட நகர்ப்புர வறியோர்‌ இதன்‌ மூலம்‌ மிகுந்த பயன்களைப்‌ பெற்று அவர்களும்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ பங்குபெற இம்முயற்சி உதவும்‌ என இந்த அரசு நம்புகிறது. திறன்‌ மேம்பாடு மற்றும்‌ வேலைவாய்ப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶14) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.10 · ¶14 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.200 crores continuation AIADMK

“In 2013-2014 also, Rs.200 crores has been allocated for the TNULM.”

financedept_2013-14_speech_en · p.11 · ¶21 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.200 crore continuation AIADMK

“A sum of Rs.200 crore has been provided in the Budget Estimates 2014-2015 under TNULM. In the coming financial year, 62 shelters will be built for homeless destitute persons in urban areas and 45 existing shelters will be upgraded through the TNULM.”
“நகரப்‌ பகுதிகளில்‌ மக்கள்‌ தொகை பெருகி வரும்‌ நிலையில்‌ நகர்ப்புர வறுமை ஒரு பெரும்‌ சவாலாக உருவெடுத்துள்ளது. நகர்ப்புர பகுதிகளில்‌ சுமார்‌ 17.28 லட்சம்‌ குடும்பங்கள்‌ வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள குடும்பங்களாக ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. சமூகப்‌ பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SECC), நகர்ப்புர மனிதவள புள்ளிவிபரம்‌ (USHA) மற்றும்‌ ராஜீவ்‌ வீட்டுவசதித்‌ திட்டம்‌ (RAY) போன்ற திட்டங்களில்‌ கண்டறியப்பட்ட வறுமை கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள குடும்பங்களின்‌ விபரம்‌ ஏற்கெனவே உள்ள புள்ளி விபரங்களோடு ஒத்திசைவு செய்யப்பட்டு வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள குடும்பங்களின்‌ புதிய ஒருங்கிணைந்த பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. நகர்ப்புர வறுமையை எதிர்கொள்வது ஒரு மிகுந்த சவாலான பிரச்சினை என்பதால்‌, 'தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்‌' என்ற பெரும்‌ முன்முயற்சியை மாநில அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. தகுதியானவர்கள்‌ விடுபட்டுவிடாமல்‌ உதவத்தக்க நெகிழ்வுத்‌ தன்மையோடு இத்திட்டம்‌ உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும்‌ சுவர்ண ஜெயந்தி ஸகாரி ரோஜ்கார்‌ யோஜனா என்ற திட்டத்தை தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கமாக மாற்றியமைத்து 2013 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌ தொடங்கியுள்ளது. இத்திட்டங்களின்‌ நோக்கத்தைச்‌ சிறப்பான முறையில்‌ எட்டிட தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கமும்‌, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கமும்‌ ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்‌. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு 2014-2015 ஆம்‌ ஆண்டு நிதிநிலை அறிக்கையில்‌ 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. வரும்‌ நிதி ஆண்டில்‌ தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தில்‌ வீடுகளற்ற ஆதரவற்றோருக்கு 62 புதிய காப்பிடங்கள்‌ ஏற்படுத்தப்படுவதுடன்‌, ஏற்கெனவே இயங்கி வரும்‌ 45 காப்பிடங்களை மேம்படுத்தவும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. சட்டம்‌ ஒழுங்கு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.5 · ¶7 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.107 crores continuation AIADMK

“A sum of Rs.250 crores is provided under NULM and Rs.107 crores is provided under TNULM in the Budget Estimates 2015-2016.”
“குடிசைப்‌ பகுதிகள்‌ போன்ற சிக்கலான பிரச்சினைகளின்‌ காரணமாக கிராமப்புற வறுமையைக்‌ காட்டிலும்‌ நகர்ப்புர வறுமையை எதிர்கொள்வது ஒரு கடினமான சவாலாக உள்ளது. நகர்ப்புர வறுமையை எதிர்கொள்ள இந்த அரசு 2012-2013 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்‌ என்ற ஒரு முழுமையான திட்டத்தைத்‌ தொடங்கியது. அதே வேளையில்‌ முந்தைய சுவர்ண ஜெயந்தி நகர்ப்புர வேலைவாய்ப்புத்‌ திட்டத்திற்குப்‌ பதிலாக, தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்‌ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ அறிவித்தது. பேரூராட்சிகளுக்கும்‌, ஒரு இலட்சத்திற்கும்‌ குறைவான மக்கள்தொகை உள்ள நகராட்சிகளுக்கும்‌ இப்புதிய திட்டம்‌ விரிவுபடுத்தப்படாததால்‌, வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களை மாநிலம்‌ முழுவதும்‌ சிறப்பாகச்‌ செயல்படுத்திடும்‌ வகையில்‌ தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின்‌ மூலம்‌ கிடைக்கும்‌ நிதியை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்க நிதியோடு ஒருங்கிணைத்து, வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களை மாநிலத்தின்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ தேசிய நகர்ப்புர வாழ்வாதாரத்‌ திட்டத்திற்காக 250 கோடி ரூபாயும்‌, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதாரத்‌ திட்டத்திற்காக 107 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, அனைவரும்‌ பயன்பெறத்தக்க வகையில்‌ வீட்டுவசதிகளை ஏற்படுத்தவும்‌, கல்வி, சுகாதாரம்‌ போன்ற பணிகளுக்கும்‌ தேவையான நிதி அந்தந்த துறைகளுக்கு அளிக்கப்படும்‌ ஒதுக்கீட்டின்‌ மூலம்‌ மேற்கொள்ளப்படும்‌. நிர்வாக ஆளுமை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.10 · ¶12 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.100 crores new project AIADMK · interim

“In the Interim Budget Estimates, Rs.250 crores has been provided for NULM and Rs.100 crores for TNULM.”
“மாவட்டத்‌ தலைநகரமாக உள்ள அல்லது ஒரு இலட்சத்திற்கும்‌ மேல்‌ மக்கள்‌ தொகை கொண்ட 40 நகர்ப்புர உள்ளாட்சிகளில்‌ மட்டும்‌, 'தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தை” மத்திய அரசு செயல்படுத்த அனுமதித்துள்ளது. 2014-2015 மற்றும்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டுகளுக்கு, முறையே 85.86 கோடி ரூபாயும்‌, 172.45 கோடி ரூபாயும்‌ இத்திட்டத்தில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நிதியுதவி அளிக்க 39,062 நடைபாதை வியாபாரிகள்‌ கண்டறியப்பட்டுள்ளனர்‌. மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள நகர்ப்புரப்‌ பகுதிகளிலிருந்து வறுமையினை முழுமையாக ஒழிக்க வேண்டும்‌ என்ற நோக்குடன்‌, “தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தினை” மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையிலான இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அனைத்து வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களுக்கும்‌ தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தை ஒருங்கிணைப்பு அமைப்பாகச்‌ செயல்படும்‌ வகையில்‌ இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 250 கோடி ரூபாயும்‌, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 100 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறன்‌ மேம்பாடு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.8 · ¶10 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.272.12 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.272.12 crore has been allocated for these urban poverty alleviation programmes.”

tnbudget_2017-18_speech_en · p.9 · ¶12 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.50 crore continuation AIADMK

“A sum of Rs.150 crore has been provided under the DAY-NULM and Rs.50 crore under TNULM in the Budget Estimates 2019-2020.”

tnbudget_2019-20_speech_en · p.40 · ¶69 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector