Transport · recurring
Coimbatore Metro Rail project
First announced in 2018-19 and named again in 4 later budgets, most recently 2025-26. Places named: Coimbatore, Avinashi, Sathyamangalam.
Allocated by budget year
Located at Coimbatore · Coimbatore district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2018-19
“The State Government has also initiated the process for preparation of Feasibility cum Detailed Project Report for the Metro Rail project in Coimbatore city.”
“சென்னை மாநகரப் போக்குவரத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் வரையிலான நீட்டிப்பு உட்பட மொத்த திட்டச் செலவான 22,828 கோடி ரூபாயில், இதுவரை 16,258.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் திட்டத்தின் பலனைக் கருத்திற்கொண்டு, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 107.55 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று மெட்ரோ இரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான திட்டம் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியை எதிர்நோக்கி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு, மத்திய அரசு விரைவில் தனது ஒப்புதலை வழங்கும் என நான் நம்புகிறேன். இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாநகருக்கான மெட்ரோ இரயில் திட்டத்தினைச் செயல்படுத்துவது தொடர்பான விரிவான சாத்தியக் கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 750 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும், 1000 கோடி ரூபாயை துணைக் கடனாகவும் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.39 · ¶64 · source PDF ↗ · on the map →
2021-22
“The establishment of a Metro Rail in Coimbatore will also be taken up at the earliest in consultation with the Union Government.”
“சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. என்பதை இந்த மன்றத்திற்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒன்றிய நிதி அமைச்சரின் வரவு-செலவுத் கிட்ட உரையில் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டவாறு, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு பங்கு மூலத்தனத்திற்கான விரைந்த முறையான ஒப்புதலை வழங்குமாறும் அதற்கு இணையான ஒன்றிய அரசின் பங்கினை விரைந்து வழங்குமாறும் ஒன்றிய அரசினை இந்த அரசு வலியுறுத்தும். மெட்ரோ இரயில் திட்டத்தின் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழித்தடத்திற்கான சேவைகள், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதாவது நான்கு ஆண்டுகளுக்குள் தொடங்கும். மெட்ரோ இரயில் திட்டத்தின் மொத்த இரண்டாம் கட்டமும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும், அதே நேரத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை, தாம்பரம் வழியாக விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிக்கும் பணியை இந்த அரசு விரைவாகத் தொடங்கும். மேலும், கோயம்புத்தூரில் மெட்ரோ இரயில் திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மதுரையில் மெட்ரோ இரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும். எரிசக்தி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.42 · ¶94 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.6,683 crore
“The DFR for establishing a Metro Rail in Coimbatore with 44 km in the first phase at a cost of Rs.6,683 crore has been prepared and is under examination.”
“மாண்புமிகு பிரதமர் அவர்கள் 9 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ இரயில் முதற்கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்துடன், மொத்தம் 54.1 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ இரயிலின் முதற்கட்ட திட்டம் தற்போது முழுமையாகச் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், 61843 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 118.90 கிலோமீட்டர் நீளத்திலான மூன்று வழித்தடங்கள் அடங்கிய, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிதியில், மத்திய அரசு தனது பங்கை வழங்கும் என்று மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் தனது வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன். இத்துடன் இத்திட்டத்திற்கான மொத்த நிதியாதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6,683 கோடி ரூபாய் மதிப்பீட்டில்) 44 கிலோமீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எரிசக்தி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.57 · ¶90 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.9,000 crore
“Keeping in view of the future growth potential of the City, the Government has decided to implement the Metro Rail project in Coimbatore city. The Metro Rail project will be implemented along Avinashi Road and Sathyamangalam Road at an estimated cost of Rs.9,000 crore.”
“கென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித் துறை என பல்தொழில்களின் இருப்பிடமாகவும் தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.41 · ¶100 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.10,740 crore
“The detailed project reports for a Metro Rail along Avinashi and Sathyamangalam road in Coimbatore, at a cost of Rs.10,740 crore,”
“கோவை மாநகறில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ காயில் திட்டத்திற்கென 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகறில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும் வகையில் 11368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ இரயில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶130) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.61 · ¶130 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.10,740 crore
“Detailed project reports for the metro rail projects on the Avinashi Road and Sathyamangalam Road routes in Coimbatore, estimated at Rs.10,740 crore”
“கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ இரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶151) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.67 · ¶151 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Chennai Metro Rail Phase-II · 2016-17 –2026-27
- runs alongside Chennai Metro extension (Airport to Kilambakkam) · 2021-22 –2026-27
- runs alongside Chennai Metro Rail Project · 2011-12 –2021-22
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years