Transport · recurring

Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP)

12 budgets named it 16 year span 53,389 ₹ crore allocated 34,014 ₹ crore whole-project cost AIADMK / DMK / TVK governments

First announced in 2011-12 and named again in 11 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2011-12 ` 1,450 crores continuation AIADMK · revised

“During 2011-2012, ` 1,450 crores is allotted under the Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) which will be used for taking up road widening, improvement, reconstruction of bridges and culverts etc.”
“மாநிலத்தின்‌ சீரான பொருளாதார வளர்ச்சிக்குத்‌ தரமான சாலைகளின்‌ இணைப்பு அவசியமாகும்‌. ஏற்கெனவே தெரிவித்தபடி அடுத்த மூன்றாண்டுகளில்‌ 2,400 கோடி ரூபாய்‌ செலவில்‌ 963 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளை இருவழிச்‌ சாலையாகவும்‌, 3,700 கி.மீ. மாவட்டச்‌ சாலைகளை இடை வழிச்‌ சாலையாகவும்‌ மாற்றுவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சாலைக்‌ கட்டமைப்புகளை வலுப்படுத்த கணிசமான அளவு நிதி தேவைப்படுவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, முக்கியமான சாலைப்‌ பணிகளை அமைத்து, பராமரித்து அரசுக்கு மாற்றம்‌ செய்யும்‌ முறையை (Build, Operate and Transfen தனியார்‌ பங்கேற்புடன்‌ இந்த அரசு செயல்படுத்தும்‌. உலக வங்கியின்‌ நிதி உதவியுடன்‌ தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டமாக 2,500 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை 5,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேம்படுத்தும்‌ பணியை இந்த அரசு மேற்கொள்ளும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ (Comprehensive Road Infrastructure Development Programme) 1450 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி, சாலைகளை விரிவுபடுத்துதல்‌, மேம்படுத்துதல்‌, பாலங்கள்‌, மதகுகளைப்‌ புனரமைத்தல்‌ போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 257 கோடி ரூபாய்‌ செலவில்‌ தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர்‌ வழியாக கன்னியாகுமரி வரை செல்லும்‌ கிழக்குக்‌ கடற்கரைச்‌ சாலையின்‌ மீதமுள்ள 113 கி.மீ. நீள சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.44 · ¶72 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 ` 1,450 crores continuation DMK · interim

“Further 11,219 Kms long roads have been upgraded under this scheme. For the year 2011-2012, ` 1,450 crores have been allocated for this scheme.”
“நெடுஞ்சாலைத்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள 61674 கிலோ மீட்டர்‌ சாலைகளில்‌, கடந்த 2006 முதல்‌ 2010 வரை ஒருங்கிணைந்த சாலைகள்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தில்‌ மட்டும்‌ 4,945 கிலோமீட்டர்‌ ஒருவழித்தடச்‌ சாலைகள்‌ இடைவெளி தடங்களாகவும்‌, 2,611 கிலோமீட்டர்‌ ஒருவழித்தடச்‌ சாலைகள்‌ இருவழித்‌ தடங்களாகவும்‌, 168 கிலோமீட்டர்‌ நீள இருவழித்தடச்‌ சாலைகள்‌ பலவழித்‌ தடங்களாகவும்‌ ஆக்கப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில்‌ அகலப்படுத்த இயலாத 32 கிலோமீட்டர்‌ தவிர, ஒருவழித்தடச்‌ சாலைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, 11219 கிலோமீட்டர்‌ சாலைகள்‌ மேம்படுத்தப்பட்டுள்ளன. 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்தின்‌ கீழ்‌ ரூபாய்‌ 1,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.27 · ¶66 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.2,032 crores continuation AIADMK

“Besides, 3,500 km of roads will also be further strengthened. An amount of Rs.2,032 crores has been allocated for the CRIDP in the Budget Estimates 2013-2014.”
“படிப்படியாக சாலைகளின்‌ தரத்தை உயர்த்தவும்‌, வலுப்படுத்தவும்‌ இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, 168 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள இடைவழித்தட (Intermediate lane) மாநில நெடுஞ்சாலைகள்‌ இருவழித்தட சாலைகளாகவும்‌, 1,000 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள ஒருவழித்தட முக்கிய மாவட்டச்‌ சாலைகள்‌, இடைவழித்‌ தடங்களாகவும்‌, ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, தரம்‌ உயர்த்தப்படும்‌. இதுமட்டுமன்றி, 3,500 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள சாலைகள்‌ மேலும்‌ வலுப்படுத்தப்படும்‌. 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌), ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்காக 2,032 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.31 · ¶76 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.2,800 crore continuation AIADMK

