Health · announced once

Thai Maaman Thanga Mothiram Thittam

1 budget named it 1 year span 560 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2026-27 Rs.560 crore new project TVK · revised

“this Government will implement the 'Thai Maaman Thanga Mothiram Thittam'. Under this scheme, every newborn delivered in a Government hospital will receive a 1-gram gold ring as a gift from their beloved Thai Mamman, the Hon'ble Chief Minister, commemorating the birth of the child and celebrating the joy and significance of motherhood. A sum of Rs.560 crore is provided in the Revised Budget Estimates for this scheme.”
“தாய்‌ மற்றும்‌ குழந்தை நல பராமரிப்பு, தமிழ்நாட்டின்‌ பொது சுகாதார அமைப்பின்‌ முக்கிய தூணாக விளங்குகிறது. சமீபத்திய தேசிய மாதிரி பதிவு அமைப்பின்‌ கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின்‌ குழந்தை இறப்பு விகிதம்‌ ஆயிரம்‌ பிறப்புகளுக்கு 11ஆக உள்ளது. இது தேசிய அளவில்‌ மிகக்‌ குறைந்த விகிதங்களில்‌ ஒன்றாகும்‌. அரசு தொடர்ந்து பொது சுகாதாரத்‌ துறையில்‌ டசயல்படுத்திய திட்டங்களால்‌ மட்டுமே இது சாத்தியமானது. இதற்குச்‌ சான்றாக, மாநிலத்தில்‌ 99.9 சதவித பிரசவங்கள்‌ மருத்துவமனைகளில்‌ நடைடபறுகின்றன. இவற்றில்‌ 53 சதவிதத்திற்கும்‌ மேற்பட்ட பிரசவங்கள்‌ அரசு மருத்துவமனைகளில்‌ நடைடுபறுகின்றன. அரசு மருத்துவமனைகளில்‌ நடைபெறும்‌ பிரசவங்களின்‌ எண்ணிக்கையை அதிகரித்து, இதன்‌ மூலம்‌ மருத்துவத்‌ தேவைகளுக்காக பொதுமக்கள்‌ சொந்தமாகச்‌ செலவிடும்‌ தொகையைக்‌ குறைக்கும்‌ நோக்கில்‌, அரசு தாய்மாமன்‌ தங்க மோதிரம்‌ திட்டத்தை: செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, அரசு மருத்துவமனைகளில்‌ பிறக்கும்‌ அனைத்து குழந்தைகளுக்கும்‌, குழந்தையின்‌ பிறப்பைக்‌ கொண்டாடும்‌ வகையிலும்‌, தாய்மையின்‌ இன்பத்தையும்‌ முக்கியத்துவத்தையும்‌ போற்றும்‌ வகையிலும்‌, தாய்மாமனின்‌ அன்பளிப்பாக 1 கிராம்‌ தங்க மோதிரம்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 560 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.31 · ¶56 · full speech ↗ · on the map →

Nearby in the same sector