Welfare · dormant
Facility improvement in 1,080 Adi Dravidar hostels
3 budgets named it 10 year span 182 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 83.40 crores
“To improve the facilities in hostels, ```` 83.40 crores has already been sanctioned by this Government to take up work in 1,080 hostels.”
“ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1073 பள்ளிகளும், 1,294 விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2001-2002 முதல் 2007-2008 ஆம் ஆண்டு வரையில் ஏற்பளிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் கட்டுமானப்பணி முடிக்கப்படாமல் உள்ள 35 விடுதிக் கட்டடங்களை விரைவாக கட்டி முடிப்பதற்குக் கூடுதலாக 6.43 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 93 விடுதிகள் தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி இந்த 93 விடுதிகளுக்கும் கட்டடங்கள் கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் விடுதிகள் கட்ட 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,080 விடுதிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு 83.40 கோடி ரூபாய் ஏற்கெனவே அனுமதியளித்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.72 · ¶123 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17 Rs.83.80 crores
“In the Revised Budget Estimates 2016-2017, a sum of Rs.103.15 crores has been allocated for feeding charges and a sum of Rs.83.80 crores has been provided for improving infrastructure facilities and hostel maintenance.”
“தற்போது, ஆதிதிராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 98,039 மாணவ, மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்கு 1314 விடுதிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 2,782 மாணவ, மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்கு 42 பழங்குடியினர் விடுதிகளும், 30,933 மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயில்வதற்கு 306 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் விடுதிகளில், 81 விடுதிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 24 விடுதிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் 27.48 கோடி ரூபாய் செலவில் இந்த அரசால் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் அரசுக் கட்டடங்களில் இயங்கும் நிலை உறுதி செய்யப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அனைத்து விடுதிகளுக்கும் இட்லி குக்கர்-நீராவிக் கொதிகலன்கள் மற்றும் சலவை இயந்திரங்களை இந்த அரசு வழங்கும். இதன் மூலம், மற்றுமொரு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உணவு வழங்குவதற்கான தொகையாக 103.15 கோடி ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் விடுதிப் பராமரிப்புக்காகவும் 83.80 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.62 · ¶127 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2020-21 Rs.15 crore
“The allocation for maintenance of Adi-Dravidar hostels will be stepped up from Rs.6.89 crore to Rs.15 crore to ensure that the hostel buildings are well maintained.”
“ஆதி திராவிடர் மாணவர்களிடையே, கல்லூரி விடுதிகளுக்கான தேவை உயர்ந்து வருகிறது. ஆகையால், 2020-21 ஆம் ஆண்டில் 16.30 கோடி ரூபாய் மதிப்பில் 15 விடுதிகள், கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்படும் ஆதி திராவிடர் விடுதிகளின் பராமரிப்பிற்கான நிதி ஒதுக்கீடு 6.89 கோடி ரூபாயிலிருந்து 15 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் விடுதிகள் முறையாகப் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படும். நபார்டு வங்கி உதவியுடன், 106.29 கோடி ரூபாய் மொத்தச் செலவில், 223 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶165) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.91 · ¶165 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Completion of 35 Adi Dravidar hostels · 2011-12
- runs alongside Construction of 93 Adi Dravidar hostels · 2011-12
- runs alongside Enhanced hostel feeding charges (Adi-Dravidar/Tribal) · 2012-13 –2019-20
- runs alongside Adi-Dravidar hostels and school buildings · 2016-17
- runs alongside Upgrade of 15 Adi-Dravidar hostels into college hostels · 2020-21
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years