“the initial allocation of Rs.2,032 crore under the Comprehensive Road Infrastructure Development Project (CRIDP) has been stepped up to Rs.2,500 crore in the Revised Estimates. This has been further enhanced to Rs.2,800 crore in the Budget Estimates 2014-2015.”
“சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டிற்கு போதுமான நிதியை இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,032 கோடி ரூபாய்‌, திருத்திய மதிப்பீடுகளில்‌ 2,500 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இந்த ஒதுக்கீடு 2,800 கோடி ரூபாயாக மேலும்‌ உயர்த்தப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்தில்‌, 1500 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும்‌, 3,500 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.28 · ¶52 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.2,800 crores continuation AIADMK

“An allocation of Rs.2,800 crores is made for CRIDP in this Budget Estimates.”
“கடந்த நான்கு ஆண்டுகளில்‌ ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2,922 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள ஒரு வழித்தட முக்கிய மாவட்டச்‌ சாலைகளை 1481 கோடி ரூபாய்‌ செலவில்‌ இடைவழித்தட (Intermediate Lane) சாலைகளாகவும்‌, 810 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகளை 447.34 கோடி ரூபாய்‌ செலவில்‌ இருவழித்தடச்‌ சாலைகளாகவும்‌ அகலப்படுத்துவதற்கான பணிகள்‌, இந்த அரசால்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள்‌ மற்றும்‌ சரக்குப்‌ போக்குவரத்து சீராகச்‌ செல்ல ஏதுவாக, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ ஆயிரம்‌ கிலோ மீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும்‌, 4,000 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. வரும்‌ நிதியாண்டிற்கு ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நெடுஞ்சாலைத்துறைக்கு மொத்தமாக 8,228.24 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.32 · ¶50 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,800 crores continuation AIADMK · interim

“A sum of Rs.2,800 crores has been provided in this Interim Budget for CRIDP.”
“2011 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ முதல்‌, சாலைக்‌ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 14,841 கோடி ரூபாய்‌ செலவில்‌ பணிகளை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 5,935 கிலோ மீட்டர்‌ மாநில நெடுஞ்சாலைகளும்‌, 6,740 கிலோ மீட்டர்‌ முக்கிய மாவட்டச்‌ சாலைகளும்‌, 11879 கிலோ மீட்டர்‌ இதர மாவட்டச்‌ சாலைகளும்‌ அகலப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 2,800 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.29 · ¶40 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.3,100 crore continuation AIADMK

“During 2017-2018, widening of 1,000 km of roads, improvement of 3,000 km of roads and also 200 bridges / culverts will be taken up under the ‘Comprehensive Road Infrastructure Development Programme’ (CRIDP). A sum of Rs.3,100 crore has been allocated in the Budget Estimates 2017-2018 for this scheme.”
“ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌” (CRIDP) கீழ்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 1,000 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தும்‌ பணிகளையும்‌, 3,000 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளையும்‌, 200 பாலங்கள்‌ / சிறு பாலங்கள்‌ கட்டுவதற்கான பணிகளையும்‌ அரசு மேற்கொள்ளும்‌. இத்திட்டத்திற்காக, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 3,100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம்‌ (Performance Based Maintenance Contract) அடிப்படையில்‌, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ கோட்டங்களில்‌ உள்ள மாநில நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ மாவட்ட முக்கியச்‌ சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கும்‌ பணிகள்‌ 1774.31 கோடி ரூபாய்‌ திட்ட மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை விருதுநகர்‌ கோட்டத்திற்கும்‌ விரிவுபடுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.32 · ¶57 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.3,800 crore enhancement AIADMK

