Transport · completed claimed
Diesel subsidy to State Transport Undertakings
First announced in 2014-15 and named again in 8 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2014-15 Rs.500 crore
“A sum of Rs.500 crore is being provided as diesel subsidy for the year 2014-2015.”
“தொடர்ந்து டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது, பெரும் அளவில் ஏழை எளியோருக்குச் சேவை ஆற்றிவரும் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் எரிபொருள் செலவினத்தை ஈடுசெய்ய மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மானியமாக 2013-2014 ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பங்கு மூலதன உதவியாகவும் 350 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டிற்கு டீசல் மானியமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶59) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.31 · ¶59 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.500 crores
“For the year 2015-2016, Rs.500 crores has been provided for diesel subsidy and Rs.480 crores as subsidy for free bus passes to students.”
“2012-2013 மற்றும் 2013-2014 ஆம் ஆண்டுகளில் அடிக்கடி டீசல் விலை உயர்த்தப்பட்டதும், அதிகரித்துவரும் சம்பளச் செலவினங்களும், இச்சுமையை பொதுமக்களின் மேல் சுமத்தக் கூடாது என்ற அரசின் முடிவும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையை மிகவும் பாதித்துள்ளன. லிட்டருக்கு 51.65 ரூபாய் என்ற தற்போதைய டீசல் விலையிலேயே அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தாம் இயக்கும் ஒவ்வொரு கிலோமீட்டர் பயணத்திற்கும் 4.05 ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால், 2012-2013 ஆம் ஆண்டில் 200 கோடி ரூபாயும், 2013-2014 ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாயும், 2014-2015 ஆம் ஆண்டில் 600 கோடி ரூபாயும் மானியமாக அளித்து, டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை போதிய அளவிற்கு மாநில அரசு ஈடுசெய்துள்ளது. மேலும், இந்நிறுவனங்களின் செயல் மூலதனத் தேவையை (working capital) நிறைவு செய்ய 2013-2014 ஆம் ஆண்டில் 350 கோடி ரூபாயையும் 2014-2015 ஆம் ஆண்டில் 353 கோடி ரூபாயையும் இந்த அரசு பங்கு மூலதன உதவியாக வழங்கியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு டீசல் மானியமாக 500 கோடி ரூபாயும், மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்துப் பயண மானியமாக 480 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.34 · ¶54 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,800 crores
“Rs.1,800 crores as Diesel Subsidy”
“மானியங்கள், பங்கு மூலதன உதவி, கடன்கள் போன்ற பல்வேறு நிதியுதவிகளை மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, மாணவ மாணவியர் பயணக் கட்டண மானியமாக 2,276 கோடி ரூபாயும், டீசல் மானியமாக 1800 கோடி ரூபாயும், பங்கு மூலதன உதவியாக 1190 கோடி ரூபாயும், கடனுதவியாக 1,015 கோடி ரூபாயும், ஆகமொத்தம் 6,281 கோடி ரூபாயை நிதியுதவியாக இந்த அரசு வழங்கியுள்ளது. இதுதவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக்கான வைப்பு நிதியத்திற்கு 110 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் போக்குவரத்துத் துறைக்கு 1590 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.33 · ¶48 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.200 crores
“During the current financial year, this Government has provided Rs.505.35 crores as Student Concession Subsidy and Rs.200 crores as Diesel Subsidy in the Budget.” tnbudget_2016-17_speech_en_revised · p.37 · ¶70 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2020-21 Rs.298 crore
“In 2020-21, a sum of Rs.298 crore has been provided in the Budget to compensate Transport Corporations for the hike in diesel prices.”
“உயர்தரமான பொதுப் போக்குவரத்து, பொது நன்மை அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, அதை செம்மையாக இயக்குவதற்கு அரசின் உதவி தேவை என்பதையும் நன்கு அறிந்துள்ளது. டீசல் விலை உயர்வினால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினை ஈடுசெய்ய 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 298 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தால், ஜனவரி 2020 வரை ஏற்பட்ட செலவினை ஈடு செய்ய 1050 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் நாள் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் பெற வேண்டிய ஒஓய்வுகாலப் பலன்களை வழங்கிட, 2019-20 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகியகாலக் கடனாக வழங்க 1093 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.60 · ¶106 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.750 crore
“Rs.750 crore has also been provided as diesel subsidy to insulate against diesel price increases.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். இந்த நோக்கத்திற்காக, 703 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 750 கோடி ரூபாய் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 623.59 கோடி ரூபாய் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.41 · ¶92 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2022-23 Rs.1,300 crore
“Rs.1,300 crore as diesel subsidy.” financedept_2022-23_speech_en · p.43 · ¶127 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.2,000 crore
“In the Budget Estimates, allocation of Rs.2,800 crore as subsidies towards free bus travel for women, Rs.1,500 crore as subsidy for student concession in bus fare and Rs.2,000 crore as diesel subsidy has been made.” financedept_2023-24_speech_en · p.40 · ¶96 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.1,800 crore
“In the Budget Estimates 2024-25, a sum of Rs.3,050 crore has been provided for free bus travel for women, Rs.1,521 crore for concessional travel of students and Rs.1,800 crore for diesel subsidy.”
“இந்த வரவு-டசலவுத் திட்டத்தில் மகளிருக்கான இவைசப் பேருந்துக் கட்டண மானியத்திற்காக 3,050 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1521 கோடி ரூபாய் மற்றும் டீசல் மானியத்திற்காக 1800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ காயில்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.60 · ¶128 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.1,857 crore
“a sum of Rs.1,857 crore has been allocated for diesel subsidy.” financedept_2025-26_speech_en · p.66 · ¶149 · source PDF ↗ · on the map →
Linked projects
- Financial assistance to State Transport Undertakings · component of
Nearby in the same sector
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Chennai Metro Rail Project · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years
- Road Safety Fund · 8 years