Welfare · recurring
Adi-Dravidar welfare hostels
First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2024-25. Places named: Madurai, Coimbatore, Tiruchirappalli, Chennai.
Allocated by budget year
Located at Madurai · Madurai district
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 30.62 crores
“In the current year ` 30.62 crores have been allocated, to construct new buildings for the hostels, and works are in progress. Since 2006-2007, construction of 131 hostels has been taken up at an outlay of ` 65.5 crores.”
“ஆதிதிராவிடர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ், ரூபாய் 227 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வரும் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக ரூபாய் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தற்போது 1,229 விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த ஆண்டு 84,886 மாணவ மாணவியர் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் விடுதிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக ரூபாய் 30.62 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2006-2007 ஆண்டிலிருந்து இதுவரை, ரூபாய் 65.5 கோடி செலவில் 131 விடுதிகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.36 · ¶92 · source PDF ↗ · on the map →
2012-13
“This Government proposes to take up the construction of own buildings for all Adi-dravidar welfare student hostels running in private buildings. The construction of 49 hostels has been taken up in the current financial year and the balance 44 hostels will be taken up in 2012-2013 under NABARD-RIDF.”
“தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் விடுதிகள் அனைத்திற்கும் சொந்த கட்டடங்கள் கட்ட அரசு உத்தேசித்துள்ளது. இந்த நிதியாண்டில் 49 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 44 விடுதிகளும் 2012-2013 ஆம் ஆண்டில் *நபார்டு' வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதி கடன் மூலம் கட்டப்படும். 1080 மாணவ-மாணவியர் விடுதிகளில் உள்ள இன்றியமையா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 83.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முன்முயற்சியாக, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் தரையில் படுத்துறங்குவதை முற்றிலும் தவிர்க்க, 2012-13 ஆம் ஆண்டில் கட்டில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶113) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.72 · ¶113 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.27 crore
“The Hon'ble Chief Minister has also announced the construction of own buildings for 54 Adi-Dravidar and Tribal Hostels. Out of these, sanctions have already been issued for 27 hostels at a cost of Rs.27 crore. The remaining 27 hostels will be taken up for construction during 2014-2015.”
“1300 ஆதிதிராவிடர் விடுதிகள் மற்றும் 42 பழங்குடியினர் விடுதிகள் மூலம் 100,021 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணச் சலுகை, பள்ளி மாணவர்களுக்கு 755 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 875 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 54 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததன் அடிப்படையில், 27 கோடி ரூபாய் செலவில் 27 விடுதிகளுக்கான கட்டடங்களை அமைப்பதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 27 விடுதிகளுக்கான கட்டடங்கள் 2014-2015 ஆம் ஆண்டில் அமைக்கப்படும். 2014-2015 ஆம் ஆண்டிற்கு விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவு வழங்கும் செலவிற்காக 107.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.61 · ¶123 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.27.48 crores
“for the balance 24 hostels functioning in private rental buildings, this Government will take up the construction of new hostel buildings at a total cost of Rs.27.48 crores, thereby ensuring that all hostels in the State will function in Government buildings.”
“தற்போது, ஆதிதிராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 98,039 மாணவ, மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்கு 1314 விடுதிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 2,782 மாணவ, மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்கு 42 பழங்குடியினர் விடுதிகளும், 30,933 மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயில்வதற்கு 306 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் விடுதிகளில், 81 விடுதிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 24 விடுதிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் 27.48 கோடி ரூபாய் செலவில் இந்த அரசால் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் அரசுக் கட்டடங்களில் இயங்கும் நிலை உறுதி செய்யப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அனைத்து விடுதிகளுக்கும் இட்லி குக்கர்-நீராவிக் கொதிகலன்கள் மற்றும் சலவை இயந்திரங்களை இந்த அரசு வழங்கும். இதன் மூலம், மற்றுமொரு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உணவு வழங்குவதற்கான தொகையாக 103.15 கோடி ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் விடுதிப் பராமரிப்புக்காகவும் 83.80 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.62 · ¶127 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.189 crore
“The Government will take up the construction of buildings for 24 more hostels at a cost of Rs.30.73 crore during 2017-2018. In the Budget Estimates 2017-2018, a sum of Rs.189 crore has been allocated for construction of buildings and Rs.120 crore has been allocated for food charges.”
“ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனைப் பேணி அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது, 98,539 மாணவ, மாணவியருடன் 1,324 ஆதி திராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ, மாணவியருடன் 42 பழங்குடியினர் நல விடுதிகளும் மற்றும் 31069 மாணவ, மாணவியருடன் 314 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் (Government Tribal Residential Schools) இயங்கி வருகின்றன. மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 875 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 755 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும். மேலும், அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக் கட்டடங்களை கட்டவும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக 30 விடுதிகள் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2017-2018 ஆம் ஆண்டில் 30.73 கோடி ரூபாய் செலவில் 24 கூடுதல் விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்டும் பணியை இந்த அரசு மேற்கொள்ளும். இதற்கென 2017-2018 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கட்டடங்கள் கட்டுவதற்காக 189 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக 120 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 121 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்குவதற்கென 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன் 4.92 இலட்சம் மாணவிகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டில் அரசு ஊக்க உதவித்தொகை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கென 2017-2018 ஆம் ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு 2.50 இலட்சம் ஆதி திராவிடர் மாணவ, மாணவிகள் மற்றும் 14,000 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கும் 2016-2017 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.65 · ¶120 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.46 crore
“Another 19 new hostel buildings will be constructed at a cost of Rs.46 crore in 2018-2019.”
“தற்போது, 98,539 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1324 ஆதி திராவிடர் விடுதிகளும், 2,782 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 42 பழங்குடியினர் நல விடுதிகளும், 27,652 மாணவ, மாணவியருடன் 314 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் (Government Tribal Residential Schools) மாநிலத்தில் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளிலும், விடுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய கட்டடங்களை அரசு கட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து, 2018-2019 ஆம் ஆண்டில், 46 கோடி ரூபாய் செலவில் 19 விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 755 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு 875 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், 2017-2018 ஆம் ஆண்டில் இந்த அரசு உயர்த்தி வழங்கியது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்ட 32.20 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக 118.48 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மூலதனக் கணக்கில் செலவுகள் மூலதனப் பணிகளுக்கான செலவை மேற்கொள்வதில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 24,298 கோடி ரூபாய், 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 28,283 கோடி ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுகளில் 15 சதவீதமாக மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் மதுபானக் கடைகளை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால், 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டதை விட குறைந்துள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி விகிதத்தில், குறிப்பாக வணிக வரிகள் மற்றும் மாநில ஆயத்தீர்வைகளின் கீழ் பெறப்படும் வரவுகளில், குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. எனவே, 2018-2019 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை, முறையே 17,491 கோடி ரூபாய் மற்றும் 44,481 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை விகிதம், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாக இருக்கும். இது, தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 3 சதவீதத்திற்கும் குறைவாகும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தியதால், சம்பளங்கள் மற்றும் ஒய்வூதியச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள 14,719 கோடி ரூபாய் கூடுதல் செலவினம், மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2019-2020 ஆம் ஆண்டில் 2.76 சதவீதமாகவும், 2020-2021 ஆம் ஆண்டில் 2.57 சதவீதமாகவும் இருக்கும். V. கடன்கள் பதினான்காவது நிதிக் குழு பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான, நிகரக் கடன் வரம்பு 47,888 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 43,962 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2019 அன்று, 3,55,845 கோடி ரூபாயாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதம் மட்டுமே ஆகும். VI. கடன் உத்திரவாதங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2017 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின் அளவு முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 22.59 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 2.24 சதவீதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.50 சதவீதம் இவற்றில் TH குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2017 அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 4.37 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.43 சதவீதமாகவும் உள்ளது. முடிவுரை மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் மெல்ல முன்னேறிச் செல்வதை, இடையில் தற்காலிகமான பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், 2012-2013 ஆம் ஆண்டில் 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதமானது நிலையான விலைகளின் அடிப்படையில்), 2017-2018 ஆம் ஆண்டில் 8.03 சதவீதமாக அதிகரித்துள்ளது தெளிவாக்குகிறது. வணிக வரிகள் மற்றும் மாநில ஆயத்தீர்வை ஆகியவற்றின் கீழ் பெறப்படும் வரவுகளில் குறைவு ஏற்பட்டதால், 2017-2018 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, வருவாய் வரவுகளில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்தது மற்றும் மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்ட பணிகளில் மாநில அரசின் பங்கு உயர்ந்தது ஆகியவை மாநில அரசின் நிதிநிலையை பாதித்துள்ளது. ஏழாவது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தியதால் சம்பளங்கள் மற்றும் ஒய்வூதியங்கள் உயர்த்தப்பட்டதைத் தவிர, இதரச் செலவுகளின் பாங்கு நிலையாக உள்ளது. இந்த சுணக்கமான சூழ்நிலையிலும், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகரக் கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் விகிதம் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும். மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து நிதி மேலாண்மையை வலுப்படுத்தும். KKEKKKKKKEKKKKEKKKKE”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.65 · ¶111 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.40 crore
“In 2019-2020, the Government will construct building for 20 hostels, for which Rs.40 crore has been allocated in the Budget Estimates 2019-2020.”
“ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் நீடித்த வளர்ச்சியையும், அவர்கள் கண்ணியத்தோடு வாழ்வதையும் உறுதிப்படுத்துவது இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும். அரசு, 129 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1682 விடுதிகளை நடத்தி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில், 23 அரசு விடுதிக் கட்டடங்கள் 26.63 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், 33.83 கோடி ரூபாய் செலவில் 29 புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 20 விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கு 40 கோடி ரூபாயை 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கல்லூரி மற்றும் பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் வழங்குவதற்காக, வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 103.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.69 · ¶124 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.100 crore
“four new hostels will be constructed with modern facilities in Madurai, Coimbatore, Tiruchirappalli and Nilgiris at an estimated total cost of Rs.100 crore. These hostels will be maintained and managed by engaging professional agencies.”
“சமூக நீதியையும், சமத்துவம் நோக்கிய வளர்ச்சியையும் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ள இந்த அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகின்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவின வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். 42, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் டுசவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி டசய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை ஏற்று, இத்துணைத் திட்டத்தின் செயல்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.19 · ¶41 · source PDF ↗ · on the map →
2024-25 Rs. 150 crore
“In order to enhance the enrolment of Adi Dravidar and Tribal communities in higher education and to provide them with modern accommodation facilities, five state-of-the-art student hostels are being constructed in Coimbatore, Madurai, Tiruchirapalli, Nilgiris and Chennai at a cost of Rs. 150 crore.”
“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும், அவர்களுக்கு நவின வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதிகளை வழங்கிடவும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிழறி மற்றும் சென்னையில், ஐந்து நவின மாணவர் விடுதிகள் கட்டும் பணிகள் 150 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை, தஞ்சாவூர், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கல்லூரி மாணவியர் விடுதிகளும், மதுரையில் கல்லூழி மாணவர் விடுதியும், மொத்தம் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு கட்டப்படும். இந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் பன்முகத் திறனை வளர்க்கும் விதமாக அவர்களுக்கென ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.63 · ¶137 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Girls' and boys' college hostels (Adi Dravidar and Tribal Welfare) · 2024-25
- runs alongside BC/MBC/DNC hostel construction · 2011-12 –2025-26
- part of Completion of 35 Adi Dravidar hostels · 2011-12
- runs alongside Enhanced hostel feeding charges (Adi-Dravidar/Tribal) · 2012-13 –2019-20
- runs alongside Upgradation of Adi-Dravidar hostel infrastructure · 2012-13 –2015-16
- part of 24 new hostels · 2017-18
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years