“Allocation under CRIDP has been substantially enhanced to Rs.3,800 crore in the Budget Estimates, considering the need for improving the quality of roads, by taking up renewal at regular intervals.”
“ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌” (CRIDP) கீழ்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 1,000 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தும்‌ பணிகளையும்‌, 4,000 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளையும்‌ இந்த அரசு மேற்கொள்ளும்‌. பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம்‌, திருவள்ளூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ கோட்டங்களில்‌ உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்திப்‌ பராமரிக்கும்‌ பணிகள்‌ செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த (Performance Based Maintenance Contract) முறையின்‌ கீழ்‌ ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப்‌ பராமரிப்பு முறை 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ பழனி கோட்டத்திற்கும்‌ நீட்டிக்கப்படும்‌. சாலைகளின்‌ தரத்தை மேம்படுத்துவதற்கான தேவைகளைக்‌ கருதியும்‌, சீரான கால இடைவெளியில்‌ சாலைகளைப்‌ பராமரிப்பதற்காகவும்‌, ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கான நிதி கணிசமாக உயர்த்தப்பட்டு, வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 3,800 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, வழக்கமான பராமரிப்புப்‌ பணிகளுக்காக, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 544 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.33 · ¶53 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.4,570.43 crore continuation AIADMK

“In 2018-2019, the allocation under CRIDP was substantially enhanced to Rs.4,165.23 crore and Rs.4,570.43 crore has been allocated for the year 2019-2020.”
“அரசின்‌ முன்னோடித்‌ திட்டங்களுள்‌ ஒன்றான, “ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌” (Comprehensive Road Infrastructure Development Programme), சாலைகள்‌, பாலங்கள்‌, சிறுபாலங்கள்‌ மற்றும்‌ சாலைப்‌ பாதுகாப்பு போன்ற பெரிய அளவிலான உட்கட்டமைப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ இதற்கான நிதி கணிசமாக உயர்த்தப்பட்டு 4,165.23 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்திற்கு 4,570.43 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.42 · ¶70 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.5,500 crore enhancement AIADMK

“The budget provision for CRIDP is being substantially enhanced to Rs.5,500 crore in 2020-21.”
“ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டம்‌' (CRIDP) மாநிலத்தின்‌ சாலை உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கான முன்னோடித்‌ திட்டம்‌ ஆகும்‌. இந்த அரசு 3,256 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல்‌, உறுதிப்படுத்துதல்‌ மற்றும்‌ மேம்பாடு செய்தல்‌ பணிக்கும்‌, 3,597 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளின்‌ ஒடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துதுல்‌ பணிக்கும்‌, 56 பாலங்கள்‌ மற்றும்‌ சிறுபாலங்களுக்கான கட்டுமானப்‌ பணிகளுக்கும்‌ 1,718 இதர பணிகளை மேற்கொள்வதற்கும்‌, 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ 452148 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, 'ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5,500 கோடி ரூபாயாக கணிசமாக உயர்த்தப்படுகின்றது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.56 · ¶97 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.5,421.41 crore continuation DMK · revised

“The Comprehensive Road Infrastructure Development Programme will be implemented with a budgetary allocation of Rs.5,421.41 crore for 2021-22.”
“மாநில நெடுஞ்சாலைத்துறையின்‌ கீழ்‌ உள்ள சாலை அமைப்பு, ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. இந்தத்‌ திட்டத்திற்கான வரவு-செலவுத்‌ திட்ட நிதி ஒதுக்கீடு 5,421.44 கோடி ரூபாய்‌. அடுத்த 10 ஆண்டுகளில்‌ மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன்‌ இணைக்கக்கூடிய 2,200 கி.மீ சாலைகளை 4 வழிச்‌ சாலைகளாகவும்‌, வட்ட தலைமையகத்தை இணைக்கும்‌ 6,700 கி.மீ ஒற்றை மற்றும்‌ இடைநிலை வழிச்‌ சாலைகளை இரட்டை வழி நெடுஞ்சாலைகளாக மேம்படுத்துவதே இந்த அரசின்‌ நோக்கம்‌. தற்போது புற வழிச்‌ சாலைகள்‌ இல்லாத 59 நகராட்சிகளுக்கு புற வழிச்‌ சாலைகள்‌ அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.39 · ¶89 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.5,300 crore continuation project cost AIADMK · interim

“In 2020-21, widening, strengthening and upgradation of 3,167.28 km of roads, improving riding quality of 3,220.60 km of roads and construction of 706 bridges and culverts has been sanctioned at a total cost of Rs.5,300 crore. Under CRIDP, so far since 2011-12, the Government has sanctioned schemes worth Rs.34,013.60 crore for widening, strengthening and upgrading 43,688.67 km of roads, improving the riding quality on 10,643.38 km and construction of 3,768 bridges and other works. In the Revised Estimates 2020-21, the provision for CRIDP has been enhanced to Rs.6,023.11 crore.”
“2004-05 ஆம்‌ ஆண்டில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌” மூலம்‌ (CRIDP) தமிழ்நாட்டில்‌ சாலை வலையமைப்பின்‌ தரம்‌ மேம்படுத்தப்பட்டதுடன்‌, பராமரிக்கப்பட்டு வருவதும்‌ உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 3,167.28 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல்‌, வலுப்படுத்துதல்‌ மற்றும்‌ மேம்படுத்துதல்‌ பணிகளுக்கும்‌, 3,220.60 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளின்‌ ஓடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும்‌, 706 பாலங்கள்‌ மற்றும்‌ சிறுபாலங்களுக்கான கட்டுமானப்‌ பணிகளுக்கும்‌ 5,300 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்ளது. 'ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌, 2011-12 ஆம்‌ ஆண்டிலிருந்து, இதுவரையில்‌ இந்த அரசு, 43,688.67 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல்‌, வலுப்படுத்துதல்‌ மற்றும்‌ மேம்படுத்துதல்‌ பணிகளுக்கும்‌, 10,643.38 கிலோமீட்டர்‌ நீளமுள்ள சாலைகளின்‌ ஒடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துதல்‌ பணிகளுக்கும்‌, 3,768 பாலங்கள்‌ மற்றும்‌ ஏனைய கட்டுமானப்‌ பணிகளுக்கும்‌ 34,013.60 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டின்‌ திருத்த மதிப்பீடுகளில்‌ இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 6,023.11 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.53 · ¶82 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.8,365 crore continuation DMK

“In the Budget Estimates 2024-25, a sum of Rs.8,365 crore under Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP), a sum of Rs.2,267 crore under Chennai Peripheral Ring Road Project and a sum of Rs.908 crore for Chennai-Kanyakumari Industrial Corridor Project have been allocated.”
“ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு (CRIDP) 8365 கோடி ரூபாயும்‌ டசன்னை எல்லைச்‌ சாலை திட்டத்திற்காக 2,267 கோடி ரூபாயும்‌ சென்னை - கன்னியாகுமரி தொழில்‌ வழித்தடத்‌ திட்டத்திற்கு 908 கோடி ரூபாயும்‌ இந்த வரவு-டசலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶168) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.77 · ¶168 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.9,300 crore continuation TVK · revised

“Under the Comprehensive Road Infrastructure Development Programme, a fund of Rs.9,300 crore has been allocated, covering the widening of state highways into four-lane roads, construction of bypass roads, road safety works, pedestrian overbridges, upgrading of panchayat and panchayat union roads into other district roads, bridges, and the riding quality improvement programme.”
“சாலை உட்கட்டமைப்பு, மாநிலத்தின்‌ போக்குவரத்து அமைப்பின்‌ முக்கிய அங்கமாக விளங்குகிறது. உலகத்தரம்‌ வாய்ந்த, நீடித்த, பாதுகாப்பான மற்றும்‌ நிலைத்தன்மை கொண்ட சாலை உட்கட்டமைப்பை வழங்குவது அரசின்‌ முன்னுரிமையாகும்‌. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 9,300 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச்‌ சாலைகளாக அகலப்படுத்துதல்‌, புறவழிச்‌ சாலைகள்‌ அமைத்தல்‌, சாலைப்‌ பாதுகாப்பு, நடைமேம்பாலம்‌, ஊராட்சி மற்றும்‌ ஊராட்சி ஒன்றியச்‌ சாலைகளை இதர மாவட்டச்‌ சாலைகளாகத்‌ தரம்‌ உயர்த்தல்‌, பாலங்கள்‌, ஓடுதள மேம்பாட்டுத்‌ திட்டம்‌ ஆகியவை அடங்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.57 · ¶114 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector